Latest Updates
-
காரசாரமான பன்னீர் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
தலைமுடி வறண்டு பிரஷ் மாதிரி இருக்கா? அப்ப இந்த வாழைப்பழ ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
ஆகஸ்ட் மாதம் நிகழும் ஆண்டின் 2-வது சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
வெண்டைக்காயை இப்படி கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடலினுள் என்ன நடக்கும்? - விளக்கும் டாக்டர்! -
சிம்ம ராசியில் இருக்கும் கேதுவால் டிசம்பர் மாதத்திற்குள் இந்த 4 ராசிக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்காம்.. -
ரவா அடையும், ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 31 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் மாதத்தில் உதயமாகும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு கடன் தொல்லை நீங்கி பண வரவு அதிகரிக்கும்! -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் கோதுமை ரவா பாசிப்பருப்பு பாயாசம் - எப்படி செய்யணும் தெரியுமா?
மீண்டும் பெரிய பாய்ச்சலுக்கு தயாராகிறதா தங்கம்? அமெரிக்காவோட ஒரு அறிவிப்புல தான் எல்லாமே இருக்கு!!
உலக அளவிலும் இந்திய அளவிலும் தங்கத்தின் விலை கடந்த அக்டோபர் மாதம் வரலாற்று உச்சத்தை எட்டியது. அதன் பிறகு தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்தது. நவம்பர் மற்றும் டிசம்பர் இந்த இரண்டு மாதத்திலும் தங்கத்தின் விலை பெரிய அளவில் உயரவில்லை, பெரிய அளவில் குறையவும் இல்லை. ஆனால் இனிவரும் நாட்களில் நிச்சயம் தங்கத்தின் விலை உயரும் என நிபுணர்கள் அடித்து கூறுகின்றனர்.
2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை படிப்படியாக உயர்ந்து வந்தது. ஆனால் வரலாற்றிலேயே இல்லாத அளவாக கடந்த அக்டோபர் மாதம் 17ஆம் தேதி இந்திய சந்தையில் 22 கேரட் ஆபரண தங்கம் 1 கிராம் 12,200 ரூபாய் என வரலாற்று உச்சத்தை எட்டியது , அதாவது ஒரு சவரன் தங்கம் 97,600 ரூபாயை நெருங்கியது . அந்த சமயத்தில் இந்தியாவிலும் தீபாவளி பண்டிகை இருந்ததால் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகரித்து விலையும் அதிகரித்தது.

ஆனால் அதன் பின்னர் தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து வந்தது . அக்டோபர் 28ஆம் தேதி தங்கத்தின் விலை ஒரு கிராம் 11.075 ரூபாய் என்றும் ஒரு சவரன் 88, 600 ரூபாய் என்றும் குறைந்தது . அதன் பிறகு தங்கத்தின் விலை பெரிய அளவில் ஏற்றம் காணவில்லை. நவம்பர் மாதம் முழுவதுமே ஒருநாள் விலை ஏறுவது, இரண்டு நாள் இறங்குவது என்ற நிலையிலேயே இருந்து வருகிறது. டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்தும் கூட தங்கத்தின் விலையில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை.
வெள்ளி விலை வரலாற்று உச்சம்.. கிலோவுக்கு 8000 ரூபாய் உயர்வு.. இதுக்கு மேல தாங்காது சாமி..!!
இன்றைய நாளை பொறுத்தவரை சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 30 ரூபாய் விலை உயர்ந்து 12,030 ரூபாய்க்கும் ஒரு சவரன் 240 விலை உயர்ந்து 96,240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது . தங்கத்தின் விலை இனிவரும் நாட்களில் எப்படி இருக்கும் என்பதை தீர்மானிக்க போவதாக அமெரிக்க மத்திய வங்கி வெளியிடக்கூடிய அறிவிப்பு இருக்க போகிறது.
அமெரிக்க பெடரல் வங்கியின் ஓபன் மார்க்கெட் கமிட்டி கூட்டம் டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கி இருக்கிறது. இன்றைய தினம் முடிவடைந்து இந்த கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளை அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் ஜெரோம் பாவெல் அறிவிக்க இருக்கிறார். இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு ஒரு மணி அளவில் இந்த அறிவிப்பு என்பது வெளியாக இருக்கிறது. அமெரிக்க மத்திய வங்கி தங்களுடைய வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்க வாய்ப்பு இருப்பதாக வலுவாக நம்பப்படுகிறது .
அமெரிக்க மத்திய வங்கி தன்னுடைய வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கிறது எனும் போது அது தங்கத்தின் விலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் . ஏற்கனவே வெள்ளியின் விலை வேகமாக உயர தொடங்கிவிட்டது. எனவே இத்தனை நாட்களாக அமைதியாக இருக்கும் தங்கமும் இனி வேகம் எடுக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஏனெனில் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை குறைக்கும் போது வங்கிகளில் செய்யப்பட்ட டெபாசிட்டுகள், பத்திரங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் குறைந்த லாபம் தருபவையாக மாறிவிடும். எனவே முதலீட்டாளர்கள் தங்களுடைய பணத்தை தங்கத்தின் பக்கம் தான் திருப்புவார்கள். இதன் காரணமாக தங்கத்தின் விலை நிச்சயம் உயரும் என நிபுணர்கள் கணிப்பு வெளியிடுகின்றனர்.
தங்க நகை வாங்கி பணத்தை வேஸ்ட் பண்ணாதீங்க!! ஷாக் கொடுக்கும் கோடக் அறிக்கை!!
அமெரிக்கா மத்திய வங்கி வட்டி குறைப்பு நடவடிக்கை மேற்கொண்டால் அது டாலரை வலுவிழக்கச் செய்யும் என்றும் அதுவும் தங்கத்தின் விலை உயர்வுக்கு ஒரு காரணமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது . செப்டம்பர் மாதம் மற்றும் அக்டோபர் மாதத்தில் அமெரிக்க மத்திய வங்கி வட்டி குறைப்பு அறிவிப்பை வெளியிட்ட போது சராசரியாக 3 முதல் 4% வரை தங்கம் விலை உயர்ந்தது. இந்த முறையும் தங்கம் விலை 3 முதல் 4% வரை உயரும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Credit: Goodreturns



Click it and Unblock the Notifications
