Latest Updates
-
ஆகஸ்ட் மாதம் நிகழும் ஆண்டின் 2-வது சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
வெண்டைக்காயை இப்படி கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடலினுள் என்ன நடக்கும்? - விளக்கும் டாக்டர்! -
சிம்ம ராசியில் இருக்கும் கேதுவால் டிசம்பர் மாதத்திற்குள் இந்த 4 ராசிக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்காம்.. -
ரவா அடையும், ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 31 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் மாதத்தில் உதயமாகும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு கடன் தொல்லை நீங்கி பண வரவு அதிகரிக்கும்! -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் கோதுமை ரவா பாசிப்பருப்பு பாயாசம் - எப்படி செய்யணும் தெரியுமா? -
தலைமுடி உதிர்வை தடுக்கணுமா? அப்ப நம்ம பாட்டிமார்கள் பின்பற்றிய இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க வாழ்வில் பிரச்சனை புயல் வீசப்போகுது..
2026ஆம் ஆண்டில் தங்கம் விலை ரூ.2 லட்சத்தை எட்டுமா? உலக தங்க கவுன்சில் தலைவர் பதில்!!
2025 ஆம் ஆண்டில் தங்கம் வரலாறு காணாத உச்சங்களை எல்லாம் தொட்டுவிட்டது. 2026 ஆம் ஆண்டிலும் இதே போல தங்கத்தின் விலை உயருமா என்பதுதான் பெரும்பாலான மக்களுக்கு இருக்கக்கூடிய கேள்வி . இந்தியாவைப் பொறுத்தவரை சில்லறை விற்பனையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 1 லட்சம் ரூபாயை கடந்துவிட்டது.
2026 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை எப்படி இருக்கும் , இதே போல பல மடங்கு விலை உயருமா என மக்களும் முதலீட்டாளர்களும் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில் உலக தங்க கவுன்சிலின் தலைமை செயல் அதிகாரியான டேவிட் டெயிட் 2026 ஆம் ஆண்டிலும் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாக தான் இருக்கும் என தெரிவித்திருக்கிறார்.

உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 6000 டாலர்கள் வரை எட்ட கூடும் என அவர் கூறுகிறார். தற்போது உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,333 டாலர்களாக இருக்கிறது இது 6 ,000 டாலர்கள் வரை எட்டும் என்பதுதான் அவருடைய கணிப்பு. ஒரு அவுன்ஸ் என்றால் 28 கிராம் ஆகும். இதை வைத்து கணக்கீடு செய்தால் 10 கிராம் தங்கம் 1.92 இலட்சமாக மாறும் என்பதே இவருடைய கணிப்பு .
தங்கத்தை அடுத்து வெள்ளிக்கும் செக் வைத்த சீனா!! இனி வெள்ளி விலை எகிறப் போகுது!!
இந்திய சந்தையில் 24 கேரட் தங்கத்தின் 10 கிராம் விலை தற்போது 1.35 லட்சம் ஆக இருக்கிறது. இது 1.92 லட்சம் வரை உயரும் என இவர் கூறுகிறார். உலகளவில் தங்கத்தின் விலையை உயர்த்துவதற்கான காரணிகள் அப்படியே வலுவாகவே இருக்கின்றன என கூறுகிறார் . தற்காலிக புவிசார் நிகழ்வுகளால் மட்டுமே தங்கம் விலை உயரவில்லை தங்க சந்தையில் ஒரு அடிப்படை கட்டமைப்பு ரீதியிலான ஒரு மாற்றமே நிகழ்ந்து கொண்டிருக்கிறது என அவர் சுட்டிக்காட்டுகிறார் .
உலக நாடுகளின் நாணயங்களின் மதிப்பு குறைந்து வருகிறது இது தங்கத்தின் விலையை உயர்த்தும் எனக் கூறுகிறார். அதே போல வர்த்தக மோதல்கள் தொடர்ந்து நீடிக்கின்றன அவை முடிவுக்கு வந்த பாடு இல்லை இதுவும் தங்கத்தின் விலையை உயர்த்தும் என்கிறார் .பங்குச் சந்தைகள் மீதும் பாரம்பரியமான நிதி அமைப்புகள் மீதும் ஒரு நம்பிக்கை இல்லாத தன்மை உருவாகி இருக்கிறது இதுவும் தங்கத்தின் விலையை உயர்த்தும் என்கிறார். பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்குவது தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏஐ முதல் ஏலியன்கள் வரை: 2026இல் என்னவெல்லாம் நடக்கும்? பாபா வாங்காவின் பகீர் கணிப்புகள்!!
செலவுகளை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் எல்லாம் அதிக கடன்களை குவித்து வைத்திருக்கின்றன . இதுவும் தங்கத்தின் விலை உயர்வதற்கு ஒரு அடிப்படை காரணம் என கூறுகிறார். பல்வேறு வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கூட 2026ஆம் ஆண்டில் தங்கம் விலை ஏறுமுகமாகவே இருக்கும் என்று தான் கணிப்பு வெளியிட்டுள்ளன.
Credit: Goodreturns



Click it and Unblock the Notifications
