Latest Updates
-
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
செட்டிநாடு பாகற்காய் சாம்பார் ரெசிபி - இந்த மாதிரி வைச்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட ஆசையா சாப்பிடுவாங்க -
இந்தியாவில் அதிக கட்டணம் வசூலிக்கும் டாப் 5 சுங்கச்சாவடிகள் என்னென்ன தெரியுமா? -
சத்தான மீல் மேக்கர் கட்லெட் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மொறுமொறுனு சாப்பிட சூப்பரா இருக்கும் -
ஆகஸ்ட் 05-ல் புதன் கடக ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தாபா ஸ்டைல் முட்டை பட்டாணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
Commonwealth Games 2026: காமன்வெல்த் போட்டிகளுக்கும், ஒலிம்பிக் போட்டிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன? -
பீர்க்கங்காய் தக்காளி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டும் நாளாக இருக்குமாம் -
56 ஆண்டுகளுக்கு பின் குரு பூர்ணிமா நாளில் உருவாகும் 3 ராஜயோகங்கள்: அதிர்ஷ்ட மழையில் நனையும் 3 ராசிகள்!
Jana Nayagan: விஜய் ரசிகர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்.. ஜனநாயகன் பஞ்சாயத்து ஓவராம்.. இந்த மாதமே ரிலீஸ்?
சென்னை: கேவிஎன் நிறுவனம் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் இந்த மாதமே திரைக்கு வரும் என லேட்டஸ்ட் தகவல்கள் கசிந்துள்ளன.
ஜன நாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் தராமல் இழுத்தடித்த நிலையில், படக்குழு நீதிமன்றத்தை நாடியது. ஆனால், வழக்கு விசாரணை பெரும் சுத்தலில் விடும் நிலையில், வழக்கை மேலும், தொடர்ந்தால் படம் தேர்தல் முடிவடைந்த பின்னர் தான் வெளியாகும் என்கிற பிரச்னை கிளம்பியது.

இந்நிலையில், வழக்கை வாபஸ் வாங்கிவிட்டு ரிவைசிங் கமிட்டியை சத்தமில்லாமல் ஜனநாயகன் படக்குழு அணுகியிருப்பதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், வெகு விரைவில் படம் வெளியாகும் என்கிற அப்டேட் தளபதி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்சார் பிரச்னை ஓவர்: ஜனநாயகன் படத்திற்கான சென்சார் பிரச்னை ஒருவழியாக முடிவுக்கு வந்து விட்டது என்றும் வழக்கை வாபஸ் வாங்கிவிட்டு ரிவைசிங் கமிட்டியை படக்குழு நாடியுள்ளதாக பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார். தயாரிப்பாளர் தனஞ்செயன் அளித்த பேட்டி ஒன்றிலும் ஜனநாயகன் கண்டிப்பாக இம்மாத இறுதியில் வெளியாகும் என உறுதியாக கூறியுள்ளார்.
ஜன நாயகன் ரிலீஸ் எப்போ?: விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 19ம் அல்லது 20ம் தேதி வெள்ளிக்கிழமை திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிவைசிங் கமிட்டியில் ராணுவ அதிகாரி ஒருவர் படத்தை பார்த்து ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றால் படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் ஒருவேளை அவர் ஆட்சேபனை தெரிவித்தால் அந்த காட்சிகள் நீக்கவோ அல்லது ப்ளர் செய்யப்படலாம் என்கின்றனர்.
தயாரிப்பு நிறுவனம் செம சைலண்ட்: ஜனநாயகன் வழக்கு விசாரணை என்ன ஆனது? என ரசிகர்கள் ஒரு பக்கம் தலையை பிய்த்துக் கொண்டிருக்க பெரும் தொகையை முதலீடாக போட்டுள்ள தயாரிப்பு நிறுவனம் செம சைலண்ட்டாக படத்தை ரிலீஸ் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாக கூறுகின்றனர். இதை முன்பே செய்திருந்தால் பொங்கலுக்கே ஜனநாயகன் வெளியாகி இருக்குமே என்றும் கோலிவுட்டில் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன. ஜனநாயகன் படத்துக்கு ஓரிரு நாளில் தணிக்கை சான்று வழங்கப்பட்டால் திட்டமிட்டபடி படத்தை பிப்ரவரி 20ம் தேதி கேவிஎன் நிறுவனம் ரிலீஸ் செய்து விடுவார்கள் என்கின்றனர்.
Credit: Filmibeat



Click it and Unblock the Notifications
