ரூ2500 கிடையாது, ரூ25,000 கட்டணம்! பழைய வண்டிய எல்லாம் இனி ஓட்டவே முடியாது போல!

By Balasubramanian Thirumalaiappan

இந்தியாவில் மோட்டார் வாகனங்களுக்கான ஃபிட்னஸ் சான்று பெறுவதற்கான பட்டணம் 10 மடங்கு உயர்ந்துள்ளது. இந்த கட்டணம் அனைத்து மாநிலங்களிலும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.வாகனத்தின் வயதிற்கு ஏற்ப கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் வாகனங்களுக்கான ஃபிட்னஸ் சான்று கோரி விண்ணப்பிப்பவர்களிடம் அதற்கான கட்டணம் வசூலிக்கப்பட்ட வருகிறது. இந்த கட்டணத்தை மத்திய அரசுதான் முடிவு செய்து வருகிறது. இந்நிலையில் இந்த கட்டணத்தை தற்போது பல மடங்கு மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதற்காக மோட்டார் வாகன சட்டத்தின் 5வது திருத்தத்தில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.


Vehicle Fitness Fee

இதற்கு முன்னர் 15 ஆண்டுகள் பழைய வாகனங்களுக்கு தான் பிட்னஸ் சான்று கட்டாயம் என்ற சட்டம் இருந்தது.தற்போது இது 10 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. பிட்னஸ் சான்று பெறும் வாகனங்கள் மொத்தம் 3 வகைககளாக பிரிக்கப்பட்டுள்ளது. 10-15 ஆண்டுகள் பழைய வாகனங்கள், 15-20 ஆண்டுகள் பழைய வாகனங்கள், 20 ஆண்டுகளுக்கும் அதிகமான வயது கொண்ட வாகனங்கள் என பிரிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மாற்றம் 2 வீலர், 3 வீலர், குவார்டி சைக்கில், இலகு ரக கார்கள், மிடியம் மற்றும் ஹெவி வாகனங்களுக்கு பொருந்தும். குறிப்பாக ஹெவி வாகனங்களுக்கு கான பிட்னஸ் சான்று கட்டணம் தான் அதகிமாகக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகள் பழைய வாகனங்களுக்க பிட்னஸ் சான்று கோரினால் அதற்கான கட்டணம் இதுவரை ரூ2500 ஆக இருந்தது. தற்போது 25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல மிடியம் ரக வாகனங்களுக்கான பிட்னஸ் கட்டணம் ரூ1800 ஆக இருந்தது ரூ20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


பிரைவேட் வாகனங்களுக்கான கட்டணத்தை பொருத்தவரை 20 ஆண்டுகள் பழைய இலக ரக வாகன்ஙகளுக்கு ரூ15,000 கட்டணமும், 3 வீலர்களுக்கு ரூ7000மும் கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது. அதே போல டூவீலர்களுக்கு ரூ600 கட்டணமாக இருந்தது தற்போது ரூ2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதே போல 15 ஆண்டுகள் பழைய வாகனங்களுக்கான பிட்னஸ் சான்று கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல முன்பு 15 ஆண்டுகள் பழைய வாகனங்களுக்கு மட்டுமே ஃபிட்னஸ் சான்று கட்டாயம் என்ற ரீதியில் சட்டம் இருந்தது தற்போது 10 ஆண்டுகள் பழைய வாகனங்களுக்கே ஃபிட்னஸ் சான்று கட்டாயம்என விதிமுறை மாற்றப்பட்டுள்ளது.

இந்த விதிமுறை புதிய வாகனங்களுக்கு மட்டுமல்ல ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பழைய வாகனங்களுக்கும் பொருந்தும். இந்தியாவில் பழைய வாகனங்களை பயன்படுத்துவதால் மாசு அதிக அளவில் ஏற்படுகிறது. இந்த மாசு வெளியேற்றத்தை கட்டுப்படுத்த இப்படியான விதிமுறைகளை அரசு கொண்டு வருகிறது. இதனால் மிகப்பெரிய அளவில் பழைய வாகனங்கள் பயன்பாட்டிலிருந்து வெளியேறும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது எந்த அளவிற்கு சாத்தியமாகும் என்பது தெரியவில்லை. பழைய வாகனங்களை விற்று புதிய வாகனம் வாங்கினால் லாபம் என்றால் தான் மக்கள் பழைய வாகனங்களை விற்பனை அல்லது ஸ்கிராப் செய்வார்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மாசு கட்டுப்பாட்டை குறைக்க வேண்டியது கட்டாயம் தான் ஆனால் அதற்காக அதற்கான ஃபிட்னஸ் சான்று கட்டணத்தை உயர்த்தினால் ஃபிட்னஸ் சான்றுஇல்லாமல்இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகிவிடும். இந்த வாகனங்களை மாற்றுவதற்கு மானியங்கள் மற்றும் புதிய வாகனங்களை வாங்குவதற்கு உதவி தொகை வழங்கினால் நிச்சயம் மாற்றம் ஏற்படும்.

Credit: Drivespark

Story first published: Wednesday, November 19, 2025, 14:10 [IST]
Desktop Bottom Promotion