Latest Updates
-
ஆடி பௌர்ணமியில் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு - எப்படி செய்யணும் தெரியுமா? -
World Hepatitis Day 2026: இந்த அறிகுறி இருந்தா அசால்ட்டா இருக்காதீங்க.. அது ஹெபடைடிஸின் எச்சரிக்கை அறிகுறி! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி நாளை முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கலாம்.. உஷார்.. -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க, ஒரே வாரத்தில் உடல் எடையில் மாற்றத்தை பாப்பீங்க..! -
இன்றைய ராசிபலன் 28 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு சோதனைகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
புதன் சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
பெங்காலி வெஜ் புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க -
கோவிலுக்குள் செல்வதற்கு முன் ஏன் செருப்பை அவசியம் கழட்ட வேண்டும் தெரியுமா? இதுல பல ரகசியம் இருக்கு
தங்கம் விலையை குறைக்க பட்ஜெட்டில் நடவடிக்கை எடுக்கப்படுமா? கோடிக்கணக்கான மக்கள் எதிர்பார்ப்பு!!
இந்தியாவில் சங்கத்தின் விலை நாள்தோறும் புதிய உச்சங்களை தொட்ட வண்ணம் இருக்கிறது. கடந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இந்தியாவில் தங்கத்தின் விலை மிக வேகமாக உயர்ந்து வருகிறது.
கடந்த டிசம்பர் மாதத்தில் சில்லறை வணிகத்தில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ஒரு லட்சம் ரூபாய் என்ற மைல் கல்லை கடந்தது. ஜனவரி மாத தொடக்கத்திலிருந்து தங்கத்தின் விலை ஒரு சவரன் 1 லட்சம் ரூபாய்க்கு மேலாகவே விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை குறைவதற்கான எந்த ஒரு அறிகுறியும் தென்படவில்லை.

உலக அரசியல் நிகழ்வுகளும், புவிசார் மோதல்களும் தங்கத்தின் விலையை தொடர்ந்து உச்சத்திலேயே வைத்திருக்கின்றன. இந்த சூழலில் தங்கம் விலையை குறைப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு சாமானிய மக்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்கத்திற்கான இறக்குமதி வரியை தடாலடியாக குறைத்தார். அதேபோன்ற ஒரு அறிவிப்பை எதிர் வரக்கூடிய பட்ஜெட்டிலும் அவர் வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்து இருக்கிறது.
2024ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரி என்பது 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இது உள்நாட்டில் தங்கத்தின் விலையை குறைப்பதற்கு மிகச்சிறந்த ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது. இந்த நிலையில் தற்போது தங்கம் விலை வரலாற்று உச்சத்தில் இருக்கிறது, ஒரு சவரன் விலை ஒரு லட்சம் ரூபாயை கடந்துவிட்டது என்பதால் தங்கம் விலையை குறைக்க இறக்குமதி வரியை அரசு குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
2030ஆம் ஆண்டில் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவாக இருக்கும்? உண்மையை போட்டுடைத்த நிபுணர்கள்!!
மத்திய அரசு வரும் பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரையில் ஆறு சதவீதத்திலிருந்து நான்காக குறைக்குமா என்ற என எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. மத்திய அரசு 6இல் இருந்து 4 சதவீதமாக தங்கத்திற்கான இறக்குமதி வரியை குறைக்கும் போது தங்கத்தை இறக்குமதி செய்வதற்காக நிறுவனங்கள் செலவிடும் பணம் குறையும். இது நேரடியாகவே தங்க நகைகள் மற்றும் நாணயங்கள் , தங்க கட்டிகளின் விலையில் சரிவை ஏற்படுத்தலாம்.
அமெரிக்காவை போல தம்பதிகளுக்கு கூட்டு வருமான வரி தாக்கலை கொண்டு வருகிறதா மத்திய அரசு?
அதாவது இரண்டு சதவீதம் வரை விலை குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. தங்கத்தின் இறக்குமதி வரியை குறைக்கும் போது முறைகேடாக தங்கம் கடத்தப்படுவது உள்ளிட்டவை குறையும். 2024 ஆம் ஆண்டு தங்கத்திற்கான இறக்குமதி வரியை குறைத்த போது உள்நாட்டில் தங்கத்தின் விலை 6% குறைந்தது, தங்கம் இறக்குமதி 47 சதவீதம் அதிகரித்தது. எனவே அதே போன்ற ஒரு நடவடிக்கையை மக்கள் இந்த பட்ஜெட்டிலும் எதிர்பார்க்கின்றனர்.
Credit: Goodreturns



Click it and Unblock the Notifications