Latest Updates
-
ரவா அடையும், ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 31 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் மாதத்தில் உதயமாகும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு கடன் தொல்லை நீங்கி பண வரவு அதிகரிக்கும்! -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் கோதுமை ரவா பாசிப்பருப்பு பாயாசம் - எப்படி செய்யணும் தெரியுமா? -
தலைமுடி உதிர்வை தடுக்கணுமா? அப்ப நம்ம பாட்டிமார்கள் பின்பற்றிய இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க வாழ்வில் பிரச்சனை புயல் வீசப்போகுது.. -
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்..
சரிந்து விழுந்த தளபதி விஜய்.. தளபதியை தள்ளி விட்டுட்டாங்கனு சொல்லும் பிரபலம்.. என்ன நடந்தது?
சென்னை: ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் பிரமாண்டமாக முடித்துவிட்டு, சென்னை திரும்பினார் தளபதி விஜய். கடந்த 26ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு மலேசியாவுக்கு சென்ற விஜய், 27ஆம் தேதி இசை வெளியீட்டு விழாவை முடித்துவிட்டு, நேற்று அதாவது 28ஆம் தேதி மீண்டும் சென்னை திரும்பினார். அப்போது, அவரை பார்ப்பதற்கு சென்னை விமான நிலையத்தில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
இப்படியான நிலையில் அவர் பாதுகாவலர்களின் துணையுடன் தனது காரை நோக்கி ஓடினார். அப்போது விஜய் சரிந்து கீழே விழுந்தார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இப்படி இருக்கும்போது நீல நிற சட்டை அணிந்த நபர் விஜயை தள்ளி விடுகிறார் என்று பிரபல விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ஜன நாயகன் படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படி இருக்கும்போது படத்தின் புரோமோஷன் வேலைகள் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இது மட்டும் இல்லாமல், படத்தின் இருந்து ரிலீஸ் செய்யப்பட்ட பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜன நாயகன் விஜயின் கடைசி படம் என்பதால், ரசிகர்கள் படத்தை பிரமாண்டமான வணிக வெற்றியை நோக்கி, நகர்த்த காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஜன நாயகன்: இப்படி இருக்கும்போது, நடிகர் விஜய், மலேசியாவில் நடைபெற்ற ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை முடித்துவிட்டு, சென்னைக்குத் திரும்பினார். விஜய் சென்னை விமான நிலையத்திற்கு வருகிறார் என்ற தகவலைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் அவரை பார்ப்பதற்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர். வார இறுதி நாள் என்பதால், சென்னை விமான நிலையம் வழக்கத்தைப் போல் கூட்டமாகத்தான் அலைமோதியது.
சரிந்து விழுந்த விஜய்: ரசிகர்கள் கூட்டம் அலைமோதியதால் விஜய் பாதுகாவலர்களின் துணையுடன் தனது காரை நோக்கி ஓடினார். அப்போது விஜய் சரிந்து கீழே விழுந்தார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இப்படி இருக்கும்போது நீல நிற சட்டை அணிந்த நபர் விஜயைத் தள்ளி விடுகிறார் என்று பிரபல விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி தெரிவித்துள்ளார். இவரது இந்த எக்ஸ் பக்க பதிவு ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.
யார் காரணம்?: வீடியோவை பார்க்கும்போது, விஜய் சரிந்து கீழே விழும் போது நீல நிற சட்டை அணிந்த நபரின் கை, விஜய்க்கு பின்னால் வருவது போல தெரிகிறது. ஆனால் அவர் விஜய்க்கு பக்கவாட்டில் வரும் நபர் மீது தனது கையை வைத்து தள்ளுகிறார். அவர் கையை எடுக்கும் போது விஜய் சரிந்து கீழே விழுவதால் விஜய் மீது கை வைத்து தள்ளியது போலத் தெரிகிறது. விஜய் சரிந்து விழந்தாரா? அல்லது அவரை பின்னால் இருந்து தள்ளி விட்டார்களா என்பது விஜய்க்கு மட்டுமே தெரியும். அதன் பின்னர் விஜய் அங்கிருந்து தனது காரில் புறப்பட்டுச் சென்றார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
Credit: Filmibeat



Click it and Unblock the Notifications