மொத்தமா மாறிய PhonePe ஆப்.. இனி 2 வகை பேமண்ட் தான்.. ரூ.5000 க்குள், ரூ.5000 க்கு மேல்.. இப்போ என்ன செய்யணும்?

By Muthuraj

இந்திய மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் யுபிஐ ஆப்களில் (UPI Apps) ஒன்றான போன்பே ஆப்பில் (PhonePe App) ரூ.5000 க்குள் மற்றும் ரூ.5000 க்குள் மேல் என்கிற வரம்பை கொண்ட ஒரு புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மாற்றம் பணம் அனுப்ப, பேங்க் அக்கவுண்ட்டில் உள்ள பேலன்ஸ்-ஐ செக் செய்வதிலும் முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

ரூ.5000 க்குள்: போன்பே ஆப்பில் யுபிஐ கட்டணங்களுக்கான பயோமெட்ரிக் அங்கீகாரம் (Biometric authentication) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியின் மூலம் போன்பே பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (Fingerprint scanner) அல்லது பேஷியல் ரிக்கனைசேஷன் (Facial recognition) ஆதரவை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனைகளை அங்கீகரிக்க முடியும்.


phonepe-app-biometric-payment-feature-how-to-turn-on-and-pay-using-finger-print-face-recognition

அதாவது "வழக்கமான"யுபிஐ பின் நம்பரை உள்ளிடமால், பொது வெளிகளில் மிகவும் பாதுகாப்பான முறையில் பணம் அனுப்பலாம். ஆனால் இந்த வசதி ரூ.5,000 என்கிற லிமிட் (Rs.5000 Limit) உடன் வருகிறது. அதாவது இது ரூ.5000 க்குள் என்கிற வரம்பின் கீழ் உள்ள பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே, போன்பே ஆப் ஆனது மிகவும் வேகமான "ஒன்-டச்" கட்டண அனுபவத்தை (One-touch payment experience) செயல்படுத்தும்.

ரூ.5000 க்கு மேல்: போன்பே ஆப்பிற்கு வந்துள்ள இந்த பயோமெட்ரிக் அங்கீகாரம் ஆனது ரூ.5000 க்குள் என்கிற வரம்பின் கீழ் மட்டுமே செயல்படும். இந்த வரம்பிற்கு மேல் உள்ள பரிவர்த்தனைகளுக்கு, அதாவது ரூ.5000 க்கு மேல் என்கிற பணப் பரிவர்த்தனைகளுக்கு போன்பே பயனர்கள் இன்னுமும் தங்கள் யுபிஐ பின் நம்பரை உள்ளிட வேண்டியிருக்கும்.

ரூ.5000 க்குள் என்கிற லிமிட்டை கொண்ட பயோமெட்ரிக் அங்கீகார வசதியை எங்கெல்லாம், எதில் எல்லாம் பயன்படுத்தலாம்? இந்த வசதி "பெரும்பாலான" தினசரி கட்டண பயன்பாட்டு நிகழ்வுகளில் செயல்படும். நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு மற்றும் குடும்பத்தினருக்கு பணம் அனுப்பும் போது, கடைகளில் க்யூஆர் கோட்களை (QR Code) ஸ்கேன் செய்யும் போது,ஆன்லைன் வழியாக பணம் செலுத்தும் போது, பேங்க் பேலன்ஸை செக் செய்யும் போது!

போன்பே ஆப்பில் உள்ள பயோமெட்ரிக் பேமண்ட் ஆப்ஷனை எனேபிள் (ஆன்) செய்வது எப்படி? முதலில் உங்கள் ஸ்மார்போனில் உள்ள போன்பே ஆப்பை திறக்கவும், ப்ரொபைல்-க்கு (Profile) செல்லவும், அங்கே மேனேஜ் பேமண்ட்ஸ் (Manage Payments) என்கிற ஆப்ஷனை கிளிக் செய்யவம்

பின்னர் பயோமெட்ரிக் பே (Biometric Pay) என்கிற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும். இப்போது உங்கள் வங்கி கணக்கிற்கான பயோமெட்ரிக் அங்கீகாரத்தை இயக்கவும். கடைசியாக உங்கள் யுபிஐ பின் மற்றும் பயோமெட்ரிக் சரிபார்ப்பை பயன்படுத்தி ஒன்-டைம் செட்டப்பை (One-time setup) முடிக்கவும். இந்த வசதி - ஃபிங்கர் பிரிண்ட் மற்றும் ஃபேஸ் ரிக்கனைசேஷன் ஆதரவுடன் வரும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கிடைக்கிறது. விரைவில் ஐஓஎஸ்-க்கும் (iOS) விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VERDICT: டிவைஸ் அளவிலான பயோமெட்ரிக் சரிபார்ப்பை பயன்படுத்துவதன் மூலம், போன்பே ஆப் ஆனது யுபிஐ பின் நம்பரை கைமுறையாக டைப் செய்ய வேண்டிய அவசியத்தை நீக்குகிறது. இது நெரிசலான இடங்களில், யாராவது உங்கள் யுபிஐ பின் நம்பரை பார்க்கும் அபாயத்தை முற்றிலுமாக குறைக்கிறது.

மேலும் இது, போன்பே பயனர்களின் வசதி மற்றும் பாதுகாப்பு ஆகிய இரண்டையும் மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. இது பேமண்ட் நேரத்தை மிச்சப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தவறான அல்லது மறக்கப்பட்ட பின் நம்பர் உள்ளீடுகளால் ஏற்படும் பரிவர்த்தனை தோல்விகளையும் நிச்சயம் குறைக்கும். ஒருவேளை மோசமான வெளிச்சம் அல்லது சென்சார் பிழைகள் போன்ற சிக்கல்கள் காரணமாக போன்பே ஆப்பில் உள்ள பயோமெட்ரிக் அங்கீகாரம் வேலை செய்யவில்லை என்றால், பயனர்கள் உடனடியாக தங்களுடைய யுபிஐ பின் விருப்பத்திற்கு மாறலாம்.

Credit: Gizbot

Story first published: Thursday, March 5, 2026, 10:07 [IST]
Desktop Bottom Promotion