சென்னையில் தடாலடியாக குறைந்த தங்கம் விலை!! இப்போது தங்கம் வாங்கலாமா? அல்லது காத்திருக்கலாமா?

By Devika Manivannan

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. தீபாவளிக்கு முன்பு வரை தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வந்தது . பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் அதிக அளவில் தங்கத்தை வாங்கியது, அமெரிக்கா அரசின் வர்த்தக மோதல்கள் , இந்தியாவில் பண்டிகையை முன்னிட்டு தங்கம் விலை உயர்ந்தது ஆகியவைடே தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக சொல்லப்பட்டது.

கடந்த அக்டோபர் 17ஆம் தேதி அன்று இதுவரை இல்லாத அளவாக வரலாற்று உச்சமாக சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 12,200 ரூபாய் என்றும் ஒரு சவரன் 97,600 ரூபாயையும் எட்டியது. தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாயை நெருங்கியதை அடுத்து சாமானிய மக்கள் கலக்கமடைந்தனர். சென்னையில் ஒரு நாளைக்கு இரண்டு முறை தங்கத்தின் விலை என்பது உயர்வு கண்டது.


Gold silver investment

இத்தகைய சூழலில் தான் அக்டோபர் 18ஆம் தேதியிலிருந்து தங்கத்தின் விலை படிப்படியாக சரிவடைந்து வருகிறது. அக்டோபர் 28ஆம் தேதி அன்று ஒரு கிராம் தங்கம் 11,075 ரூபாய் என பெரிய அளவில் சரிவை கண்டது. அதாவது ஒரு பவுன் தங்கம் 88 , 600 ரூபாய் என விலை குறைந்தது . இதனை அடுத்து தொடர்ந்து தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது .

பெரிய வீழ்ச்சி தொடங்கிவிட்டது: தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் மட்டுமே பிழைப்பார்கள்!!

இன்றைய தினம் சென்னையில் தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது. 22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு 70 ரூபாய் விலை குறைந்துள்ளது. நேற்று 11,250 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் தங்கம் இன்று 11,180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல சவரனுக்கு 560 ரூபாய் விலை குறைவு கண்டுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் நேற்று 90,000 ரூபாய்க்கு விற்ற நிலையில் இன்று 89, ,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது .

24 கேரட் தங்கம் இன்று கிராமுக்கு 76 ரூபாய் விலை குறைந்து ஒரு கிராம் 12,197 ரூபாய்க்கு விற்கப்படுகிறது . ஒரு சவரன் தங்கம் 608 ரூபாய் விலை குறைந்து 97,576 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 18 கேரட் தங்கமும் விலை சரிவை சந்தித்துள்ளது. ஒரு கிராம் 9,325 ரூபாய்க்கும், ஒரு சவரன் 74,600 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

தங்கத்துக்காக தான் அடுத்த உலகப் போர்!! – சீனாவின் தந்திரத்தை புட்டு புட்டு வைக்கும் ஆய்வாளர்கள்!!

வெள்ளியை பொறுத்தவரை இன்று ஒரு கிராம் 2 ரூபாய் விலை சரிந்து 163 ரூபாய்க்கு விற்பனையாகிறது, ஒரு கிலோ வெள்ளி 3000 ரூபாய் சரிந்து 1,63,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி அதன் வரலாற்று உச்சத்தில் இருந்து கிராமுக்கு 44 ரூபாயும் கிலோவுக்கு 44,000 ரூபாயும் குறைந்துள்ளது.

Credit: Goodreturns

Story first published: Wednesday, November 5, 2025, 10:00 [IST]
Desktop Bottom Promotion