தங்கம் விலையில் திடீர் சரிவு.. நிபுணர்கள் சொல்லும் டிவிஸ்ட் இதுதானா..? அடுத்த 10 நாளில் என்ன நடக்கும்..?

By Prasanna Venkatesh

தங்கம் விலை வெள்ளிக்கிழமை காலை வர்த்தகத்தில் சிறிய அளவில் குறைந்துள்ளது. இந்த சரிவுக்கு அமெரிக்காவில் எதிர்பார்த்ததை விட பணவீக்கம் குறைவான அளவில் பதிவான காரணத்தால் தங்கத்தின் தேவை குறைந்து அதன் விலை குறைந்ததுள்ளது. மறுமனையில் டாலர் மதிப்பு உயர்ந்த காரணத்தாலும் தங்கம் விலை குறைய துவங்கியது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், திடீரென குறைந்துள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் விவாதமாக மாறியுள்ளது. குறிப்பாக பொருளாதார நிபுணர்கள் தொடர்ந்து தங்கம், வெள்ளி விலை குறையும் என எச்சரிக்கை விடுத்து வந்த நிலையில், இந்த சரிவு அதன் துவக்க பாதையா என்ற கேள்வி எழுந்துள்ளது.


gold price drop december 2025 us inflation data gold impact gold dollar strength pressure silver 125 gain 2025 goldman sachs gold forecast 4900 gold price today mc x december 2025 gold dip us inflation low gold strong dollar effect silver all time high december goldman sachs gold 4900 oz 2026 gold weekly gain despite dip silver ytd 125 rise gold rate gold rate today gold rate today in Chennai gold rate in Chennai gold price in Chennai gold rate news in tamil Gold silver investment savings today gold rate gold rate today today gold rate in chennai today gold rate in tamil gold rate today gold rate today tamil today gold rate tamil gold rate gold rate today 1 gram today gold rate in chennai grt 22 carat 1 gram gold rate today gold rate today chennai today gold rate in chennai 22 carat today gold rate chennai tamil gold rate tamil 8 gram gold rate today indraya gold rate 916 gold rate today today gold rate in chennai 916 grt gold rate today chennai today gold rate in chennai grt gold rate today in tamil 22kt gold rate today 1 gram gold rate today in chennai today gold rate in chennai in tamil grt gold rate today gold price today today gold rate chennai gold rate in tamil today gold rate 22 carat today gold rate madurai 916 kdm today gold rate gold rate today 22k today gold rate chennai in tamil 1 916 1 916 916 916 22 916 916 1 1

தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்ட உள்ள சிறு சிறு சரிவும் இந்திய மக்களுக்கு சாதகமான வாய்ப்பாக விளங்குகிறது. ஆனால் தற்போது டாலர் மதிப்பு உயரும் காரணத்தால் இந்தியாவில் தங்கம் விலை சரிவின் முழு பலன் கிடைக்காமல் உள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்படும் மாற்றத்தை கூர்ந்து கவனித்தால் முதலீட்டுக்கு சரியான வாய்ப்பு கிடைக்கும்.

தங்கம் விலை:
இன்று MCX சந்தையில் தங்கம் விலை காலை வர்த்தக தொடக்கத்தில் 10 கிராமுக்கு ரூ.494 குறைந்து ரூ.1,34,027ஆக தொடங்கியது. சர்வதேச ஸ்பாட் தங்கம் விலை 0.3 சதவீதம் குறைந்து அவுன்ஸுக்கு 4,318.19 டாலராக குறைந்தது, இதேபோல் அமெரிக்க ஃப்யூச்சர்ஸ் 0.4 சதவீதம் குறைந்து 4,346.60 டாலருக்கு வர்த்தகமானது. ஆனாலும் இந்த வாராத்தில் மொத்தமாக 0.4 சதவீதம் உயர்வு உள்ளது.

வெள்ளி விலை:
வெள்ளி விலையும் இன்றைய வர்த்தகத்தில் சற்று குறைந்துள்ளது. ஸ்பாட் வெள்ளி 0.5 சதவீதம் குறைந்து அவுன்ஸுக்கு 65.10 டாலராக உள்ளது. MCXயில் கிலோவுக்கு ரூ.117 குறைந்து ரூ.2,03,448ஆக தொடங்கியது. ஆனாலும் வார அடிப்படையில் வெள்ளி விலை 5 சதவீதம் உயர்வுடன் உள்ளது. இதேபோல் இந்த ஆண்டு மட்டும் வெள்ளி விலை 125 சதவீதம் உயர்ந்துள்ளது. இது தங்கத்தை விட அதிகம்.

சென்னை ரீடைல் சந்தை:
இன்று சென்னை ரீடைல் சந்தை வர்த்தகத்தில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 600 ரூபாய் உயர்ந்து 1,23,800 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 650 ரூபாய் உயர்ந்து 1,35,060 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 520 ரூபாய் உயர்ந்து 1,08,048 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு 3000 ரூபாய் குறைந்து 2,21,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 1530 ரூபாய் குறைந்து 55,350 ரூபாயாக உள்ளது.

அமெரிக்க பணவீக்கம்:
அமெரிக்க பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 2.7 சதவீதமாக பாதிவாகி எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்தது. இதனால் தங்கத்தின் தேவை முதலீட்டு சந்தையில் குறைந்தது, இதேவேளையில் ஏற்கனவே தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்தவர்கள் அதை விற்கவும் துவங்கியுள்ளனர். இதேவேளையில் டாலர் இன்டெக்ஸ்-ம் ஒரு வார உச்சத்தை நெருங்கியது.

டாலர் மதிப்பு உறுதியாக இருப்பதால் வேறு நாணயத்தில் தங்கத்தை வாங்குபவர்களுக்கு அதிக தொகை கொடுக்க வேண்டியிருக்கும், இதனால் சர்வதேச சந்தையில் பதிவாகும் சரிவு முழுமையாக இந்திய சந்தைக்கு கடத்த முடியாது என்பதே இதன் பிரச்சனை. தங்கம் விலை இந்த ஆண்டு 65 சதவீதம் உயர்ந்திருக்கும் வேளையில் இன்றைய சரிவு சிறிய திருத்தமாக உள்ளது.

கோல்ட்மேன் சாக்ஸ் கணிப்பு
கோல்ட்மேன் சாக்ஸ் அறிக்கையின்படி 2026 டிசம்பருக்குள் தங்கம் விலை ஒரு அவுன்ஸுக்கு 4,900 டாலராக உயரலாம் என்று கணிக்கிறது. இது தற்போதைய 4,318.19 டாலர் அளவை காட்டிலும் 13- 14 சதவீத உயர்வு.

Credit: Goodreturns

Story first published: Friday, December 19, 2025, 11:15 [IST]
Desktop Bottom Promotion