Latest Updates
-
ஆந்திரா முட்டை புலுசு ரெசிபி... இதை ஒருதடவை செஞ்சு பாருங்க... சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும்...! -
புதன் நேரடி இயக்கத்தை தொடங்குவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
காரசாரமான கேரளா ஸ்டைல் ஈஸி பெப்பர் சிக்கன் ரெசிபி... இப்படி செஞ்சு பாருங்க... வேற லெவல் சைடிஷா இருக்கும்...! -
கள்ளக்காதலில் ஈடுபட அதிக வாய்ப்புள்ள 4 ராசிகள் இவங்கதான்... இவங்ககிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருங்க...! -
காரசாரமான.. ஹைதராபாதி சிக்கன் கிரேவி - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நல்ல நேரம் தேடிவருமாம்...! -
வார ராசிபலன் (22 March 2026-28 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கும்.. -
Tamil Nadu Election 2026: பாரம்பரிய தமிழ் உணவுகளை உட்கொள்ளும் தமிழகத் தலைவர்கள்! -
முட்டையும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
கோடையில் எப்பவும் பளிச்சுன்னு பிரகாசமா தெரியணுமா? அப்ப பப்பாளியை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
Gold Price today: தங்கம் விலை தடாலடி சரிவு.. நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. இன்றைய ரேட் என்ன?
சென்னை: கடந்த சில நாட்களாக தங்கம் விலை (Gold Price) ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக சரிந்துள்ளது. எங்கே ஒரு சவரன் ரூ.1 லட்சத்துக்கு சென்றுவிடுமோ என அச்சத்தோடு இருந்து வந்த நகைபிரியர்கள் சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் இன்று மட்டும் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.800 குறைந்து ரூ.90 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது.
தங்கம் விலை ஏற்ற இறக்கமாக கடந்த சில நாட்களாக இருந்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் வரலாறு காணாத உச்சத்தை தொட்டது தங்கம் விலை. அக்டோபர் 17-ம் தேதி ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 200-க்கும், ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்து 600-க்கும் தங்க நகை விற்பனை ஆனது.

தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை
தினமும் காலை, பிற்பகல் என இருவேளைகளிலும் தாறுமாறாக உயர்ந்து வந்தது. ஜெட் வேகத்தில் தங்கம் விலை எகிறியதால் சில நாட்களில் தங்கம் விலை ஒரு லட்சத்தை தாண்டிவிடும் என கதி கலங்கியிருந்தனர் நகை பிரியர்கள். ஆனால், நகை பிரியர்கள் சற்று ஆறுதல் அடையும் வகையில் அடுத்தடுத்த நாட்களில் தங்கம் விலை சரிய தொடங்கியது.
அமெரிக்க டாலர் வலுவடைய தொடங்கியதால், முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வதை குறைக்க தொடங்கியது உள்பட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை சரிய தொடங்கியதாக சந்தை நிபுணர்கள் கூறினர். அதன்படியே தங்கம் விலை மளமளவென சரிந்து 90 ஆயிரத்திற்கும் கீழ் வந்தது.
மீண்டும் ஏமாற்றம்
கடந்த மாதம் 28-ம் தேதி ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.88,600க்கு விற்பனையானது. தங்கம் விலை மேலும் சரியும் என எதிர்பார்த்து காத்திருந்த நகை பிரியர்களுக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது. அதன்பிறகு விலை 90 ஆயிரத்தை எட்டியது. தற்போது விலை ஏற்ற இறக்கமாக நீடித்து வருகிறதே தவிர தடாலடியாக குறையவில்லை.
இதனால் விலை மேலும் குறையும் தங்க நகைகள் வாங்கலாம் என காத்திருந்தவர்கள் ஏமாற்றமும் அதிர்ச்சியும் அடைந்தனர். வாரத்தின் முதல் நாளான நேற்று சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது. அதன்படி ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 350க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை சரிந்தது
அதே சமயம் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்து 800க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது திருமண சீசன் களைகட்டியுள்ள சூழலில் தங்கம் விலை இன்று சரியுமா என்ற எதிர்பார்ப்பு நகை பிரியர்கள் மத்தியில் அதிகரித்து இருந்தது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை சரிந்துள்ளது.
இன்றைய ரேட் என்ன?
நேற்று விலை உயர்ந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. இதன்படி இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் தங்கம் விலை சென்னையில் இன்று ரூ.90,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று ஒரு கிராம் தங்கம் விலை இன்று ரூ.100 குறைந்து ரூ.11,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது.
சென்னையில் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.3 குறைந்து, ரூ.165-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த வந்த நிலையில் இன்று குறைந்திருப்பது நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களின் தங்கம் விலை நிலவரம்:
04.11.2025 - ஒரு சவரன் ரூ.90,000 (இன்று)
03.11.2025- ஒரு சவரன் ரூ.90,800 (நேற்று)
02.11.2025- ஒரு சவரன் ரூ.90,480
01.11.2025- ஒரு சவரன் ரூ.90,480
31.10.2025- ஒரு சவரன் ரூ.90,400
30.10.2025- ஒரு சவரன் ரூ.90,400
29.10.2025- ஒரு சவரன் ரூ.90,600
28.10.2025- ஒரு சவரன் ரூ.88,600
27.10.2025- ஒரு சவரன் ரூ.91,600
26.10.2025- ஒரு சவரன்: ரூ.92,000
25.10.2025- ஒரு சவரன்: ரூ.92,000
22.10.2025- ஒரு சவரன் ரூ.92,000
21.10.2025 - ஒரு சவரன் ரூ.92,320
21.10.2025 - ஒரு சவரன் ரூ.93,600
20.10.2025- ஒரு சவரன் ரூ.96,000
19.10.2025 - ஒரு சவரன் ரூ.95,360
18.10.2025 - ஒரு சவரன் ரூ.96,000
17.10.2025- ஒரு சவரன் ரூ.97,600
16.10.2025 - ஒரு சவரன் ரூ.95,200
15.10.2025 - ஒரு சவரன் ரூ.94,880
14.10.2025 - ஒரு சவரன் ரூ.94,600
13.10.2025 - ஒரு சவரன் ரூ.92,640
13.10.2025 - ஒரு சவரன் ரூ.92,200
12.10.2025 - ஒரு சவரன் ரூ.92,000
11.10.2025 - ஒரு சவரன் ரூ.92,000
11.10.2025 - ஒரு சவரன் ரூ.91,400
09.10.2025 - ஒரு சவரன் ரூ.91,400
09.10.2025 - ஒரு சவரன் ரூ.91,200
08.10.2025 - ஒரு சவரன் ரூ.91,080
08.10.2025 - ஒரு சவரன் ரூ.90,400
07.10.2025 - ஒரு சவரன் ரூ.89,600
06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000
06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000
05.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600
04.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600
03.10.2025 - ஒரு சவரன் ரூ.87,200
03.10.2025 - ஒரு சவரன் ரூ 86,720
02.10.2025 - ஒரு சவரன் ரூ 87,600
02.10.2025 - ஒரு சவரன் ரூ 87,040
01.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600
01.10.2025 - ஒரு சவரன் ரூ.87,120
30.09.2025 - ஒரு சவரன் ரூ. 86,880.
Credit: Oneindia



Click it and Unblock the Notifications











