Gold Price Today: அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. வார முதல் நாளே நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. இன்றைய ரேட் என்ன?

By Mani Singh S

சென்னை: தங்கம் விலை (Gold Price) உச்சத்தை தொட்டு பின்னர் தற்போது குறைந்து வருகிறது. திடீரென ஏறுவதும் பின்னர் குறைவதும் என ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. நேற்று முன் தினம் தங்கம் விலை அதிரடியாக சரிந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்றும் தங்கம் விலை சரிந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.960 குறைந்து நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. வெள்ளி விலையும் சென்னையில் அதிரடியாக சரிந்துள்ளது.

தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற சூழல், பொருளாதார நெருக்கடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.


gold price Chennai gold

தங்கம் விலை தொடர் உயர்வு

அதாவது, தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதி முதலீட்டாளர்கள் அதிக அளவில் தங்கத்தை வாங்கி குவிப்பதால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜனவரி 1 ஆம் தேதி தங்கம் விலை ஒரு சவரன் ரூ.97 ஆயிரமாக இருந்தது. ஆனால் இரண்டு மாதங்கள் முழுதாக முடிவதற்குள் 1 லட்சத்து 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இடையில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரம் என்ற வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்து இருந்தது. அதன்பிறகு அப்படியே சரிந்த தங்கம் விலை மீண்டும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், நகை பிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். தங்கத்தை பொருத்தவரை என்னதான் விலை கூடினாலும் அதன் மீது மக்களுக்கு ஈர்ப்பு குறைவது இல்லை.

கதி கலங்கும் நகை பிரியர்கள்

இதனால், தங்கம் நகை வாங்க நகை கடைகளில் விஷேஷ நாட்களில் கூட்டம் அலைமோதுவதை பார்க்க முடியும். தற்போது கல்யாண சீசன் என்பதால் நகை வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், விலையை கேட்டாலே தலைசுற்றும் அளவிற்கு தங்கம் விலை இருப்பதால் நகை பிரியர்கள் கதி கலங்கி உள்ளனர்.

ரெட் அலர்ட்.. Gold விலை தாறுமாறாக சரிகிறது.. ஆனால் தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்! ஏன்?

இடையிடையே சரிந்தாலும் பெரும்பாலான நாட்களில் விலை அதிகரித்தே வருகிறது. பிப்ரவரி 14 ஆம் தேதி நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் விலை ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 800 ஆக உள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.14,600 ஆக இருந்தது.

இன்றைய தங்கம் ரேட் என்ன

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் தங்கம் விலையில் மாற்றம் இல்லை. இன்று தங்கம் விலை குறைய வாய்ப்பு உள்ளதா.. இல்லை எகிறி அதிர்ச்சி கொடுக்குமா? என்பதை நகை பிரியர்கள் கலக்கத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தனர். இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளே இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது தங்கம் விலை.

தங்கம் விலை சென்னையில் இன்று ஒரு சவரனுக்கு ரூ.960 குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,15,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.120 குறைந்து ரூ..14,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை என்ன?

தங்கம் விலை கணிக்க முடியாதபடி மாறி மாறி உயர்வதும் குறைவதுமாக இருப்பதால் நகை வாங்க திட்டமிட்டு இருப்பவர்கள் இன்றைய விலை நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வந்தனர். இன்றும் விலை குறைந்து இருப்பதால் சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர். வெள்ளி விலை கடந்த 5 நாட்களாகவே எந்த வித மாற்றமின்றி சென்னையில் ஒரு கிராம் ரூ.280-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிரடியாக சரிந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.15 குறைந்து ரூ.265 - க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்க நகைக்கடைகள் சொல்லாத லாபம் ரகசியம்.. 1 ரூபாய் நஷ்டமில்லாமல் தங்கம் வாங்க சூப்பர் சேமிப்பு பிளான்

பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் தங்கம் விலை:

16.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,520 (இன்று)
15.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,800
14.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,800

13.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,200
12.02.2026- ஒரு சவரன் ரூ.1,16,800
11.02.2026 - ஒரு சவரன் ரூ.1,18,320
11.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,800

10.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,640
09.02.2026 - ஒரு சவரன் ரூ.1,17,200
08.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,360
07.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,360

06.02.2026 - ஒரு சவரன் ரூ.1,14,000 (மாலை)
06.02.2026 - ஒரு சவரன் ரூ.1,12,960 (காலை)
05.02.2026 - ஒரு சவரன் ரூ.1,14,560
04.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,200

03.02.2026 - ஒரு சவரன் ரூ.1,14,160 (பிற்பகல்)
03.02.2026 - ஒரு சவரன் ரூ.1,12,240 (காலை)
02.02.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600
01.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,200

Credit: Oneindia

Desktop Bottom Promotion