Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனி-சுக்கிரன் மீன ராசியில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்! -
கேரளா ஸ்டைல் கூட்டுக்கறி ரெசிபி... இதை ஒரு தடவை செஞ்சு பாருங்க... சாதத்துக்கு பெஸ்ட் சைடிஷ் இதுதான்...! -
ராகி பூரியும்.. வெங்காய மசாலாவும்.. - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 18 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் தேடிவரும் நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்: ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்.. -
சனி-சூரியன்-சந்திரன் மீன ராசியில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க இருமடங்கு துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போறாங்களாம் -
73 வயதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஃபிட்டாக இருப்பதன் ரகசியம் இதாங்க.. நீங்களும் தெரிஞ்சுக்கோங்க... -
முட்டைக்கோஸை வழக்கமான பொரியல் செய்யாம இந்த மாதிரி பொரியல் செய்யுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
அரசியல்வாதிகள் ஏன் எப்போதும் வெள்ளை சட்டை மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
பன்னீரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி பன்னீர் கீமா மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்..
தொடர்ந்து 5ஆவது நாளாக உயரும் தங்கம் விலை!! ஜனவரி மாதத்திலேயே பெரிய ஆட்டம் இருக்கு!!
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறு முகமாகவே இருந்து வருகிறது. ஜனவரி 1ஆம் தேதி அன்று ஆபரண தங்கத்தின் விலை சற்றே குறைந்தது. ஆனால் அதன் பின்னர் வந்த ஐந்து வர்த்தக நாட்களிலுமே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறு முகமாகவே இருந்து வருகிறது.
இன்றைய தினம் சென்னையில் தங்கத்தின் விலை தடாலடியாக உயர்ந்து ஒரு சவரன் 1,02,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஜனவரி ஒன்றாம் தேதி அன்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 12,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது . அன்றைய தினம் விலை ஒரு கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து இருந்தது. ஆனால் ஜனவரி 2ஆம் தேதி அன்று கிராமுக்கு 140 ரூபாய் உயர்ந்தது , ஜனவரி 3ஆம் தேதி அன்று கிராமுக்கு 20 ரூபாயும், ஜனவரி 5ஆம் தேதி அன்று கிராமுக்கு 160 ரூபாயும் உயர்வு கண்டது.

நேற்றைய தினம் கிராமுக்கு 70 ரூபாய் விலை உயர்ந்த தங்கம் இன்று மீண்டும் ஒரு கிராமுக்கு 40 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது . சென்னையில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரணத் தங்கம் 12 ,870 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் 1,02,960 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சென்னையில் ஜனவரி 2ஆம் தேதியிலிருந்து இன்று வரை மட்டும் ஒரு கிராம் தங்கம் 430 ரூபாய் விலை உயர்வு கண்டிருக்கிறது. ஒரு சவரன் விலை 3,440 ரூபாய் உயர்ந்திருக்கிறது.
தங்கத்தை கொடுத்து கடன் வாங்கலாம் ஆனா வட்டி கட்ட தேவையில்லை!! இப்படி ஒரு ஆப்ஷன் இருக்கா?
24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை கிராமுக்கு 43 ரூபாய் உயர்ந்து 14,000 ரூபாயை கடந்துவிட்டது. ஒரு கிராம் தங்கம் 14,040 ரூபாய்க்கும் ஒரு சவரன் தங்கம் 1,12,320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கம் 10,735 ரூபாய்க்கும் ஒரு சவரன் 85,880 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. தங்கத்தின் இந்த விலை உயர்வு சாமானிய மக்களுக்கு மீண்டும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பொங்கல் பரிசு தொகை ரூ.3,000: எப்படி விநியோகம் செய்ய வேண்டும்? வழிகாட்டுதல்களை வெளியிட்ட அரசு!!
2025 ஆம் ஆண்டு பெருமளவில் உயர்ந்த தங்கம் 2026 ஆம் ஆண்டில் சற்றே அமைதி காக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் ஜனவரி மாதத்திலேயே தங்கம் தொடர்ந்து ஐந்தாவது நாளாக விலை உயர்ந்திருக்கிறது. தங்கத்தின் இந்த விலை உயர்வுக்கு வெனிசுலா மீது அமெரிக்கா நடத்திய ராணுவ நடவடிக்கையும் அடுத்தடுத்து பல்வேறு நாடுகளின் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப் போவதாக வெளியாகும் தகவல்களுமே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
இந்த நிலைமை கட்டுக்குள் வரும் வரை தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றதில் தான் இருக்கும் என கணிக்கப்படுகிறது. அப்படி பார்க்கும் ஜனவரி மாதத்திலேயே மீண்டும் பழையபடி தங்கம் விலை அடுத்தடுத்த வரலாற்று உச்சங்களை தொட வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.
Credit: Goodreturns



Click it and Unblock the Notifications











