Latest Updates
-
முட்டையும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
கோடையில் எப்பவும் பளிச்சுன்னு பிரகாசமா தெரியணுமா? அப்ப பப்பாளியை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
புதன் பெயர்ச்சியால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்கு தொழிலில் டபுள் லாபம் கிடைக்கும்... -
இந்த ரசத்தை அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க.. உடல் கொழுப்பும், எடையும் சர்ர்-ன்னு குறையும்.. -
Ramzan Eid 2026: ரம்ஜான் பிரியாணி சாப்பிட்டு அஜீரண கோளாறு வரக்கூடாதா? அப்ப இத ஒரு டம்ளர் குடிங்க போதும்.. -
பீன்ஸ் பருப்பு கூட்டு ரெசிபி... இந்த மாதிரி செஞ்சு கொடுங்க... பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
ரம்ஜான் ஸ்பெஷல் தெலுங்கானா மட்டன் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
குரு-சந்திரன் உருவாக்கும் கஜகேசரி ராஜயோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் தேடிவரப்போகுது...!
ஏமாற்றிய நடிகர்கள்.. விவகாரத்து.. எமனாக வந்த புற்றுநோய்.. ராஜவம்சத்து மனிஷா கொய்ராலாவின் கண்ணீர் கதை
சென்னை: நேபால் நாட்டு ராஜ குடும்பத்தில் பிறந்து இந்திய சினிமாவில் நடிக்க வந்தவர் தான் நடிகை மனிஷா கொய்ராலா. அரசியல் செல்வாக்கு, அதிகார செல்வாக்கு கொண்ட குடும்பத்தில் பிறந்த மனிஷா கொய்ராலா, பல நடிகர்களால் ஏமாற்றப்பட்டு, புற்று நோயால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையில் படாத கஷ்டங்களை பட்டுள்ளார். இந்த செய்தியில் மனிஷா கொய்லாராவின் கண்ணீர் கதையை பார்க்கலாம்.
1970 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ந் தேதி நேபாள் தலைநகர் காட்மண்டுவில் தந்தை பிரகாஷ் கொய்ராலா, தாய் சுஷ்மா கொய்ராலாவிற்கு மகளாக பிறந்தார். நேபாளத்தை பல ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் அரச குடும்பம் தான் மனிஷா கொய்ராலாவின் குடும்பம். தனது ஆரம்ப பள்ளிப்படிப்பை நேபாளத்தில் படித்த மனிஷா கொய்ராலா, மேல் படிப்பை டெல்லி பப்ளிக் ஸ்கூலில் படித்தார். மனிஷாவிற்கு சினிமா மீது ஆர்வம் இருந்ததால், நியூயார்க் சென்று பிலிம் மேக்கிங்கில் டிப்ளமோ பட்டம் பெற்றார். அதோடு மட்டுமில்லாமல் மாடங்கிலும் ஈடுபட்டு வந்தார்.

மனிஷா கொய்லாரா: அதைத்தொடர்ந்து, நேபாளத்தில் 'ஃபெரி பெட்டாலா' என்கிற படத்தில் 1989ம் ஆண்டு நடித்தார். அதன்பின் பாலிவுட் பக்கம் வந்த மனிஷா கொய்ராலா, ஹிந்தியில் 'சௌடாகர்' என்ற படத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் வரவேற்பை பெறவில்லை. அதன் பின் '1942 love story' என்ற படத்தில் நடித்தார். இந்த படம் மனிஷாவிற்கு பெயர் சொல்லும் திரைப்படமாக அமைந்ததை தொடர்ந்து, அடுத்தடுத்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது தான் இயக்குநர் மணிரத்னம், பாம்பே படத்தில் மனிஷாவை கமிட் செய்தார். இஸ்லாமியா பெண் கதாபாத்திரத்திற்கு மனிஷா கொய்ராலா மிகவும் பொருத்தமாக இருந்ததால், பாம்பே படம் மிகப்பெரிய அளவில் பெற்றி பெற்றது.
ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்: இந்த படத்தை தொடர்ந்து தமிழில், உயிரே, இந்தியன், முதல்வன், ஆளவந்தான், பாபா மற்றும் மும்பை எக்ஸ்பிரஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். தனது கட்டழகாலும் அசாத்தியமான நடிப்பாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த, மனிஷா கொய்ராலா 4 பிலிம்பேர் விருதுகளை வாங்கி உள்ளார். மனிஷா கொய்ராவால் ஈர்க்கப்பட்ட ஐநா சபை, அவரை UNFPA Goodwill Ambassador நியமித்தது. 1999 ஆண்டிலிருந்து 2015 ஆண்டு வரை உலகின் புகழ் மிக்க ஐநா சபையின் அம்பாசிடராக மனிஷா கொய்ராலா செயல்பட்டார்.
காதலித்து ஏமாந்தேன்: பிரபலமான இருந்த மனிஷா, நடிகர் நாநா படேகர், அக்ஷய் குமார், பாலிவுட் இசையமைப்பாளர் சந்திப் சௌவுட்டா, கமல்ஹாசன் என பல நடிகர்களுடன் காதல் கிசுகிசுக்களில் இவர் பெயர் அடிபட்டது. அவர்கள் அனைவரும் என்னுடைய நண்பர்கள் தான் என கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மனிஷா, நான் சிலரை நம்பி ஏமாந்தேன். அதிலிருந்து நான் பலம் கற்றுக்கொண்டேன் என எந்த நடிகரின் பெயரையும் குறிப்பிடாமல் பேட்டி அளித்திருந்தார். பின் ஆஸ்திரேலியா தூதர் ஒருவரை நடிகை மனிஷா கொய்ராலா உருகி உருகி காதலித்தார். அவரை திருமணம் செய்து கொள்ள நினைத்த நேரத்தில் அவர் குறித்து பல உண்மைகள் தெரியவந்ததால், அவரைவிட்டு பிரிந்தார். பின் 2010ம் ஆண்டு தன்னை விட 7 வயது குறைவான சாம்ராட் டஹால் என நேபாளத்தை சேர்ந்த பிஸ்னஸ் மேனை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண வாழ்க்கை இரண்டு வருடம் நன்றாக சென்று கொண்டு இருந்த நிலையில், 2012 ஆம் ஆண்டு Ovarian Cancer பாதிக்கப்பட்டார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்: அதே ஆண்டு கணவரை விட்டு பிரிந்து, புற்றுநோயுடன் போராடி வந்த மனிஷா கொய்ரா, அமெரிக்காவிற்கு சென்று புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை செய்தார். கீமோ சிகிச்சை செய்ததால், முடி எல்லாம் உதிர்ந்து மொட்டை தலையுடன், உடல் எடை குறைத்து இருக்கும் போட்டோவை பகிர்ந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். மேலும், கேன்சர் என் வாழ்வில் நிறைய தைரியங்களை கற்று கொடுத்துள்ளது. நான் பல இருட்டான நாள்களையும், தனியான இரவுகளையும் கடந்திருக்கிறேன். நோயுடன் நான் போராடிய நாட்கள் வலி நிறைந்ததாக இருந்தது என பதிவிட்டு இருந்தார். அதிலிருந்து, மீண்டு வந்த மனிஷா, ' Healed' என்ற சுய சரிதைப் புத்தகமாக எழுதியுள்ளார். தற்போது மனிஷா கொய்ராலா கேன்சர் நோயாரால் போராடி வருபவர்களுக்கு ஊக்கமூட்டும் நபராக இருந்து பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
படாத கஷ்டம்: என்னதான் மனிஷா கொய்லா ஒரு ராஜ குடும்பத்தை சேர்ந்தவராக, பணத்திற்கு குறைவில்லாதவராக இருந்தாலும் வாழ்க்கையில் பல கஷ்டத்தை இவர் சந்தித்துள்ளார். பணம் பத்தும் செய்யும் என்று சொல்வார்கள், அந்த பணம் தான் மனிஷாவை புற்று நோயில் இருந்து மீட்டு கொண்டு வந்துள்ளது. மனிஷா கொய்ரா மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் Heeramandi: The Diamond Bazaar என்ற வெப்தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
Credit: Filmibeat



Click it and Unblock the Notifications











