Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
போச்சு.. மார்ச் 1 முதல் அமல்.. ரூ.1500 - ரூ.2500 வரை விலை உயரும் ஸ்மார்ட்போன்கள்.. எந்தெந்த மாடல்கள்?
மார்ச் 1 (March 1) ஆம் தேதி முதல் இந்தியாவில் வாங்க கிடைக்கும் குறிப்பிட்ட சில விவோ (Vivo) மற்றும் ஐக்யூ (iQOO) ஸ்மார்ட்போன் மாடல்களின் விலைகள் உயர்த்தப்படலாம் என்று தகவல் கிடைத்து உள்ளது. என்னென்ன மாடல்கள் எவ்வளவு விலை உயர்த்தப்படலாம் என்கிற விவரங்கள் இதோ:
இந்திய சந்தையில் எந்தெந்த விவோ ஸ்மார்ட்போன்களின் விலைகள் உயர்த்தப்படலாம்? இந்தியாவில் விவோ டி4 ஸ்மார்ட்போனின் 8ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் ரூ.22,999 க்கும், 8ஜிபி + 256ஜிபி ஆப்ஷன் ரூ.24,999 க்கும், 12ஜிபி + 256ஜிபி ஆப்ஷன் ரூ.26,999 க்கும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இருப்பினும் நம்பகமான ஒரு டிப்ஸ்டர் வழியாக கிடைத்துள்ள தகவலின் படி - மேற்குறிப்பிட்ட விவோ டி4 ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் முறையே ரூ.24,999, ரூ.26,999 மற்றும் ரூ.28,999 ஆக விலை அதிகரிக்கப்படலாம், இதன் மூலம் அனைத்து ஆப்ஷன்ளிலும் ரூ. 2,000 விலை அதிகரிப்பு இருக்கும்.
இதேபோல விவோ டி4ஆர் ஸ்மார்ட்போனின் விலையும் அதிகரிக்கப்படலாம். தற்போது இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் ரூ.20,999 க்கும், 8ஜிபி + 256ஜிபி ஆப்ஷன் ரூ.22,999 க்கும், 12ஜிபி + 256ஜிபி ஆப்ஷன் ரூ.24,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலின் மீதும் ரூ.2,000 விலை உயர்வு வரலாம், இதன் மூலம் இவைகள் முறையே ரூ.22,999, ரூ 24,999 மற்றும் ரூ 26,999 ஆக உயரலாம்.
கடைசியாக விவோ டி4எக்ஸ் ஸ்மார்ட்போனின் மீதும் விலை உயர்வு அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் 6ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் ரூ.15,499 க்கும், 8ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் ரூ.16,499 க்கும் மற்றும் 8ஜிபி + 256ஜிபி ஆப்ஷன் ரூ.18,499 க்கும் அறிமுகமானது.
இந்த ஸ்மார்ட்போன் ரூ.2500 வரை விலை உயர்வை பெறலாம் என்று கூறப்படுகிறது. அதாவது பேஸிக் 6ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் மீது ரூ.1,500 விலை உயர்வு அறிவிக்கப்பட்டு அது ரூ.16,999 ஆகவும், 8ஜிபி ஆப்ஷன்களுக்கு ரூ.2,500 விலை உயர்வு அறிவிக்கப்பட்டு அவைகள் முறையே ரூ.18,999 மற்றும் ரூ.20,999 ஆகவும் விலை உயர்த்தப்படலாம்.
இந்திய சந்தையில் எந்தெந்த ஐக்யூ ஸ்மார்ட்போன்களின் விலைகள் உயர்த்தப்படலாம்? ஐக்யூ இஸட்10 ஸ்மார்ட்போனின் மீது ரூ.2,000 விலை அதிகரிப்பு அறிவிக்கப்படலாம். இதன்கீழ் பேஸிக் 8GB + 128GB ஆப்ஷனின் விலை ரூ.24,999 ஆகவும், 8GB + 256GB ஆப்ஷனின் விலை ரூ.26,999 ஆகவும், 12GB + 256GB ஆப்ஷனின் விலை ரூ.28,999 ஆகவும் உயரலாம். நினைவூட்டும் வண்ணம் இவைகள் முறையே ரூ.22,999, ரூ.24,999 மற்றும் ரூ.26,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
அடுத்ததாக ஐக்யூ இஸட்10ஆர் ஸ்மார்ட்போனின் அனைத்து ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுமே ரூ.2,000 வரை விலை உயர்வை காணலாம். இதன் மூலம் 8GB + 128GB ஆப்ஷனின் ரூ.22,999 ஆகவும், 8GB + 256GB ஆப்ஷனின் ரூ.24,999 ஆகவும், 12GB + 256GB ஆப்ஷனின் ரூ.26,999 ஆகவும் உயரலாம்.
கடைசியாக ஐக்யூ இஸட்10எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலையும் அதிகரிக்கலாம். டிப்ஸ்டரின் கூற்றுப்படி, 6GB + 128GB ஆப்ஷனின் விலை ரூ.1,500 அதிகரித்து ரூ.16,999 ஆகவும், 8GB + 128GB மற்றும் 8GB + 256GB ஆப்ஷன்களின் விலைகள் ரூ.2,500 அதிகரித்து முறையே ரூ.18,999 ஆகவும், ரூ.20,999 ஆகவும் விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட "திருத்தப்பட்ட" விலை நிர்ணயம் 2026 மார்ச் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று டிப்ஸ்டர் கூறி உள்ளார்.
Credit: Gizbot



Click it and Unblock the Notifications











