Latest Updates
-
காரசாரமான கேரளா ஸ்டைல் ஈஸி பெப்பர் சிக்கன் ரெசிபி... இப்படி செஞ்சு பாருங்க... வேற லெவல் சைடிஷா இருக்கும்...! -
கள்ளக்காதலில் ஈடுபட அதிக வாய்ப்புள்ள 4 ராசிகள் இவங்கதான்... இவங்ககிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருங்க...! -
காரசாரமான.. ஹைதராபாதி சிக்கன் கிரேவி - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நல்ல நேரம் தேடிவருமாம்...! -
வார ராசிபலன் (22 March 2026-28 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கும்.. -
Tamil Nadu Election 2026: பாரம்பரிய தமிழ் உணவுகளை உட்கொள்ளும் தமிழகத் தலைவர்கள்! -
முட்டையும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
கோடையில் எப்பவும் பளிச்சுன்னு பிரகாசமா தெரியணுமா? அப்ப பப்பாளியை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
புதன் பெயர்ச்சியால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்கு தொழிலில் டபுள் லாபம் கிடைக்கும்... -
இந்த ரசத்தை அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க.. உடல் கொழுப்பும், எடையும் சர்ர்-ன்னு குறையும்..
விஜய்க்கு போன வார்னிங் மெசேஜ்.. உடனே சுதாரிக்க வேண்டும்.. இல்லைன்னா முற்றும் கோணல்.. போச்சு
சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிகள் காரணமாக விஜயின் தமிழக வெற்றிக் கழகம் அதிகம் பாதிக்கப்படலாம் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிகள் தமிழ்நாட்டில் தொடங்கி உள்ளது. இதனால் இளம் வாக்காளர்கள் பலர் பாதிக்கப்பட உள்ளனர். முக்கியமாக இதில் உள்ள விதி ஒன்று இளம் தலைமுறையினருக்கு எதிராக செல்லலாம்.

2002-2004 காலகட்டத்தில் நடத்தப்பட்ட SIR பட்டியலில் ஒரு வாக்காளரின் பெயர் இடம்பெற்றிருந்தால், அவர் கூடுதல் ஆவணங்கள் எதையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை. ஆனால், அதற்குப் பிறகு சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் தங்கள் குடியுரிமை மற்றும் வசிப்பிடத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை வழங்க வேண்டும். இதனால் இளம் தலைமுறையினர் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள்.
திமுக - அதிமுக பக்கா பிளான்
திமுக, அதிமுக இரண்டிற்கும் பக்காவான பூத் கமிட்டிகள் உள்ளனர். பூத் உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களுக்கு திமுகவின் பாரம்பரிய வாக்குகள் தெரியும்.. அதிமுகவின் பாரம்பரிய வாக்குகள் தெரியும். இவர்களை SIR செய்ய வைக்கும் பணிகளை திமுக, அதிமுகவினர் செய்கின்றனர். இதற்காக திமுக, அதிமுகவினர் நிர்வாகிகளை களமிறக்கி உள்ளனர்.
அவர்கள் கடந்த ஒரு வாரமாகவே பூத் பூத்தாக சென்று பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வாக்காளர் லிஸ்டில் பலரின் பெயர்களை தக்க வைக்க தீவிரமாக பணிகளை செய்து வருகின்றனர். ஆனால் விஜய் தரப்பு இதை செய்யவில்லை.
விஜய்க்கு காத்திருக்கு பெரிய ஆபத்து
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிகள் காரணமாக விஜய்க்கு செல்லும் இளம் வாக்காளர்கள் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. ஏனென்றால்.. விஜயின் வாக்காளர்கள் பலரும் 2000க்கு பின் பிறந்தவர்களாக இருக்க வாய்ப்புகள் உள்ளன. 2002-2004 காலகட்டத்தில் நடத்தப்பட்ட SIR பட்டியலில் இவர்களின் பெயர்கள் இருந்திருக்காது.
இதனால் இப்போது SIR நடக்கும் நிலையில்.. புதிய வாக்காளர்கள் தங்கள் குடியுரிமை மற்றும் வசிப்பிடத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை வழங்க வேண்டும். அதாவது இவர்கள் 12 முக்கியமான ஆவணங்களில் எதையாவது ஒன்றை வழங்க வேண்டும். அப்போதுதான் இவர்கள் லிஸ்டில் இருப்பார்கள்.
அதாவது 2002-2004 காலகட்டத்தில் நடத்தப்பட்ட SIR பட்டியலில் உங்களின் பெயர்கள் இல்லை.. அதன்பின்தான் நீங்கள் வாக்காளர்கள் ஆனீர்கள் என்றால்.. கீழ்கண்ட ஆவணங்களை கொடுக்க வேண்டும். இல்லையென்றால் உங்களின் வாக்குரிமை பறிக்கப்படும்.
சிக்கலில் விஜய்
விஜய்க்கு பூத் கமிட்டி இல்லை. தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு பெரிய அளவில் கிரவுண்டு நிர்வாகிகள் இல்லை. ஆனால் இதை உணராமல் விஜய் அமைதியாக இருக்கிறார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிகள் காரணமாக விஜயின் தமிழக வெற்றிக் கழகம் அதிகம் பாதிக்கப்படலாம் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
விஜய்க்கு ஆதரவாக இருக்கும் 2கே வாக்காளர்கள் அதிகம் பாதிக்கப்படலாம். ஆனால் விஜய் இதை கண்டுகொள்ளவே இல்லை. வெறும் அறிக்கையோடு நிறுத்திவிட்டார். அவர் தனது வாக்காளர்களின் வாக்குரிமையை தக்க வைக்க முயற்சிகள் செய்யவில்லை.
முக்கியமாக விஜய் ஒரு நிர்வாகிகள் குழுவை கூட இதற்காக நியமிக்கவில்லை. உடனே விஜய் சுதாரிக்க வேண்டும். இல்லையென்றால் அவருக்கு கடுமையான சிக்கல் ஏற்படும், என்று விஜய்க்கு அரசியல் வல்லுநர்கள் பலரும் எச்சரிக்கை விடுக்க தொடங்கி உள்ளனர்.
Credit: Oneindia



Click it and Unblock the Notifications











