Latest Updates
-
இந்தியாவில் அதிக கட்டணம் வசூலிக்கும் டாப் 5 சுங்கச்சாவடிகள் என்னென்ன தெரியுமா? -
சத்தான மீல் மேக்கர் கட்லெட் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மொறுமொறுனு சாப்பிட சூப்பரா இருக்கும் -
ஆகஸ்ட் 05-ல் புதன் கடக ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தாபா ஸ்டைல் முட்டை பட்டாணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
Commonwealth Games 2026: காமன்வெல்த் போட்டிகளுக்கும், ஒலிம்பிக் போட்டிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன? -
பீர்க்கங்காய் தக்காளி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டும் நாளாக இருக்குமாம் -
56 ஆண்டுகளுக்கு பின் குரு பூர்ணிமா நாளில் உருவாகும் 3 ராஜயோகங்கள்: அதிர்ஷ்ட மழையில் நனையும் 3 ராசிகள்! -
லன்ச்பாக்ஸ்-க்கு தக்காளி சாதத்தை இப்படி செய்யுங்க.. பிரியாணி மாதிரி டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
கருவளையங்கள் உங்களை டல்லா காட்டுதா? அப்ப இந்த மாஸ்க்கை அடிக்கடி போடுங்க..
இனி தங்கம் வாங்குவது வேஸ்ட்.. மொத்தமாக தூக்கி சாப்பிட்ட வெள்ளி.. திங்கட்கிழமை நடந்த திடுக்கிடும் சம்பவம்..!!
சர்வதேச சந்தையில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவம் முதலீட்டு சந்தையில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது, டிரம்ப் கிரீன்லாந்து நாட்டை கைப்பற்றும் முயற்சியில் பல அதிரடி அறிவிப்புகளை விடுத்து வருகிறார். இதுமட்டும் அல்லாமல் அமைதி வாரியம் என்ற புதிய அமைப்பை உருவாக்கி வருவது பல சர்வதேச அமைப்புகளின் முக்கியதுவத்தை பாதிக்கும் வகையில் உள்ளது.
இது அனைத்தும் பங்குச்சந்தை முதலீட்டை பாதித்து முதலீட்டாளர்கள் தங்களுடைய பணத்தை பாதுக்காக்கும் பொருட்டு தங்கம், வெள்ளி, பிளாட்டினம், காப்பர் போன்ற உலோகத்தில் முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். இதனால் திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் வெள்ளி விலை தடாலடியாக உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது.

முதலீட்டு சந்தையில் தற்போது தங்கத்தை விட வெள்ளிக்கு அதிகப்படியான மவுசு இருக்கும் காரணத்தால், வெள்ளி இன்று அதிரடியான உயர்வை பதிவு செய்துள்ளது. திங்கட்கிழமை ரீடைல் சந்தையில் 1 கிலோ வெள்ளி விலை 8000 ரூபாய் உயர்ந்து 3,18,000 ரூபாய் அளவீட்டை தொட்டு வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது.
இதேபோல் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (MCX) சந்தையில் வெள்ளி ஒரு கிலோ முதல் முறையாக ரூ.3 லட்சத்தை தாண்டியது. இன்றைய வர்த்தகத்தில் ஒரு கிலோ ரூ.3,01,315 வரை உயர்ந்தது. இந்த அதிரடி உயர்வு முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது மட்டும் அல்லாமல நகை சந்தையில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த கடுமையான உயர்வுக்கு உலக அளவிலான பொருளாதாரம் மற்றும் வர்த்தக சந்தையில் நிலவும் நிச்சயமின்மை முக்கிய காரணமாக உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஐரோப்பிய நாடுகளுக்கு புதிய வர்த்தக வரிகளை விதிப்பதாக அறிவித்துள்ளது ஒட்டுமொத்த ஐரோப்பிய முதலீட்டு சந்தையை பாதித்துள்ளது.
கிரீன்லாந்து விவகாரம்:
கிரீன்லாந்து நாட்டை அமெரிக்க கட்டுப்பாட்டை எடுக்கும் வரையில் இந்த வரி தொடரும் என்றும், அமெரிக்காவின் முயற்சியை எதிர்க்கும் நாடுகள் மீது 10 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார் டிரம்ப். இந்த புதிய வரி பிப்ரவரி 1 முதல் அமல்படுத்தப்படும் எனவும், ஜூன் மாதத்தில் இது 25 சதவீதமாக உயரும் எனவும் டிரம்ப் தெரிவித்தார். இன்றைய தங்கம், வெள்ளி விலை உயர்வுக்கு இது தான் முக்கியமான காரணம்.
டிரம்ப்-ன் அறிவிப்புகளை எதிர்த்து ஐரோப்பிய நாடுகளும் நடவடிக்கை எடுக்க துவங்கியுள்ளது, முதல் கட்டமாக அமெரிக்காவுடன் செய்யப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளது, அதை தொடர்ந்து அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வரி விதிப்பது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளது, மேலும் கிரீன்லாந்து நாட்டில் ஐரோப்பிய ராணுவத்தை பலப்படுத்தும் நடவடிக்கைகளை துவங்கியுள்ளது.
இதனால் சர்வதேச சந்தையில் அரசியல் பதற்றம் மற்றும் வர்த்தக போர் அச்சம் அதிகமாகி முதலீட்டாளர்கள் பாதுகாப்பான சொத்துகளாக கருதப்படும் தங்கம், வெள்ளியில் முதலீடு செய்ய துவங்கியுள்ளனர்.
தங்கம் விலை
இன்றைய வர்த்தகத்தில் வெள்ளி மட்டுமல்ல, தங்கமும் அதிரடியான உயர்வை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஸ்பாட் தங்கம் 1.6 சதவீதம் உயர்ந்து ஒரு அவுன்ஸ் 4669 டாலராக உள்ளது, காலை வர்த்தகத்தில் 4691 டாலர் வரை சென்றது. சென்னை ரீடைல் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 1860 ரூபாய் உயர்ந்து 1,46,730 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. மேலும் 22 கேரட் 10 கிராம் விலை 1700 ரூபாய் உயர்ந்து 1,34,500 ரூபாயாக உள்ளது.
மேலும் வெள்ளி விலை 3 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்து ஒரு அவுன்ஸ் 94 டாலர் தாண்டியது. இதோடு பிளாட்டினம், பாலேடியம் போன்ற பிற விலைமதிப்பற்ற உலோகங்களும் ஏற்றத்தில் உள்ளன.
Credit: Goodreturns



Click it and Unblock the Notifications