Latest Updates
-
கோடை வெயிலால் முகம் டல்லா, கருப்பா இருக்கா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
பாய் வீட்டு சிக்கன் பிரியாணி ரெசிபி... இந்த ரம்ஜானுக்கு இப்படி பிரியாணி செஞ்சு பாருங்க... தாறுமாறா இருக்கும்! -
வெண்டைக்காய் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி மொறுமொறுன்னு சிப்ஸ் செஞ்சு சாப்பிடுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க புரியாத புதிராக இருப்பார்களாம்... இவங்கள யாராலும் புரிஞ்சிக்க முடியாதாம்...! -
மீன ராசியில் அரிய சனி-செவ்வாய் சேர்க்கை: ஏப்ரலில் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
4 முட்டையும், ஒரு உருளைக்கிழங்கும் இருந்தா இப்படி முட்டை அவியலை செய்யுங்க...டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்...! -
ரம்ஜான் ஸ்பெஷல் ஆப்கானி மட்டன் - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
கரும்புள்ளிகளை சாதாரணமா நினைக்காதீங்க.. அது கல்லீரல் பிரச்சனையின் அறிகுறியா இருக்கலாம்.. உஷார்.. -
பாபா வாங்காவின் தலைசுற்ற வைக்கும் உலக அழிவு பற்றிய கணிப்பு..எந்த வருடத்தில் உலகம் அழியப்போகுதாம் தெரியுமா? -
சுக்கிர பெயர்ச்சி: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியும்.. உங்க ராசி இதுல இருக்கா?
தவெகவில் இன்று ஐக்கியமாகும் வைத்திலிங்கம்? டெல்டாவுக்கு விஜய் போடும் பிளான்! எதிர்பாராத ட்விஸ்ட்
சென்னை: தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. கட்சித் தாவல்கள் எல்லாம் படுஜோராக நடந்து வருகிறது. மூத்த அரசியல் தலைவர்களான செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத்தைத் தொடர்ந்து இப்போது அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான வைத்திலிங்கமும் இன்று தவெகவில் ஐக்கியமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதன் காரணமாக இப்போதே அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் வேலைகளை ஆரம்பித்துவிட்டன. ஒரு பக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை என்றால் இன்னொரு பக்கம் பிரச்சாரமும் கூட நடந்து வருகிறது. 2ம் கட்ட தலைவர்கள் தங்கள் பகுதிகளில் பிரச்சாரத்தை நடத்தி வருகிறார்கள்.

செங்கோட்டையன்
அதேபோல இந்த நேரத்தில் முக்கிய புள்ளிகள் கட்சி மாறும் நிகழ்வுகளும் கூட அதிகம் நடக்க ஆரம்பித்துள்ளது. சமீபத்தில் அப்படித் தான் அதிமுகவில் மூத்த தலைவராக இருந்த செங்கோட்டையன் தவெகவில் ஐக்கியமானார். எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியான செங்கோட்டையன், பல ஆண்டுகளாகக் கோபி எம்எல்ஏவாக இருந்தவர். மேலும், பல முக்கிய பதவிகளையும் வகித்தவர். ஒரு காலத்தில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய நபராகவும் இருந்தவர்.
அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் எனக் குரல் எழுப்பிய செங்கோட்டையன், இதற்காக ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை கூட சந்தித்திருந்தார். இந்தச் சூழலில் தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். இது அரசியல் களத்தில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. ஏனென்றால் அதற்கு முன்பு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டோர் திமுகவில் இணைந்து வந்த நிலையில், தவெக பக்கம் செங்கோட்டையன் சென்றிருந்தார்.
திடீர் மாற்றம்
முன்பே கூட சில தலைவர்கள் தவெகவில் வர விரும்பியதாகவும் இருப்பினும் விஜய் தரப்பே அதை ஏற்கவில்லை என்று சொல்லப்படுகிறது. மாற்றுக் கட்சித் தலைவர்களை ஏற்பதில் விஜய்க்கு தயக்கம் இருப்பதாகச் சொல்லப்பட்டது. இந்தச் சூழலில் தான் கரூர் சம்பவத்திற்குப் பிறகு, மூத்த அரசியல்வாதிகள் தேவை என்பதை விஜய் உணர்ந்தார். நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கக் கூடிய தலைவர்கள் தேவை என்பதைப் புரிந்து கொண்டார். அதைத் தொடர்ந்தே செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். அவர் தவெக நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.
வைத்திலிங்கம்
அவரை தொடர்ந்து மற்றொரு மூத்த தலைவரான நாஞ்சில் சம்பத்தும் தவெகவில் இணைந்தார். அவருக்கும் பரப்புரை செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டது. இந்தச் சூழலில் தான் முன்னாள் அமைச்சரும், மாஜி ராஜ்யசபா எம்பியுமான வைத்திலிங்கமும் தவெகவில் இணைவதாகக் கூறப்படுகிறது. 70 வயதாகும் வைத்திலிங்கம், 2001-2006 மற்றும் 2011- 2016 காலகட்டத்தில் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். இப்போது அவர் ஒரத்தநாடு எம்எல்ஏவாக இருக்கிறார்.
யார் இவர்
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளராக இருந்த வைத்திலிங்கம், ஓபிஎஸ் ஆதரவாளராகவே அறியப்பட்டார். ஓபிஎஸ் உடன் நீக்கப்பட்ட தலைவர்களில் வைத்திலிங்கம் ஒருவர் ஆவார். அதன் பிறகு தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டையே வைத்தியலிங்கம் கொண்டிருந்தார். இந்தச் சூழலில் தான் அவர் தவெகவில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கொங்குப் பகுதிக்காக செங்கோட்டையனை தவெகவுக்கு கொண்டு வந்த நிலையில், டெல்டா பகுதிகளைக் குறிவைத்தே வைத்திலிங்கத்தை கட்சியில் சேர்க்கவுள்ளனர்.
Credit: Oneindia



Click it and Unblock the Notifications











