ஜனநாயகன் முதல் நாள் வசூலையும் பராசக்தி முறியடிக்குமோ?.. கேம் சேஞ்சர் ஞாபகத்துக்கு வருது.. கலாய்!

By Mari S

சென்னை: ஜனநாயகன் படத்துக்கு எல்லா வகையிலும் போட்டியாக பராசக்தி படம் மாறி நிற்கிறது. விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் படத்தின் டிரைலர் வெளியாகி 2 நாட்கள் ஆகும் நிலையில், இன்னமும் 40 மில்லியன் வியூஸ் கூட வரவில்லை. ஒரே நாளில் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்தின் டிரைலர் 40 மில்லியன் வியூஸை கடந்து ஜன நாயகனை முந்தி விட்டது.

பாட்ஸ் வைத்து தான் பராசக்தி படத்தின் டிரைலர் வியூஸை டான் பிக்சர்ஸ் அதிகரித்துள்ளதாக விஜய் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். இத்தனை ஆண்டுகளாக நீங்க பண்ணதையே உங்களுக்கு ஒருத்தன் பண்ணிட்டான் என திருப்பி விஜய் ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மற்றும் அஜித், ரஜினி உள்ளிட்ட நடிகர்களின் ரசிகர்களும் ட்ரோல் செய்து வருகின்றனர்.


Parasakthi will beat Vijay s last movie Jana Nayagan at Box Office clash trolls trending

இந்நிலையில், ஜன நாயகன் படத்தின் முதல் நாள் வசூலையும் பராசக்தி முறியடிக்கும் என்றும் ரெட் ஜெயன்ட் அனைத்துக்கும் ரெடியாகவே உள்ளது என்றும் ட்ரோல்கள் குவிந்து வருகின்றன.

70.9 மில்லியன் வியூஸ்: விஜய்யைன் ஜன நாயகன் டிரைலர் ரெக்கார்டை பராசக்தி படத்தால் வீழ்த்தவே முடியாது என கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் 70.9 மில்லியன் வியூஸை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான டிரைலர் மூலம் கூட்டுத்தொகையாக பெற்றுள்ளதாக போட்டு கெத்துக் காட்டி வருகின்றனர்.


ஜனநாயகனை முந்திய பராசக்தி: தமிழில் வெளியான ஜன நாயகன் படத்தின் டிரைலரை ஓடவிட்டு முடித்து விட்டோம். இதுவரை வெளியான தமிழ் படங்களிலேயே மிகப்பெரிய டிரைலர் சாதனையை 24 மணி நேரத்தில் 40 மில்லியனை கடந்து பராசக்தி படம் தான் நிகழ்த்தியுள்ளது என பராசக்தி படக்குழு கொண்டாடி வருகிறது. இந்நிலையில், முதல் நாள் வசூலையும் பராசக்தி முந்தும் பாருங்களேன் என விஜய் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

கேம் சேஞ்சர் கதையா இருக்கே: உலகளவில் ஜன நாயகன் படத்தின் முதல் நாள் வசூல் அதிகபட்சமாக 120 கோடி முதல் 150 கோடி என போஸ்டரை கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் என்கின்றனர். இந்நிலையில், ஜன நாயகன் முதல் நாள் வசூலை கூட பராசக்தி திரைப்படம் முந்தும் என்றும் கேம் சேஞ்சர் முதல் நாள் போஸ்டர் 186 கோடி வசூல் என வெளியானதை போன்ற காமெடியை போட்டி காரணமாக செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கின்றனர். கேம் சேஞ்சர் மொத்த வசூலும் 186 கோடி தான் என்பது தான் இதில் ஹைலைட் என விஜய் ரசிகர்கள் சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தை ட்ரோல் செய்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் போட்டி கன்ஃபார்ம்: ஒருவேளை ஜன நாயகன் படத்தின் உலகளவிலான வசூலை பராசக்தி முந்தவில்லை என்றாலும், தமிழ்நாட்டில் ஜனவரி 9ம் தேதி வெளியாகும் ஜன நாயகன் படத்தின் வசூலை விட சில கோடிகள் அதிகமாக சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் வசூல் செய்தது என்கிற அறிவிப்பாவது நிச்சயம் வெளியாகும் என்கின்றனர். இந்த வாரம் செம என்டர்டெயின்மென்ட் கம்மிங்!

Credit: Filmibeat

Story first published: Tuesday, January 6, 2026, 10:59 [IST]
Desktop Bottom Promotion