Latest Updates
-
தலைமுடி உதிர்வை தடுக்கணுமா? அப்ப நம்ம பாட்டிமார்கள் பின்பற்றிய இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க வாழ்வில் பிரச்சனை புயல் வீசப்போகுது.. -
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் தங்கம்..! 24 மணி நேரத்தில் சவரனுக்கு ரூ.3,200 உயர்வு..!
சென்னையில் தொடர்ந்து சரிவில் இருந்த தங்கம் விலை மீண்டும் உயர தொடங்கியுள்ளது. அக்டோபர் மாதம் 18ஆம் தேதியில் இருந்து தங்கம் விலை படிப்படியாக குறைந்து வந்தது. 2 வாரங்களாக ஒரு சவரன் 88,000 ரூபாய் முதல் 90,000 ரூபாய்க்குள் ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் கடந்த இரு நாட்களாக மீண்டும் உயர தொடங்கியுள்ளது.
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 11,480 ரூபாய்க்கு விற்பனை செய்யபப்ட்டது. இன்று ஒரு கிராம் 220 ரூபாய் உயர்ந்து 11,700 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல ஒரு சவரன் தங்கம் நேற்று 91,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று தடாலடியாக விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைக்கு ஒரு சவரன் தங்கம் 1,760 ரூபாய் விலை உயர்ந்து 93,600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

சென்னையில் தற்போது ஒரு நாளைக்கு இரண்டு முறை தங்கம் விலை மாற்றி அமைக்கப்படுகிறது. நேற்று காலை 9.30 மணிக்கும் மாலையிலும் என ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு 180 ரூபாயும் ஒரு சவரனுக்கு 1,440 ரூபாயும் உயர்வு கண்டது. இந்த சூழலில் இன்றைய தினம் காலை ஒரு கிராம் 220 ரூபாயும் ஒரு சவரன் 1760 ரூபாயும் உயர்ந்துள்ளது.
தங்கம் விலையில் நிகழ்ந்துள்ள பெரிய மாற்றம் - முதல்ல இத பாருங்க
தங்கம் விலை நேற்று காலை முதல் இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 3 முறை உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 400 ரூபாயும், ஒரு சவரன் ஆபரண தங்கம் 3,200 ரூபாயும் உயர்ந்துள்ளது. தங்கம் விலை இரண்டு நாட்களிலேயே சவரனுக்கு 3,200 ரூபாய் உயர்ந்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
45 ஆண்டுகளில் இல்லாத சாதனையை படைக்க தயாராகும் தங்கம்!! இது தான் தங்கம் வாங்க சிறந்த நேரமா?
24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை கிராமுக்கு 240 ரூபாய் உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் 12,524 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 12,764 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதே போல 24 கேரட் தங்கம் ஒரு சவரன் 1 லட்சம் ரூபாயை கடந்துவிட்டது. நேற்று ஒரு சவரன் 1,00,192 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 1,920 ரூபாய் விலை உயர்ந்து 1,02,112 ரூபாய்க்கு விற்பனையகிறது.
18 கேரட் தங்கத்தை பொறுத்தவரை கிராமுக்கு 175 ரூபாய் உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் 9,575 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 9,750 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதே போல 18 கேரட் தங்கம் நேற்று ஒரு சவரன் 76,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது, தங்கம் இன்று 1,400 ரூபாய் விலை உயர்ந்து 78,000 ரூபாய்க்கு விற்பனையகிறது.
தங்கம் Vs ரியல் எஸ்டேட் : இன்றைய சூழலில் எந்த முதலீடு நல்ல லாபம் தரும்?
வெள்ளியின் விலையும் இன்று தடாலடியாக உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்துள்ளது. 170 ரூபாய்க்கு ஒரு கிராம் வெள்ளியும் , ஒரு கிலோ வெள்ளி 1,70,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கமும் வெள்ளியும் தடாலடியாக விலை உயர்ந்துள்ளது சாமானிய மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Credit: Goodreturns



Click it and Unblock the Notifications