Latest Updates
-
தலைமுடி உதிர்வை தடுக்கணுமா? அப்ப நம்ம பாட்டிமார்கள் பின்பற்றிய இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க வாழ்வில் பிரச்சனை புயல் வீசப்போகுது.. -
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையில் அதிரடி மாற்றம்.. வீட்டு உபயோக சிலிண்டர் விலை எவ்வளவு..?
நவம்பர் 1ஆம் தேதி முதல், வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலை முக்கிய நகரங்களில் சிறிய அளவில் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் (அக்டோபர்) இந்த சிலிண்டர் விலையில் கணிசமான உயர்வு இருந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இந்த விலை குறைப்பு வர்த்தகப் பயன்பாட்டாளர்களுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது.
அதன்படி, டெல்லியில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.5 குறைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ரூ.1,595.5 ஆக இருந்த நிலையில், நவம்பரில் ரூ.1,590.5 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் அதிகபட்சமாக ரூ.6.5 குறைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ரூ.1,700.5 ஆக இருந்த விலை தற்போது ரூ.1,694 ஆக உள்ளது.
மும்பையில் சிலிண்டர் விலை ரூ.5 குறைக்கப்பட்டு, தற்போது ரூ.1,542-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில், 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.4.50 காசு குறைந்து, ரூ.1,750-க்கு விற்கப்படுகிறது.
கடந்த அக்டோபரில், 19 கிலோ சிலிண்டர் விலை டெல்லி, மும்பையில் 15.5 ரூபாயும், கொல்கத்தா, சென்னையில் 16.5 ரூபாயும் உயர்த்தப்பட்ட நிலையில், இம்மாதம் விலை குறைந்துள்ளது.
வீட்டு உபயோக சிலிண்டர் விலை நிலவரம் : வீட்டு உபயோகத்துக்காகப் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஏப்ரல் 2025 முதல் விலை மாற்றமின்றி நிலைபெற்றுள்ள நிலையில், நவம்பரிலும் அதே விலை தொடர்கிறது. அதன்படி, 14.2 கிலோ சிலிண்டர் டெல்லியில் ரூ.853-க்கும், கொல்கத்தாவில் ரூ.879-க்கும், மும்பையில் ரூ.852.50-க்கும், சென்னையில் ரூ.868.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
புதிய இணைப்பு பெறுவது எப்படி..?: இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (Indian Oil) கூற்றுப்படி, தற்போது 14.2 கிலோ மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளில் 5 கிலோ எல்பிஜி சிலிண்டர் இணைப்பு தேவைக்கேற்ப வழங்கப்படுகிறது. புதிய இணைப்பு பெற விரும்பும் நுகர்வோர் தங்கள் பகுதியில் சேவை செய்யும் இன்டேன் (Indane) விநியோகஸ்தரை அணுகி, செல்லுபடியாகும் இருப்பிடம் மற்றும் அடையாளச் சான்றுகளை சமர்ப்பித்துப் பதிவு செய்ய வேண்டும்.
இருப்பிடச் சான்றுக்கான ஆவணங்கள் : ரேஷன் கார்டு, மின்சார கட்டண ரசீது அல்லது தொலைபேசி கட்டண ரசீது, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம்.
பதிவு செய்தவுடன், விநியோகஸ்தர் ஒரு தகவல் கடிதத்தை பதிவுத் தபால் மூலம் அனுப்புவார். அந்தக் கடிதத்தை எடுத்துச் சென்று உடனடியாக இன்டேன் இணைப்பைப் பெறலாம். இருப்பினும், இணைப்பு பெறுவதற்கு முன்னர், ISI தரச்சான்று பெற்ற அடுப்பு (Hotplate - IS:4246) மற்றும் சுரக்ஷா எல்பிஜி ஹோஸ் (IS:9573) ஆகியவை உங்களிடம் இருக்க வேண்டும்.
Credit: Goodreturns



Click it and Unblock the Notifications