பிப்ரவரி 1 முதல் புது ரூல்ஸ்.. கார், ஜீப், வேன் ஓனர்களுக்கு அமல்.. KYV கதையை முடித்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம்!

By Harihara Sudhan

என்எச்ஏஐ (NHAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (National Highways Authority of India) ஆனது கார், ஜீப் மற்றும் வேன் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு புதிய விதிகளை அமலுக்கு கொண்டுவர உள்ளது. இந்த விதிகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த விதிகளால் என்னென்ன மாற்றம் செய்யப்பட உள்ளது.

ஃபஸ்டேக் (FASTag) வழங்கப்படும் வாகனங்களுக்கு கேஒய்வி (KYV) என்கிற உங்கள் வாகனத்தைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள் (Know Your Vehicle) செயல்முறை இருக்கிறது. இது கார், ஜீப் மற்றும் வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு பொருந்துகிறது. ஃபாஸ்டேக் வழங்கப்பட்ட வாகனத்தின் விவரங்கள், உரிமையாளர் விவரங்கள் இதில் சரிபார்க்கப்படுகின்றன.


New FASTag Norms From February 1

இது வாகனங்களை தவறாக பயன்படுத்துதல், போலியாக ஃபாஸ்டேக் எடுத்தல், ஒரே ஃபாஸ்டேக் வழியாக பல்வேறு வாகனங்களை இணைத்தல் உள்ளிட்டவற்றை தடுக்கிறது. இந்த கேஒய்வி செயல்முறையில் வாகனத்தின் பதிவு விவரங்கள் இந்திய அரசின் கீழ் செயல்படும் வாகன் (VAHAN) தளத்துடன் சரிபார்க்கப்படுகிறது. இது பிளாக் லிஸ்ட் செய்யப்பட்ட வாகனத்தையும் கண்டுபிடிக்கும்.

இந்த கேஒய்வி செயல்முறை ஃபாஸ்டேக் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு கொண்டுவரப்பட்டது. இதனால், கார், ஜீப் மற்றும் வேன் உள்ளிட்ட நான்கு சக்கர வாகன உரிமையாளர்கள் ஃபாஸ்டேக் ஆக்டிவேட் செய்யப்பட்ட பிறகே கேஒய்வி செயல்முறையை செய்ய வேண்டி இருந்தது. மேலும், புதிதாக பெறப்பட்ட ஃபாஸ்டேக்குகளுக்கும் போஸ்ட்-ஆக்டிவேஷன் கேஒய்வி இருந்தது.

ஆனால், வருகிற 2026 பிப்ரவரி 1ஆம் தேதி முதல் புதியாக பெறப்படும் ஃபாஸ்டேக்கில் போஸ்ட்-ஆக்டிவேஷன் கேஒய்வி இருக்காது. ஆகவே, கார், ஜீப் மற்றும் வேன் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் வாங்கும்போதே தேவையான விவரங்கள் பெறப்பட்டுவிடும். இதனால், ஃபாஸ்டேக் வாங்கிய பிறகு கேஒய்வி செயல்முறையை செய்ய வேண்டி இருக்கிறது.

ஒரேமுறையில் இதை செய்து முடிக்கலாம். மேலும், ஏற்கனவே ஃபாஸ்டேக் உள்ள வாகனங்களுக்கும் இனிமேல் கேஒய்வி செயல்முறை இருக்காது. இருப்பினும், காரின் விண்ட்ஷீல்டில் ஃபாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டாமல் விடுவது, உரிமையாளர் மற்றும் வாகனத்தின் விவரங்கள் பொருந்தாமல் இருப்பது உள்ளிட்ட சந்தேகத்துக்கு இடமான நிகழ்வுகளில் மட்டுமே கேஒய்வி செயல்முறை இருக்கும்.

இந்த புதிய விதிகள் ஃபாஸ்டேக் பயன்பாட்டை மேலும் வேகமாக மாற்றும். கார், ஜீப் மற்றும் வேன் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களின் ஓனர்களுக்கும் சிரமத்தை குறைக்கும். இதனாலேயே இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கேஒய்வி விதிகளை மாற்றி இருக்கிறது. பிப்ரவரி 1ஆம் தேதி முதல் கேஒய்வி செயல்முறை (KYV Process) முற்றிலும் நிறுத்தப்பட உள்ளது.

மேலும், ரூ.3000 விலைக்கு கார், ஜீப் மற்றும் வேன் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் கிடைக்கிறது. இந்த பாஸ் பெறும் வாகனங்கள் இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் டோல் கேட்களில் அதிகபட்சம் 200 ட்ரிப்களை செய்து கொள்ளலாம். இது ஒரு டோல் கேட்டுக்கு ரூ.15 செலவை மட்டுமே வாகன ஓனர்களுக்கு வைக்கிறது.

இந்த ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் ஆனது வணிக வாகனங்கள் மற்றும் டாக்சிகள் போன்றவற்றுக்கு கொடுக்கப்படாது. ராஜ்மார்க்யாத்ரா ஆப் (Rajmargyatra App) மற்றும் என்எச்ஏஐ (NHAI) போர்ட்டல் வழியாகவும் இந்த ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் கிடைக்கிறது. ஆர்சி புக் விவரங்கள், ஆதார் விவரங்கள் மற்றும் மொபைல் நம்பர் உள்ளிட்ட விவரங்களை கொடுக்க வேண்டி உள்ளது. மேலும், ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் வருமான வரி, பேங்க் அக்கவுண்ட் உள்ளிட்டவையில் புதிய விதிகளை இந்திய அரசு அமல் செய்ய உள்ளது.

Credit: Gizbot

Story first published: Sunday, January 4, 2026, 12:37 [IST]
Desktop Bottom Promotion