Latest Updates
-
தலைமுடி உதிர்வை தடுக்கணுமா? அப்ப நம்ம பாட்டிமார்கள் பின்பற்றிய இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க வாழ்வில் பிரச்சனை புயல் வீசப்போகுது.. -
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
நெப்போலியன் வீட்டில் விசேஷம்.. மகனுக்கு முதலாம் ஆண்டு திருமண நாள்.. எப்படி கொண்டாடிருக்காங்க பாருங்க
சென்னை: நெப்போலியனின் மூத்த மகன் தனுஷுக்கு கடந்த வருடம் ஜப்பானில் வைத்து பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. அந்தத் திருமணத்தில் திரையுலக நட்சத்திரங்கள் பலர் கலந்துகொண்டார்கள். திருமணத்துக்கு பிறகு அமெரிக்காவிலேயே செட்டிலாகியிருக்கும் தனுஷு, அக்ஷயாவும் மகிழ்ச்சியாக வாழ்ந்துவருகிறார்கள். இந்தச் சூழலில் அவர்களது முதலாம் ஆண்டு திருமண நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கோலிவுட்டின் சீனியர் நடிகர்களில் ஒருவரான நெப்போலியனுக்கு மொத்தம் தனுஷ், குணால் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இவர்களில் மூத்த மகன் தனுஷுக்காக தனது கரியர், அரசியல் பயணம் என அனைத்தையும் விட்டுவிட்டு அமெரிக்காவில் சென்று செட்டிலாகிவிட்டார். அங்கு தனது மகனுக்கு உயர்தர சிகிச்சையை அளித்து; நிறுவனம் ஒன்றையும் நடத்திவருகிறார் நெப்போலியன்.
பிரமாண்ட திருமணம்: தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்த நெப்போலியன் தமிழ்நாட்டை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணை பார்த்து அவரிடம் சம்மதம் வாங்கினார். அதனையடுத்து இரண்டு பேரின் திருமணமும் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த வருடம் நடந்தது. அந்தத் திருமணத்தில் தமிழ் திரை நட்சத்திரங்கள் ஏராளமானோர் கலந்துகொண்டார்கள். அவர்கள் இங்கிருந்து ஜப்பான் சென்று திரும்பும்வரை அத்தனை செலவுகளையும் நெப்போலியனே பார்த்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏகப்பட்ட விமர்சனங்கள்: இந்தத் திருமண அறிவிப்பு வந்தபோது ஏகப்பட்ட பேர் இஷ்டத்துக்கு தங்களது விமர்சனங்களை முன்வைத்தார்கள். ஒரு பெண்ணின் வாழ்க்கையை நெப்போலியனும், அவரது மனைவியும் அழித்துவிட்டார்கள் என்றெல்லாம் வாய்க்கு வந்ததை பேசினார்கள். ஆனால் தனுஷை திருமணம் செய்துகொள்வதில் அக்ஷயாவுக்கு முழு சம்மதம் இருந்ததை அறிந்த பிறகு வாயை மூடிக்கொண்டார்கள்.
தனுஷுக்கு மகிழ்ச்சி: தனுஷை பொறுத்தவரை திருமணத்துக்கு பிறகு மகிழ்ச்சியாக இருந்துவருகிறார். அக்ஷயாவும் தனுஷை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்வதால்; இனி தங்களுக்கு பின்னால் மகனுக்கு யார் இருப்பார் என்ற கவலை நெப்போலியனுக்கும் அவரது மனைவிக்கும் மறைந்திருக்கும் என்பதே எதார்த்தம். இந்நிலையில் தனுஷ் - அக்ஷயா தம்பதியின் முதலாம் ஆண்டு திருமண நாள் அமெரிக்காவில் இருக்கும் நெப்போலியன் வீட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ஜனநாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. தளபதி கச்சேரியா பகவந்த் கேசரியா?.. இதெல்லாம் நோட் செஞ்சிங்களா?
களைகட்டிய கொண்டாட்டம்: இந்தக் கொண்டாட்டத்தில் நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டார்கள். பெரிய கேக்கை தனுஷும், அக்ஷயவும் சேர்ந்து வெட்டி; மாலையும் மாற்றிக்கொண்டார்கள். இதுகுறித்து நெப்போலியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இனிய முதலாம் ஆண்டு திருமணநாள் வாழ்த்துக்கள் உலகெங்கும் வாழும் அன்பு நண்பர்களே, நமது தமிழ்ச் சொந்தங்களே, வணக்கம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், 7ஆம் தேதி அன்று ஜப்பான் நாட்டில் டோக்கியோவில் தனுஷ் & அக்ஷயா திருமணம், நம் அனைவரின் அன்போடும் , ஆசீர்வாதத்துடனும், இனிதே நடைபெற்றது..!
அதற்குள் ஓர் ஆண்டு விரைந்து ஓடிவிட்டது..! நவம்பர் 7, 2025 மாலையில், நாங்கள் வசிக்கும் Nashville நகரில் எங்களது இல்லத்தில்,அவர்களது முதலாவது ஆண்டு திருமணநாள் நிகழ்ச்சியை, உங்களின் அன்போடும், ஆசீர்வாதத்துடனும், Nashville நண்பர்களோடு மிகவும், எளிமையாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடினோம்" என்று குறிப்பிட்டிருக்கிறார். அவர்களுக்கு தமிழ்நாட்டிலிருந்தும் வாழ்த்துகள் இன்ஸ்டாகிராம் மூலம் பறந்திருக்கின்றன.
Credit: Filmibeat



Click it and Unblock the Notifications