Latest Updates
-
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்...
அதிமுகவில் இணைந்த அழகிரியின் நிழல்.. அஞ்சா நெஞ்சனின் ரைட் ஹேண்ட் ஆச்சே பி.எம்.மன்னன்! பரபர களம்!
சென்னை: திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் மீண்டும் தங்களை கட்சி பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சமீபத்தில் மதுரைக்கு வந்த போது கடிதம் கொடுத்தனர். இந்நிலையில், பல மாதங்கள் ஆகியும் பாசிட்டிவ் சிக்னல் கிடைக்காததால் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளரும், 2006-11 காலகட்டத்தில் மதுரை மாநகரின் துணை மேயராகவும் பொறுப்பு வகித்த பி.எம்.மன்னன் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்துள்ளார்.
கலைஞர் கருணாநிதி காலத்தில் டெல்லிக்கு முரசொலி மாறன், சென்னைக்கு மு க ஸ்டாலின், மதுரைக்கு மு.க.அழகிரி என்றுதான் இருந்தது. தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஆன கருணாநிதியின் மூத்த மகனான அழகிரி தென்மண்டல அமைப்பு செயலாளராகவும் இருந்தார்.
திருமங்கலம் இடைத்தேர்தலில் மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுத்த திருமங்கலம் ஃபார்முலாவை அறிமுகப்படுத்தியதும் அவர்தான். அதற்குத்தான் அந்த பதவி அவருக்கு வழங்கப்பட்டது. சென்னையில் பிறந்து வளர்ந்த அழகிரி மதுரை அரசியலை நிரந்தரமாக்கிக் கொண்டார்.

மு.க.அழகிரி
திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் என தென் மாவட்டங்களில் அவருக்கு பெரிய ஆதரவாளர் வட்டம் இருந்தது. இதற்கிடையே கலைஞருக்கு பிறகு ஸ்டாலின் தான் அரசியல் வாரிசு என்பதை உணர்ந்த பல திமுக புள்ளிகள் ஸ்டாலின் பக்கம் சாய்ந்து விட்டனர். இடையில் நாளேடு ஒன்றின் கருத்துக்கணிப்பு திமுகவில் மிகப்பெரிய புகைச்சலை ஏற்படுத்தியது. அதற்குப் பிறகு நடந்த சம்பவங்கள் தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார் முக அழகிரி.
திமுக உட்கட்சி அரசியல்
அவருடன் சேர்த்து அவரது ஆதரவாளர்களான மன்னன், இசக்கி முத்து, முபாரக் மந்திரி, திருப்பரங்குன்றம் கார்த்திகேயன் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். கலைஞர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு சென்னையில் பிரம்மாண்டமான ஒரு பேரணியை நடத்தி காட்டினார் அழகிரி. திமுக ஆட்சி அமைந்த போதும் அவருக்கு கட்சி பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதே நேரத்தில் சகோதரர்கள் இருவரும் சந்தித்துக் கொள்வதும், மதுரை செல்லும் போதெல்லாம் உதயநிதி ஸ்டாலின் முக அழகிரி சந்திப்பதும் வழக்கமாகி வந்தது.
அடிச்சு ஆடப் போறாரு விஜய்.. சுடச்சுட ரெடியான தேர்தல் அறிக்கை! வாக்குறுதிகள் என்ன? எப்போ ரிலீஸ்?
மு.க.ஸ்டாலின் முடிவு
இதற்கிடையே கட்சியிலிருந்து நீக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனாலும் திமுக அனுதாபிகளாகவே தாங்கள் தொடர்வதாகவும் தங்களை திமுகவின் சேர்த்து கட்சி பணியாற்ற அனுமதிக்க வேண்டுமென சமீபத்தில் மதுரை சென்ற திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலினிடம் கடிதம் கொடுத்தார் மன்னன்.இருந்த போதும் தற்போது வரை அவருக்கு கட்சிப் பணியாற்ற சிக்னல் கிடைக்கவில்லை. திமுகவின் அடுத்த தலைவர் ஒருவர் அழகிரியின் ஆதரவாளர்கள் மீண்டும் கட்சிக்குள் வருவதை விரும்பவில்லை என சொல்லப்படுகிறது.
மையம் கொண்டது 'சின்னம்மா' புயல்.. 24ல் பரமக்குடியில் கரையை கடக்குமா? தயார் நிலையில் எடப்பாடி டீம்.!
அதிமுக
இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு முக அழகிரி தீவிர ஆதரவாளராக இருந்த திருப்பரங்குன்றம் திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் தமிழக வெற்றி கழகத்தில் விஜய் முன்னிலையில் இணைந்தார். மேலும் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் பலர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாகவும் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மதுரை அரசியலில் பரபரப்பு திருப்பமாக அழகிரியின் ஆதரவாளர்கள் திமுகவின் பரம எதிரி அதிமுகவில் சேர்ந்துள்ளனர்.
பி.எம்.மன்னன் அதிமுக
குறிப்பாக 2006 முதல் 2011 வரை மதுரை மாநகராட்சி மேயராக இருந்த பிஎம் மன்னன் இன்று சென்னை பசுமைவழிச் சாலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து இருக்கிறார். கட்சியிலிருந்து நீக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் திமுக விசுவாசியாகவே தொடர்ந்த நிலையில் பலமுறை முயன்றும் திமுகவில் மீண்டும் சேர்க்கப்படவில்லை. பல தேர்தல்களில் போட்டியிடாததால் அரசியலில் இருந்தே ஒதுங்கும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்தே மன்னன் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் சேர்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் முக அழகிரியின் ஆலோசனையின் பேரில்தான் மன்னன் அதிமுகவில் சேர்ந்தார் என்றும் சொல்கின்றனர்.
Credit: Oneindia



Click it and Unblock the Notifications











