Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க, ஒரே வாரத்தில் உடல் எடையில் மாற்றத்தை பாப்பீங்க..! -
இன்றைய ராசிபலன் 28 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு சோதனைகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
புதன் சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
பெங்காலி வெஜ் புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க -
கோவிலுக்குள் செல்வதற்கு முன் ஏன் செருப்பை அவசியம் கழட்ட வேண்டும் தெரியுமா? இதுல பல ரகசியம் இருக்கு -
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் டிக்கா மசாலா - எப்படி செய்யணும் தெரியுமா? -
உங்க கழுத்து கருப்பா இருக்குதா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
August 2026 Monthly Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் ஆபத்துக்களையும், அவமானங்களையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
August 2026 Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் இந்த 5 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியும், லாபமும் கிடைக்கப்போகுது..
என் செருப்பு சைஸ் 41.. அடிவாங்க தயாரா.. எல்லை மீறும் தவெகவினர்.. தொடர்ந்து போராடும் குஷ்பு.. விஜய்?
சென்னை: ரஜினிகாந்த் படத்தில் இருந்து சுந்தர். சி விலகுவதாக அறிவித்ததில் இருந்தே விஜய் ரசிகர்கள் எல்லை மீறிய ஆபாச ட்ரோல்களை பதிவிட்டு வருகின்றனர். சுந்தர். சியின் மனைவியும் நடிகையுமான குஷ்பு தொடர்ந்து ட்விட்டர் பக்கத்தில் மோசமான கமெண்ட்டுகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறார். தவெகவின் விர்ச்சுவல் வாரியர்களே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது ஏன் என்கிற கேள்விகளையும் விஜய் கண்டிக்கமாட்டாரா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கப் போவதாக முடிவு செய்த நிலையில், இயக்குநருக்கான தேடுதல் வேட்டை நடைபெற்றது. ரசிகர்களே நினைத்துப் பார்க்காத அளவுக்கு சுந்தர். சி இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்கப் போகிறார் என்கிற அறிவிப்பு வெளியான நிலையில், ஒரு ஜாலியான ஃபேமிலி டிராமாவாக படம் இருக்கும் என ரஜினி ரசிகர்களே ஹேப்பியானார்கள்.

ஆனால், சுந்தர். சி திடீரென தலைவர் 173 படத்தை தான் இயக்கப் போவதில்லை என அறிவித்த நிலையில், ரஜினி ரசிகர்கள் ஒரு பக்கமும் விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் என சுந்தர். சி மற்றும் அவரது மனைவி குஷ்புவை மோசமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
குஷ்புவுடன் டான்ஸ்: குஷ்புவுடன் ஐட்டம் டான்ஸ் ஆட வேண்டும் என ரஜினிகாந்த் கேட்டிருப்பார் என்றும் அதனால் தான் சுந்தர். சி விலகி விட்டார் என முன்னதாக ஒரு நெட்டிசன் பதிவிட்ட நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, "இல்லை, உன் வீட்டுல தான் யாரையாவது ஆட வைக்கலாம்னு இருந்தோம்" என பதிவிட்டு இருந்தார். தொடர்ந்து குஷ்புவுக்கு எதிராகவும் சுந்தர். சிக்கு எதிராகவும் நெட்டிசன்கள், விஜய் ரசிகர்கள், தவெகவினர் என பலரும் படுமோசமான கமெண்ட்டுகளை பதிவிட தொடங்கிவிட்டனர். அவரும் முடிந்த வரை தொடர்ந்து அமைதியாக இருக்காமல் பதிலடி கொடுத்துக் கொண்டே இருக்கிறார். சைபர் கிரைமிலும் இது தொடர்பாக புகார் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினி, கமல் தூக்கியடிச்சிட்டாங்களா?: ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் சேர்ந்து உங்க கணவர் சுந்தர். சியின் கதை பிடிக்கவில்லை என தூக்கியடித்து விட்டதாக கேள்விப்பட்டேன், இந்திய சினிமா உலகம் உங்கள் கணவரை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டார்களே என தவெக வெற்றி என்பவர் பதிவிட்ட கருத்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக குஷ்பு போட்ட பதிலும் இணையத்தில் அனலை கிளப்பியுள்ளது.
செருப்படி வாங்கத் தயாரா: "என் செருப்பு சைஸ் 41, அடி வாங்கத் தயாரா" என குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார். கருத்தியல் ரீதியான மோதல்களை தாண்டி மோசமான ட்ரோல்கள் மற்றும் வன்மத்தை கக்கும் வேலைகள் தான் சோஷியல் மீடியாவில் அதிகரித்து வருகிறது என்றும் தவெகவினர் ஏன் தேவையற்ற அநாகரிக பதிவுகளை போட்டு வாங்கிக் கட்டிக் கொள்கின்றனர் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
விஜய் கண்டிப்பாரா?: தவெக தலைவர் விஜய் இதுபோன்று விர்ச்சுவல் வாரியர்ஸ் சமூக வலைதளத்தில் எல்லை மீறி மோசமான ட்ரோல்களில் ஈடுபட்டு வரும் நிலையில், இது அந்த கட்சிக்கும் தலைமைக்கும் தான் அவப்பெயரை ஏற்படுத்தித் தரும் என்றும் குஷ்பு மற்றும் சுந்தர். சி மீது நல்ல மரியாதை வைத்திருக்கும் விஜய் இதை கண்டிப்பாரா? என்கிற கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பியுள்ளனர்.
Credit: Filmibeat



Click it and Unblock the Notifications