Latest Updates
-
சத்தான மீல் மேக்கர் கட்லெட் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மொறுமொறுனு சாப்பிட சூப்பரா இருக்கும் -
ஆகஸ்ட் 05-ல் புதன் கடக ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தாபா ஸ்டைல் முட்டை பட்டாணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
Commonwealth Games 2026: காமன்வெல்த் போட்டிகளுக்கும், ஒலிம்பிக் போட்டிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன? -
பீர்க்கங்காய் தக்காளி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டும் நாளாக இருக்குமாம் -
56 ஆண்டுகளுக்கு பின் குரு பூர்ணிமா நாளில் உருவாகும் 3 ராஜயோகங்கள்: அதிர்ஷ்ட மழையில் நனையும் 3 ராசிகள்! -
லன்ச்பாக்ஸ்-க்கு தக்காளி சாதத்தை இப்படி செய்யுங்க.. பிரியாணி மாதிரி டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
கருவளையங்கள் உங்களை டல்லா காட்டுதா? அப்ப இந்த மாஸ்க்கை அடிக்கடி போடுங்க.. -
ஆடி பௌர்ணமியில் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது!
தங்கம், வெள்ளி விலை குறைகிறதா? – இறக்குமதிக்கான வரிச்சுமையை குறைத்தது மத்திய அரசு!!
இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை வரலாறு காணாத உச்சத்தை அடைந்திருக்கின்றன . கடந்த ஒரு வார காலமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இறங்கு முகத்தில் இருக்கின்றன . இருந்தாலும் எதிர்வரும் நாட்களில் இதே நிலை நீடிக்குமா என சொல்ல முடியாது.
தங்கத்தை பொறுத்தவரை ஏற்ற இறக்கத்துடன் தான் காணப்படுகிறது ஒருநாள் விலை இறங்கினால் ஒரு நாள் விலை உயர்கிறது. இத்தகைய சூழலில் மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிக்கான அடிப்படை விலையை மாற்றி அமைத்து இருக்கிறது. இதன்படி 10 கிராம் தங்கத்திற்கு 42 டாலர் வரையிலும், ஒரு கிலோ வெள்ளிக்கு 107 டாலர் வரையிலும் இந்த அடிப்படை விலையை அரசு குறைத்து நிர்ணயம் செய்திருக்கிறது .

உலகம் முழுவதுமே தங்கம், வெள்ளியின் விலை அதிக அளவில் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது இந்தியாவிலும் அதே போன்ற ஒரு சூழல்தான் இருக்கிறது . எனவே அதனை கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்து இருப்பதாக சொல்லப்படுகிறது . இந்த நடவடிக்கை ஒட்டுமொத்த இந்தியாவில் தங்கம், வெள்ளி வணிகத்திற்கும் இது பெரிய அளவில் கை கொடுக்கும் என அரசு நம்புகிறது .
இந்த அடிப்படை இறக்குமதி விலை என்பது சுங்கவரி மற்றும் இறக்குமதி வரியை நிர்ணயம் செய்வதில் பெரும்பங்கு வகிக்கிறது. அதாவது இதனை பெஞ்ச்மார்க்காக கொண்டு தான் சுங்கவரி மற்றும் இறக்குமதி வரியை முடிவு செய்வார்கள். இதை குறைப்பதன் வாயிலாக தங்கம் , வெள்ளி இறக்குமதியாளர்களுக்கு ஓரளவு வரிசுமை குறையும் என சொல்லப்படுகிறது, இதன் எதிரொலியாக உள்நாட்டில் தங்கம் மற்றும் வெள்ளி சந்தையிலும் விலைவாசி சமன் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சும்மா லாக்கர்ல வச்சிருக்க தங்கத்த இதுக்கு யூஸ் பண்ணீங்கனா எவ்வளவு சேமிக்கலாம் தெரியுமா?
மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறையும் அடிப்படை விலையை அப்டேட் செய்யும். இது போன்ற நடவடிக்கைகளை எடுத்து தங்கம், வெள்ளி விலையை சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்றபடி உள்நாட்டு சந்தையிலும் ஒழுங்குபடுத்துவார்கள். பல காலமாக இந்த விலை அப்படியே இருந்த நிலையில் இந்த முறை குறைக்கப்பட்டுள்ளது.
மனுசங்களுக்கு KYC மாதிரி, வாகனங்களுக்கு KYV..! இத செய்யலனா ஃபாஸ்டேக் செயலிழக்குமா?
இது நகை விற்பனையாளர்கள் ,வணிகர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் பலன் அளிக்கும் என சொல்லப்படுகிறது. கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை அதிக அளவில் ஏற்ற இறக்கத்தை சந்திக்கும் சூழலில் அரசின் இந்த நடவடிக்கை தங்க மற்றும் வெள்ளியின் நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் என சொல்லப்படுகிறது. இறக்குமதியாளர்களுக்கு வரிச் சுமை குறைவதால் உள்நாட்டில் தங்கம், வெள்ளி குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது .
சென்னையை பொறுத்தவரை இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 11,310 ரூபாய்க்கும் ஒரு சவரன் தங்கம் 90,480 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஒரு சவரன் விலை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் நிலையில் இந்த அடிப்படை இறக்குமதி விலை குறைப்பு தங்கம் விலையை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Credit: Goodreturns



Click it and Unblock the Notifications