Latest Updates
-
World Lung Cancer Day 2026: அலட்சியம் செய்யக்கூடாத நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளை பகிர்ந்த டாக்டர்! -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் சூரியன்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது! -
800 மாவட்டங்கள் உள்ள இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எது தெரியுமா? இது எந்த மாநிலத்தில் உள்ளது தெரியுமா? -
பீட்ரூட் தோசையும், புதினா சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
இன்றைய ராசிபலன் 01 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நீண்டநாள் ஆசை நிறைவேறப்போகுதாம் -
August 2026 Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
காரசாரமான பன்னீர் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
தலைமுடி வறண்டு பிரஷ் மாதிரி இருக்கா? அப்ப இந்த வாழைப்பழ ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
ஆகஸ்ட் மாதம் நிகழும் ஆண்டின் 2-வது சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
வெண்டைக்காயை இப்படி கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்..
ஒரு மாதமாக ஆட்டம் காட்டும் தங்கம்!! இனி விலை குறையுமா? உயருமா? – நிபுணர் பதில்
நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ஒரு நாள் ஏறுவது அடுத்த நாள் இறங்குவது என தொடர்ந்து ஏற்ற இறக்கமாகவே காணப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை படிப்படியாக உயர தொடங்கியது. ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய மூன்று மாதங்களிலும் நாள்தோறும் தங்கத்தின் விலை உயர்ந்து வரலாறு காணாத உச்சங்களை எட்டியது .
அக்டோபர் 18ஆம் தேதியிலிருந்து உலக சந்தையிலும் சரி இந்திய சந்தையிலும் சரி தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து வருகிறது . இந்த ஆண்டு தங்கத்தின் விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. சர்வதேச பொருளாதார நிலையற்ற தன்மை, அமெரிக்கா பொருளாதாரம் மந்த நிலை, அமெரிக்கா சீனா இந்தியா உள்ளிட்ட நாடுகளோடு மேற்கொண்ட வர்த்தக மோதல், சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் அதிக அளவில் தங்கத்தை வாங்கி வைத்தது என அடுக்கி கொண்டே போகலாம்.

நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து தற்போது வரை தங்கத்தின் விலை வாரத்தில் மூன்று நாட்கள் உயர்வது மூன்று நாட்கள் சரிவது என்ற நிலையிலேயே இருக்கிறது . சென்னை பொருத்தவரை ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை சராசரியாக 89 ஆயிரம் ரூபாயிலிருந்து 90 ஆயிரம் ரூபாய்க்குள் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது . இந்த சூழலில் அடுத்து வரக்கூடிய நாட்களில் தங்கத்தின் விலை எப்படி இருக்கும் , குறிப்பாக 2026 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை என்ன ஆகும் என்று எதிர்பார்ப்பு மக்களிடையே நீடிக்கிறது.
10 ஆண்டுகளுக்கு முன் ரூ.8 லட்சத்திற்கு வாங்கிய தங்கத்தின் இப்போதைய மதிப்பு என்ன?
இந்த விலை குறைவை பயன்படுத்தி தங்கத்தை வாங்கி விடலாமா அல்லது மேலும் விலை குறையுமென காத்திருக்கலாமா என மக்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். இந்த சூழலில் 3r இன்வெஸ்ட்மெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான நீரஜ் சேத் சிஎன்பிசி tv 18க்கு அளித்துள்ள பேட்டியில் அடுத்த 12 மாதங்களுக்கு தங்கத்தின் விலை எப்படி இருக்கும் என்பதை விவரமாக தெரிவித்து இருக்கிறார். தற்போதைக்கு தங்கம் ஒரு குறுகிய காலத் திருத்தத்தில் இருக்கிறது என கூறும் அவர் இந்த ஏற்ற இறக்கம் பலகாலத்திற்கு நீடிக்காது கூடிய விரைவில் தங்கம் விலை மீண்டும் உயரப் போகிறது என கணிப்பு வெளியிட்டு இருக்கிறார் .
இனி வீடே வாங்க கூடாது என தடை விதிக்கும் அளவுக்கு சொத்து வாங்கிய நடிகர்!! யார் இந்த பி.யு.சின்னப்பா?
மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கத்தை வாங்குகின்றன அதே வேளையில் அமெரிக்க டாலரை மதிப்பிழக்க செய்ய வேண்டும் என்பதில் சீனா மிக தீவிரமாக இருக்கிறது. இந்த இரண்டு விஷயங்கள் தங்கத்தின் விலையை நிச்சயமாக உயர்த்தப் போகின்றன என கூறியிருக்கிறார். தற்போது விலை ஆரோக்கியமான முறையில் திருத்தமடைந்து வருகிறது அடுத்த 12 முதல் 18 மாதங்களில் நிச்சயம் தங்கத்தின் விலை பெருமளவில் உயரும் எனக் கூறியிருக்கிறார்.
தன்னுடைய போர்ட்போலியோவில் கணிசமான பகுதியை நான் தங்கத்திற்கு தான் வழங்க போகிறேன் என கூறியிருக்கிறார். 2026இல் அமெரிக்க டாலர் மேலும் வலுவிழக்கும் அப்படி டாலரின் மதிப்பு இறங்கும் போது தங்கத்தின் மதிப்பு நிச்சயம் உயரும் என்கிறார்.
Credit: Goodreturns



Click it and Unblock the Notifications