Latest Updates
-
August 2026 Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
காரசாரமான பன்னீர் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
தலைமுடி வறண்டு பிரஷ் மாதிரி இருக்கா? அப்ப இந்த வாழைப்பழ ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
ஆகஸ்ட் மாதம் நிகழும் ஆண்டின் 2-வது சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
வெண்டைக்காயை இப்படி கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடலினுள் என்ன நடக்கும்? - விளக்கும் டாக்டர்! -
சிம்ம ராசியில் இருக்கும் கேதுவால் டிசம்பர் மாதத்திற்குள் இந்த 4 ராசிக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்காம்.. -
ரவா அடையும், ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 31 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் மாதத்தில் உதயமாகும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு கடன் தொல்லை நீங்கி பண வரவு அதிகரிக்கும்!
2026இல் தான் தங்கத்தோட உண்மையான ஆட்டமே இருக்கு!! இவங்களே இப்படி சொல்லிட்டாங்களே!!
2026 ஆம் ஆண்டில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது குறித்து தான் சாமானிய மக்கள் தொடங்கி பெரிய பெரிய முதலீட்டாளர்கள் வரை தற்போது கவலை கொண்டிருக்கிறார்கள் . ஏனெனில் 2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை வரலாற்று உச்சங்களை எட்டியது. ஏற்கனவே ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சம் ரூபாய் என்ற நிலை எட்டிவிட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டில் இன்னும் விலை அதிகரிக்குமா அல்லது இதே விலையில் நீடிக்குமா என்ற சந்தேகம் சாமானிய மக்களுக்கு இருக்கிறது.
பல்வேறு உலக அளவிலான வங்கிகளும் நிதி சார்ந்த அமைப்புகளும் தங்கம் விலை தொடர்பான கணிப்புகளை தொடர்ந்து வெளியிட்ட வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் ventura என்ற தரகு நிறுவனம் 2026 ஆம் ஆண்டிலும் தங்கம் விலை கண்டிப்பாக வரலாற்று உச்சங்களை எட்டும் என கணிப்பு வெளியிட்டு இருக்கிறது. இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் ஸ்பாட் தங்கம் விலை 4,197 டாலர்களாக விற்பனை செய்யப்படுகிறது. 2026 ஆம் ஆண்டில் இது 4600 டாலரில் இருந்து 4800 டாலர்கள் வரை உயரும் என வென்சுரா நிறுவனம் கணித்திருக்கிறது.

பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கத்தை வாங்கும், பணவீக்கம் அதிகரிக்கும் , அமெரிக்க பொருளாதாரத்தில் வர்த்தக பற்றாக்குறை ஏற்படும் ஆகிய மூன்று காரணங்கள் தொடர்ந்து தங்கத்தின் விலையை உயர்த்தும் என வென்சுரா நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அமெரிக்க மத்திய வங்கி 2026 ஆம் ஆண்டிலும் வட்டி குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டில் அமெரிக்க மத்திய வங்கி 75 அடிப்படை புள்ளிகள் வரை வட்டி குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறி இருக்கிறது. இது தொடர்ந்து முதலீட்டாளர்களை தங்கத்தின் வசம் அழைத்து வரும் எனவே தங்கத்தின் விலை உயரும் என கூறியுள்ளது.
தங்க நகைகளை பாதுகாக்க இப்படி ஒரு வழி இருக்கா?? இனிமே திருட்டு பயமே தேவையில்லை!!
2026 ஆம் ஆண்டோடு தங்கத்தின் ஆட்டம் முடிந்துவிட்டது என எண்ண வேண்டாம் 2026 ஆம் ஆண்டிலும் தங்கத்தின் ஆட்டம் தொடரும் என வென்சுரா நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஏனெனில் முதலீட்டு நிறுவனங்கள் தற்போது பெருமளவிலான பணத்தை கையில் வைத்திருக்கின்றன பங்குச்சந்தைகள் பெரிய அளவில் வருமானம் தருபவையாக தற்போதைக்கு தெரியவில்லை எனவே அவர்கள் அனைவருமே பணத்தை தங்கத்தை நோக்கி தான் திருப்பி விடுவார்கள் என கூறியிருக்கிறது.
தங்கம் விலை: ஒரு சவரன் ரூ.1.25 லட்சமா? – உலக தங்க கவுன்சில் வெளியிட்ட மேஜர் வார்னிங்!!
குறிப்பாக அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு நிறுவனங்கள் பணவீக்கம் , பத்திரங்களில் வட்டி குறைப்பு ஆகியவை காரணமாக படிப்படியாக தங்கள் கைவசம் இருக்கும் பணத்தை தங்கத்தில் முதலீடு செய்வார்கள் என தெரிவித்திருக்கிறது. இது தங்கத்தின் விலையை உயர்த்தும் என கூறியிருக்கிறது.
முன்னதாக Deutsche வங்கி 2026 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 4450 டாலர்கள் என்ற நிலையை எட்டும் என கணிப்பு வெளியிட்டு இருந்தது தற்போது அதனை 4950 டாலர்கள் என உயர்த்திருக்கிறது . மார்கன் ஸ்டான்லி 2026ஆம் ஆண்டு மத்தியிலேயே ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4500 டாலர்களை எட்டி விடும் என கூறியிருக்கிறது .
Credit: Goodreturns



Click it and Unblock the Notifications