Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...! -
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...! -
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்.. -
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க... -
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.. -
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா?
குறைந்தது தங்கம், வெள்ளி விலை!! இப்படி ஒரு சான்ஸ் மீண்டும் கிடைக்காது!! டிரம்ப் வாய திறந்துட்டா பிரச்சினை!!
சென்னையில் நேற்று தடாலடியாக உயர்ந்து மக்களுக்கு கண்ணீரை வரவழைத்த தங்கம், வெள்ளி விலை இன்றைய தினம் குறைந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை பல மடங்கு வேகமாக உயர்ந்தது. 2026 ஆம் ஆண்டு இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2026 தொடங்கி இந்த ஒரு மாத காலத்தில் தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் புதிய வரலாற்று உச்சங்களை தொட்டது.
குறிப்பாக ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து நேற்று வரை மட்டும் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 35 ஆயிரம் ரூபாய் வரை உயர்வு கண்டது. பல்வேறு சர்வதேச காரணிகள் தான் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணம். ஆனால் ஒரே மாதத்தில் இத்தனை மடங்கு தங்கம் விலை உயர்ந்தது வீட்டில் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை வைத்திருந்தவர்களுக்கு, தங்க நகை வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தவர்களுக்கெல்லாம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தங்கத்தை விட பல மடங்கு வேகமாக வெள்ளியின் விலை உயர்ந்ததால் வெள்ளியை கூட வாங்க முடியாத நிலைக்கு மக்கள் ஆளாகினர். இந்த நிலையில் தான் மக்களுக்கு ஆறுதல் தரும் வகையில் இன்றைய தினம் தங்கம், வெள்ளி விலை குறைந்திருக்கிறது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 600 ரூபாய் விலை குறைந்திருக்கிறது. நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராம் 16,800 ரூபாய் என வரலாற்று உச்சபட்ச விலையில் விற்பனையானது. அதுவே இன்று 600 ரூபாய் விலை குறைந்து 16,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் நேற்று 1, 34,400 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று 4,800 ரூபாய் விலை குறைந்து 1, 29,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராம் தங்கம் 6000 ரூபாய் விலை சரிந்து 1,62,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இப்போது தங்கம், வெள்ளி வாங்கலாமா? பிப்ரவரி 1 மத்திய பட்ஜெட் வரை காத்திருக்கலாமா?
திங்கட்கிழமை ஜனவரி 26 ஆம் தேதி தொடங்கி இன்று வரையிலான இந்த ஐந்து வர்த்தக நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை மூன்று நாட்கள் உயர்ந்திருக்கிறது இரண்டு நாட்கள் சரிவடைந்து இருக்கிறது. 24 கேரட் தங்கம் கிராமுக்கு 655 ரூபாய் விலை குறைந்து 17,673 ரூபாய்க்கும் ஒரு சவரன் 5,240 ரூபாய் விலை குறைந்து 1, 41,384 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 18 கேரட் தங்கம் கிராமுக்கு 400 ரூபாய் விலை குறைந்து 13, 500 ரூபாய்க்கும், சவரனுக்கு 3,200 ரூபாய் விலை சரிந்து 1,08,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தை போலவே இன்றைய தினம் வெள்ளியும் விலை குறைந்திருக்கிறது. நேற்று வரலாற்றிலேயே இல்லாத உச்சமாக சென்னையில் ஒரு கிராம் இல்லை 425 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று 10 ரூபாய் விலை குறைந்து 415 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 10,000 ரூபாய் விலை குறைந்து 4,15,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
மக்களே..! தங்க நகை வாங்குவதை மறந்திடுங்க.. வெளியானது ஷாக் ரிப்போர்ட்..!
தங்கம் மற்றும் வெள்ளி விலை உலக சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இன்றைய தினம் குறைந்து இருக்கின்றன. சர்வதேச சந்தையில் பார்க்கும்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 167 டாலர்கள் குறைந்து 5206 டாலர்களாக விற்பனை ஆகிறது. அதேபோல வெள்ளியின் விலை பொறுத்தவரை 3 டாலர்கள் குறைந்து 110 டாலராக விற்பனையாகி வருகிறது.
அமெரிக்கா மத்திய வங்கி வட்டி குறைப்பு நடவடிக்கையை கைவிட்டது, உலக அளவில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாற்று உச்சத்தை தொட்டதால் முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்தது ஆகியவையே தங்கம் , வெள்ளி விலை குறைவதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. மேற்கொண்டு டிரம்ப் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தால் விலை மேலும் குறையும்.
Credit: Goodreturns



Click it and Unblock the Notifications











