Latest Updates
-
தலைமுடி உதிர்வை தடுக்கணுமா? அப்ப நம்ம பாட்டிமார்கள் பின்பற்றிய இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க வாழ்வில் பிரச்சனை புயல் வீசப்போகுது.. -
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Gold Price Today: தங்கம் விலையில் மாற்றம் இல்லை.. இதுதான் சரியான நேரம்.. உடனே கடைக்கு போங்க!
சென்னை: தங்கம் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், நேற்று காலை கிராமுக்கு 225 ரூபாய் குறைந்து, ஒரு சவரனுக்கு ரூ.1,800 வரை சரிந்து ரூ. 88,800க்கு விற்பனையானது. ஆனால் மாலையில் ஒரு கிராம் ரூ.11,300க்கும், ஒரு சவரன் ரூ.90,400க்கு விற்பனையானது. இதனால் இன்று தங்கம் விலையில் சரிவு இருக்குமா என்ற மக்கள் எதிர்பார்த்த நிலையில், எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
அமெரிக்க வர்த்தக போர் காரணமாக அந்நாட்டு டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது. அதேபோல் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை அதிகளவு வாங்கி குவித்து வருகின்றன. இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வது கணிசமாக குறைந்துள்ள நிலையில், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது.

இதனால் தங்கல் விலை கடந்த 8 மாதங்களாகவே தாறுமாறாக அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் முதல் தங்கம் விலை காலை, மாலை என்று இரு நேரங்களில் ஏற்ற, இறக்கம் கண்டு வருகிறது. கடந்த வாரத்தில் காலையில் குறைந்தால் மாலையில் மீண்டும் அதிகரிக்கும் சூழல் தொடர்ந்து வருகிறது. இதனால் சாமானிய மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதில் குழப்பம் அடைந்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையின் போது பலரும் தங்கம் வாங்கிய நிலையில், அதன்பின் அடுத்தடுத்து நகை விலை குறைய தொடங்கியது. அக்டோபர் 17ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.12,200க்கும், ஒரு சவரன் ரூ.97,600க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் அக்டோபர் 22ஆம் தேதி முதல் மீண்டும் தங்கம் விலை சரியத் தொடங்கியது. அந்த வகையில் நேற்று தங்கம் விலை காலையில் ரூ.225 குறைந்து, சவரனுக்கு ரூ.1,800 வரை சரிந்தது.
இதனால் தங்கம் கிராமுக்கு ரூ. 11,100க்கும், ஒரு சவரன் ரூ.88,800க்கும் விற்பனையானது. ஆனால் மாலையில் கிராமுக்கு ரூ.200 உயர்ந்து சவரனுக்கு ரூ.1600 அதிகரித்தது. இதனால் ஒரு கிராம் ரூ.11,400க்கும், ஒரு சவரன் ரூ.90,400க்கும் விற்பனையாகி வந்தது. காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்ற, இறக்கங்களை சந்திப்பதால், பொதுமக்கள் எப்போது வாங்கலாம் என்று குழப்பம் அடைந்து வருகின்றனர். அதேபோல் இன்றும் தங்கத்தின் விலை சரியுமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. ஆனால் மாதத்தின் கடைசி நாளான இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Credit: Oneindia



Click it and Unblock the Notifications