Latest Updates
-
ராகி இட்லியும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தேவையற்ற செலவுகள் தேடிவருமாம்...! -
பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
தமிழ்நாட்டின் மாம்பழ நகரம் எது? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது தெரியுமா? -
கஜலக்ஷ்மி ராஜயோகம் 2026: இந்த 4 ராசிகளுக்கு செல்வமும், வெற்றியும் குவியப்போகுதாம்...உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் கொத்தமல்லி இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க... வீட்ல எல்லொரும் 2 இட்லி அதிகமா சாப்பிடுவாங்க...! -
உயர் இரத்த அழுத்தம் இருக்கா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க.. -
2026 IPL போட்டிகளில் விளையாடப்போகும் டாப் 10 வயதான வீரர்கள்... யாரெல்லாம் விளையாடப்போறாங்க பாருங்க...! -
மணமணக்கும்.. மட்டன் நோன்பு கஞ்சி - சிம்பிளா குக்கரில் எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க.. -
1 கப் துருவிய தேங்காய் இருந்தா இந்த மாதிரி மசாலா தேங்காய் சாதம் செய்யுங்க... பிரியாணியை விட சூப்பரா இருக்கும்!
Gold Rate Today: டிரம்ப் போட்ட குண்டு.. பறக்குது தங்கம், வெள்ளி விலை.. இன்று புதிய உச்சம்!
சென்னை: தங்கம் விலை நிற்காமல் தொடர்ச்சியாக உயர்ந்தே வருகிறது. சர்வதேச அளவில் நடந்த சில பல மாற்றங்களால் தங்கம் விலை நிற்காமல் உயர்ந்து வருகிறது. நேற்றைய தினம் சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், இன்று அது இந்தியச் சந்தையிலும் எதிரொலிக்கும். சென்னையில் இன்று ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.1280 உயர்ந்து, ரூ.1,08,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனாவுக்கே பிறகே ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாங்க முடியாத விலைக்குத் தங்கம் போய்விட்டது. கொஞ்சமாவது தங்கம் விலை குறையும் என நினைப்போருக்கு ஏமாற்றத்தையே தங்கம் விலை தொடர்ந்து கொடுத்து வருகிறது. இஎம்ஐ போட்டு தங்கம் வாங்கும் காலம் வந்துவிட்டது என்றே சொல்லலாம். அந்தளவுக்குத் தான் நிலைமை இருக்கிறது.

சர்வதேச சூழல்
இப்போதும் கூட சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்தே வந்துள்ளது. இந்த முறையும் டிரம்ப் தான் காரணம். உக்ரைன் விவகாரத்தில் கேப் விட்டு இருக்கும் டிரம்ப், இப்போது கிரீன்லாந்து பக்கம் திரும்பியுள்ளார். கிரீன்லாந்தை ரஷ்யா அல்லது சீனா ஆக்கிரமிக்க வந்தால் அதை டென்மார்க்கால் (டென்மார்க்கின் ஒரு பகுதி தான் கிரீன்லாந்து) தடுக்க முடியாது. இதனால் அமெரிக்கா வசம் கிரீன்லாந்து ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதே டிரம்ப் நிலைப்பாடு!
டிரம்ப்
இதற்கு ஐரோப்பிய நாடுகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த நிலையில், டென்மார்க், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் மீது 10% வரியை டிரம்ப் அறிவித்தார். கிரீன்லாந்தை தரவில்லை என்றால் வரி உயரும் என மிரட்டியுள்ளார். அமெரிக்காவின் இந்தச் செயலுக்கு ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதேநேரம் கிரீன்லாந்து மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கையை எடுத்தால் அது உக்ரைன் மீதான ரஷ்யாவின் செயல் சரி என்பது போல ஆகிவிடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளன. ஆனாலும், டிரம்ப் விடுவது போலத் தெரியவில்லை. இதனால் சர்வதேச பதற்றம் உச்சத்தில் இருக்கிறது.
கடன் கழுத்தை நெறிக்குதா? நீங்க செய்ய வேண்டியது "இது" மட்டும் தான்! தெளிவாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன்
தங்கம் விலை
நேற்றைய தினம் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1360 உயர்ந்து, ரூ.1,07,600க்கு விற்பனையானது. அதாவது 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.170 உயர்ந்து, ரூ.13,450க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் நேற்றிரவு தங்கம் விலை கணிசமாக உயர்ந்த நிலையில், இந்தியாவிலும் அது எதிரொலித்துள்ளது.
சென்னையில் இன்று ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.1280 உயர்ந்து, ரூ.1,08,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.160 உயர்ந்து, ரூ.13,610க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.12 உயர்ந்து, ரூ.330க்கு விற்பனை செய்யப்படுகிறது.
"ஆபத்து.." இனி இந்த தங்கத்தை வாங்க வேண்டாம்.. பேரிடியை இறக்கிய ஆனந்த் சீனிவாசன்! அப்போ போட்ட பணம்?
கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் தங்கம் விலை
20.01.2026 (இன்று) - ஒரு சவரன் ரூ.1,08,880
19.01.2026 - ஒரு சவரன் ரூ.1,07,600
18.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,240
17.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,240
16.01.2026 - ஒரு சவரன் ரூ.1,05,840
15.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,320
14.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,240
13.01.2026 - ஒரு சவரன் ரூ.1,05,360
12.01.2026 - ஒரு சவரன் ரூ.1,04,960
11.01.2026 - ஒரு சவரன் ரூ.1,03,200
10.01.2026 - ஒரு சவரன் ரூ.1,03,200
09.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,400
08.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,200
07.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,600
06.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,640
05.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,080 (மாலை)
05.01.2026- ஒரு சவரன் ரூ.1,01,440 (காலை)
04.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,800
Credit: Oneindia



Click it and Unblock the Notifications











