Gold Rate Today: வந்தாச்சு ரியல் "பொங்கல்" பரிசு! தடாலடியாக சரிந்த தங்கம் விலை.. ஒரே நாளில் தலைகீழ் மாற்றம்

By Vigneshkumar

சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சம் தொட்டு வந்த நிலையில், மக்கள் ஏமாற்றமடைந்தனர். இதற்கிடையே சர்வதேச அளவில் சில முக்கிய மாற்றங்கள் நடந்துள்ளது. இதன் காரணமாக இன்று தங்கம் விலையில் சரிவு இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதேபோல தங்கம் விலை சரிந்துள்ளது. ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,05,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியர்களின் முக்கிய சேமிப்பாக இருக்கும் தங்கம் கடந்தாண்டில் எங்கு விட்டதோ.. அதே இடத்தில் இந்தாண்டை தொடங்கியுள்ளது. ஆரம்பம் முதலே தங்கம் விலை அதிரடியாக ஏறி வருகிறது. இதனால் தங்கத்தை வாங்க முடியாமல் இந்தியர்கள் கதறினர். இதற்கிடையே ஒரே நாளில் சில முக்கியமான மாற்றங்கள் உலக அரசியலில் நடந்துள்ளது.


Gold Price Gold

முக்கிய மாற்றம்

அமெரிக்காவின் வேலைவாய்ப்பு ரிப்போர்ட் வெளியிடப்பட்டது. அதில் வேலைவாய்ப்பு பெரியளவில் உருவாகவில்லை என்றாலும் வேலையின்மை பெரியளவில் அதிகரிக்கவில்லை. அதாவது அமெரிக்கர்கள் அதிகளவில் பணிநீக்கம் செய்யப்படவில்லை என்பதை இது காட்டுகிறது. இது டாலர் மதிப்பு உயரக் காரணமாக இருக்கும். பொதுவாகவே டாலர் மதிப்பு சரியும்போது தங்கம் விலை உயரவே செய்யும்.

உலக அரசியல்

அடுத்தது புவிசார் அரசியல்.. புவிசார் அரசியலைப் பொறுத்தவரை இத்தனை காலம் டிரம்ப் ஈரான் உடன் மோதல் போக்கை கொண்டிருந்தார். அமெரிக்கப் படைகளை இறக்கப் போகிறேன் என்ற ரேஞ்சுக்கு பேசியதால் பதற்றம் உச்சம் தொட்டது. ஆனால், சமீபத்தில் பேட்டி ஒன்றில் ராணுவ நடவடிக்கைக்குத் திட்டமிடவில்லை என்று அவர் கூறியிருந்தார். இதுவும் தங்கம் மீதான ஆர்வம் குறையக் காரணமாக இருந்தது. இதுபோக இந்த மாதம் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்காது எனத் தெரிகிறது. இந்த 3 காரணங்களால் தான் தங்கம் விலை ஏற்றம் நின்றுள்ளது.

நேற்றைய விலை

இதன் காரணமாகவே நேற்று கூட தங்கம் விலை பெரியளவில் உயரவில்லை. அதாவது அதற்கு முன்பு வரை தங்கம் விலை ஒவ்வொரு நாளும் சவரனுக்கு பல நூறு ரூபாய் உயர்ந்த நிலையில், நேற்றைய தினம் ரூ.80 மட்டுமே உயர்ந்தது. சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.1,06,320க்கு விற்பனையாகிறது. சென்னையில் தங்கம் ஒரு கிராம் இன்று ரூ.13,290க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய விலை

சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை சரிந்த நிலையில், இந்திய சந்தையிலும் அதுவே எதிரொலித்துள்ளது. சென்னையில் இன்று தங்கம் விலை குறைந்தது. ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,05,840க்கும், ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து, ரூ.13,230க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.306க்கு விற்பனையாகிறது.

ஜனவரி 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலை

16.01.2026 - ஒரு சவரன் ரூ.1,05,840

15.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,320

14.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,240

13.01.2026 - ஒரு சவரன் ரூ.1,05,360

12.01.2026 - ஒரு சவரன் ரூ.1,04,960

11.01.2026 - ஒரு சவரன் ரூ.1,03,200

10.01.2026 - ஒரு சவரன் ரூ.1,03,200

09.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,400

08.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,200

07.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,600

06.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,640

05.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,080 (மாலை)

05.01.2026- ஒரு சவரன் ரூ.1,01,440 (காலை)

04.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,800

03.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,800 (மாலை)

03.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,160 (காலை)

02.01.2026- ஒரு சவரன் ரூ.96,320

01.01.2026- ஒரு சவரன் ரூ.96,580

Credit: Oneindia

Desktop Bottom Promotion