Gold Rate Today: மீண்டும் கதற விடும் தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.5040 உயர்வு.. வெள்ளியும் உச்சம்! புலம்பும் மக்கள்

By Vigneshkumar

சென்னை: இந்தியாவில் நேற்று முன்தினம் வரை தொடர்ச்சியாகச் சரிந்த தங்கம் விலை பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆனால், அதற்கெல்லாம் சேர்ந்து கடந்த இரு நாட்களாகத் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதற்கிடையே சென்னையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5040 உயர்ந்துள்ளது. இதனால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தாண்டு தொடக்கம் முதலே தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. கடந்தாண்டே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து இருந்தது. இந்தாண்டு தங்கம் விலை கொஞ்சமாவது குறையும் என நினைத்தோருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அந்தளவுக்குத் தொடக்கம் முதலே தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது. ஜனவரி மாதம் முடிவதற்குள்ளே 10%க்கு மேல் உயர்ந்தது.


Gold Rate Today in Chennai 22 carat Gold price and silver price Today February 4

தங்கம்

இந்தச் சூழலில் தான் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் தங்கம் விலை தடாலடியாகச் சரிய ஆரம்பித்தது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளைத் தவிர மற்ற 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை ஒவ்வொரு நாளும் கிராமுக்கு ரூ.950 வரை குறைந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இன்னும் கொஞ்சம் விலை குறையும் என்றே மக்கள் எதிர்பார்த்தனர்.

அரண்ட தங்க மார்கெட்.. 18 ஆண்டுகளில் இப்படி நடந்ததே இல்லை.. கெவின் வந்த பிறகும் எதிர்பாராத மாற்றம்

யூடர்ன்

ஆனால், இது நீண்ட நாள் நீடிக்கவில்லை. நேற்றைய தினமே யூடர்ன் போட்டு தங்கம் விலை உயர ஆரம்பித்தது. சர்வதேச சந்தை காரணமாகவே இந்தியாவிலும் தங்கம் விலை அதிகரித்தது. சர்வதேச மார்கெட்டில் சில நாட்களில் தங்கம் விலை கிட்டத்தட்ட 10% வரை சரிந்ததால் முதலீட்டாளர்கள் உள்ளே வந்து வாங்குவதே தங்கம் விலை உயரக் காரணமாக இருந்தது.

மீண்டும் விலை ஏற்றம்

இதற்கிடையே இன்றைய தினம் சென்னையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5040 உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.5040 உயர்ந்து ரூ.1,19,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.630 உயர்ந்து, ரூ.14,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 அதிகரித்து, ரூ.320க்கு விற்பனையாகிறது.

பழைய சிம் கார்டில் தங்கம் எடுத்து ₹27 லட்சம் சம்பாதித்த சீன நபர்: உலகை வியக்க வைக்கும் டெக்னாலஜி!

கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை

3.02.2026 - ஒரு சவரன் ரூ.1,14,160 (பிற்பகல்)

03.02.2026 - ஒரு சவரன் ரூ.1,12,240 (காலை)

02.02.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600

01.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,200

31.01.2026 - ஒரு சவரன் ரூ.1,19,200

30.01.2026 - ஒரு சவரன் ரூ.1,29,600 (காலை)

30.01.2026 - ஒரு சவரன் ரூ.1,26,800 (மாலை)

29.01.2026 - ஒரு சவரன் ரூ.1,34,400

Credit: Oneindia

Desktop Bottom Promotion