Gold Rate Today: இன்ப அதிர்ச்சி கொடுத்த வெள்ளி.. மறுபுறம் நிற்காமல் பறக்கும் தங்கம் விலை.. இன்று ரேட் என்ன!

By Vigneshkumar

சென்னை: சர்வதேச அளவில் நடக்கும் மாற்றங்களால் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் நகைப் பிரியர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இதற்கிடையே இன்றைய தினம் தங்கம் வலை கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,19,120க்கு விற்பனையாகிறது.

கடந்தாண்டு உச்சத்திற்குப் பறந்த தங்கத்தின் ஓட்டம் இந்தாண்டும் கூட தொடர்ந்தது. இந்தாண்டு ஜனவரி மாதம் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. அதன் பிறகு அமெரிக்க மத்திய வங்கிக்கு அடுத்த தலைவராக கெவின் வார்ஷை நியமித்தார். அதன் பிறகே தங்கம் விலை ஓரளவுக்குச் சரிந்தது.


Gold Rate Today in Chennai 22 carat Gold price and silver price Today February 24

தங்கம்

இதனால் கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலையில் பெரிய ஏற்ற இறக்கம் இல்லாமல் இருந்தது. முதல் இரு நாட்கள் தங்கம் விலை உயர்ந்தால், அடுத்த இரு நாட்கள் சரிவது என்றே மாறி மாறி இருந்தது. இதனால் தங்கம் விலையில் எந்தவொரு பெரிய மூவ்மெண்டும் இல்லாமல் இருந்தது. தங்கம் விலை ஓரளவுக்கு நிலையானதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இருப்பினும், இந்த மகிழ்ச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதற்கு முக்கிய காரணமே அமெரிக்க உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தான்.! அதாவது உலக நாடுகள் மீது டிரம்ப் கடந்தாண்டு வரிகளை அறிவித்திருந்த நிலையில், அது செல்லாது என நீதிமன்றம் சொல்லிவிட்டது. டிரம்பிற்கு அந்த அதிகாரமே இல்லை எனச் சொல்லிவிட்டது.

ஒரே ஒரு ஹோம் லோன் EMI மிஸ் செய்தால் என்ன நடக்கும்! சிபில் ஸ்கோர் பாதாளத்திற்கு போகுமா? முக்கிய தகவல்

அமெரிக்க வரிகள்

இதை ஏற்காத டிரம்ப், உலக நாடுகள் மீது புதிய சட்டத்தைப் பயன்படுத்தி 15% வரிகளை அறிவித்தார். இந்தக் குழப்பமே தங்கத்தின் மீது எதிரொலித்தது. சர்வதேச மார்கெட்டில் தங்கம் எகிறிய நிலையில், இந்தியச் சந்தையிலும் அது எதிரொலித்தது. இதன் காரணமாகக் கடந்த பிப்ரவரி 18ம் தேதி ரூ.1,13,840க்கு விற்கப்பட்ட தங்கம் நேற்று, 23ம் தேதி ரூ.1,18,880 வரை எகிறியது.

இன்றைய விலை

இதற்கிடையே சர்வதேச சந்தையில் நேற்றிரவு தங்கம் விலை கணிசமான சரிவு ஏற்பட்டது. முதலீட்டாளர்கள் தங்கள் லாபத்தை புக் செய்யத் தங்கத்தை விற்றதால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிந்தது. இதனால் இந்தியாவில் மிகக் குறைவாகவே தங்கம் விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,19,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.14,890க்கு விற்பனையாகிறது. அதேநேரம் வெள்ளி விலை இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ரூ.290க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தம்பி உனக்கு ஒரு அதிர்ச்சி.. "ஒரு கிராம் தங்கம் ஒரு லட்சம்.. விரைவில்!" இடியை வீசிய ஆனந்த் சீனிவாசன்

தங்கம் விலை நிலவரம்

24.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,120 (இன்று)

23.02.2026 - ஒரு சவரன் ரூ.1,18,880 (நேற்று)

22.02.2026 - ஒரு சவரன் ரூ.1,17,440

21.02.2026 - ஒரு சவரன் ரூ.1,17,440

20.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,360

19.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,000

18.02.2026 - ஒரு சவரன் ரூ.1,13,840

17.02.2026 - ஒரு சவரன் ரூ.1,14,560

16.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,520

15.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,800

14.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,800

13.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,200

12.02.2026- ஒரு சவரன் ரூ.1,16,800

11.02.2026 - ஒரு சவரன் ரூ.1,18,320

Credit: Oneindia

Desktop Bottom Promotion