Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் நிகழும் சனி-சுக்கிரன் சேர்க்கை: இந்த 3 ராசிகளை பணமும், புகழும் தேடிவரப்போகுதாம்...! -
கேரளா ஸ்டைல் கூட்டுக்கறி ரெசிபி... இதை ஒரு தடவை செஞ்சு பாருங்க... சாதத்துக்கு பெஸ்ட் சைடிஷ் இதுதான்...! -
ராகி பூரியும்.. வெங்காய மசாலாவும்.. - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 18 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் தேடிவரும் நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்: ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்.. -
சனி-சூரியன்-சந்திரன் மீன ராசியில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க இருமடங்கு துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போறாங்களாம் -
73 வயதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஃபிட்டாக இருப்பதன் ரகசியம் இதாங்க.. நீங்களும் தெரிஞ்சுக்கோங்க... -
முட்டைக்கோஸை வழக்கமான பொரியல் செய்யாம இந்த மாதிரி பொரியல் செய்யுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
அரசியல்வாதிகள் ஏன் எப்போதும் வெள்ளை சட்டை மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
பன்னீரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி பன்னீர் கீமா மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்..
Gold Rate Today: இன்றும் அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. இனி குறையாது போலயே.. நகை பிரியர்கள் கலக்கம்
சென்னை: தங்கம் விலை இதுவரை இல்லாத அளவாக ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தொட்டது. பின்னர் ஏறிய வேகத்தில் மீண்டும் அப்படியே சரிந்தது. தொடர்ந்து நேற்று தங்கம் விலையானது அதிகரித்தது. தொடர்ந்து கண்ணாமூச்சி காட்டி வரும் தங்கம் விலை இன்று குறையுமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
தங்கம் விலை இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே நினைத்து பார்க்க முடியாத அளவு உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி 57,200 ஆக இருந்த தங்கம் விலை, ஜெட் வேகத்தில் உயர்ந்து வரலாற்றில் இல்லாத உச்சங்களை தொட்டது.

ஒரு லட்சத்தை தாண்டிய தங்கம் விலை
தங்கம் விலையை பொறுத்தவரை சர்வதேச சந்தை நிலவரம், தங்கத்தின் மீதான முதலீடுகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாக வைத்து நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது உலக அளவில் போர் பதற்றம் நீடிப்பதாலும் அமெரிக்கா தாறுமாறாக வரியை விதித்ததாலும் தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த திங்கள் கிழமை தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 12 ஆயிரத்து 515 ஆக இருந்தது. ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்து 120 ஆக உயர்ந்து உச்சத்தைத் தொட்டது. எனினும், செவ்வாய்க்கிழமை சட்டெனெ விழுந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.12 ஆயிரத்து 350 ஆகவும், சவரனுக்கு ரூ.98 ஆயிரத்து 800 ஆகவும் குறைந்தது.
இன்றைய ரேட் என்ன?
இந்த நிலையில் நேற்று தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்தது. கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் உயர்ந்து உள்ளது. அதன்படி நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.12 ஆயிரத்து 400 ஆகவும், சவரனுக்கு ரூ.99 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை ரூ.320 அதிகரித்துள்ளது.
இதன் மூலம் சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.40 அதிகரித்து ரூ.12,440 அதிகரித்துள்ளது. இதேபோன்று ஒரு சவரன் தங்கம் ரூ.320 அதிகரித்து ரூ.99,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை எவ்வளவு?
தங்கம் விலைக்கு போட்டியாக வெள்ளியின் விலை படிப்படியாக அதிகரித்து வந்தது. நேற்று வெள்ளி ஒரே நாளில் வரலாறு காணாத அளவில் உயர்ந்தது. வெள்ளி விலை கிலோவுக்கு மேலும் ரூ.11 ஆயிரம் அதிகரித்தது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 22 ஆயிரமாக அதிகரித்தது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.222-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்று தங்கத்தை போல வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ.2 அதிகரித்து இன்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 224-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கமும் வெள்ளியும் போட்டி போட்டுக்கொண்டு விலை ஏறி வருவதால் நகை பிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இன்றும் விலை அதிகரித்துள்ளதால் கலக்கமடைந்துள்ளனர்.
தங்கம் விலை நிலவரம்:
18.12..2025 - ஒரு சவரன் ரூ.99,520 (இன்று)
17.12.2025- ஒரு சவரன் ரூ.99,200 (நேற்று)
16.12.2025- ஒரு சவரன் ரூ.98,800
15.12.2025- ஒரு சவரன் ரூ.1,00,120 (மாலை)
15.12.2025- ஒரு சவரன் ரூ.99,680 (காலை)
14.12.2025- ஒரு சவரன் ரூ.98,960
13.12.2025- ஒரு சவரன் ரூ.98,960
12.12.2025- ஒரு சவரன் ரூ.98,960 (மாலை)
12.12.2025- ஒரு சவரன் ரூ.98,000 (காலை)
11.12.2025- ஒரு சவரன் ரூ.96,400
10.12.2025- ஒரு சவரன் ரூ.96,240
09.12.2025- ஒரு சவரன் ரூ.96,000
08.12.2025- ஒரு சவரன் ரூ.96,320
07.12.2025- ஒரு சவரன் ரூ.96,320
06.12.2025- ஒரு சவரன் ரூ.96,320
05.12.2025- ஒரு சவரன் ரூ.96,000
04.12.2025- ஒரு சவரன் ரூ.96,160
03.12.2025- ஒரு சவரன் ரூ.96,480
02.12.2025- ஒரு சவரன் ரூ.96,320
01.12.2025- ஒரு சவரன் ரூ.96,580
30.11.2025 - ஒரு சவரன் ரூ.95,840
Credit: Oneindia



Click it and Unblock the Notifications











