Latest Updates
-
காரசாரமான கேரளா ஸ்டைல் ஈஸி பெப்பர் சிக்கன் ரெசிபி... இப்படி செஞ்சு பாருங்க... வேற லெவல் சைடிஷா இருக்கும்...! -
கள்ளக்காதலில் ஈடுபட அதிக வாய்ப்புள்ள 4 ராசிகள் இவங்கதான்... இவங்ககிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருங்க...! -
காரசாரமான.. ஹைதராபாதி சிக்கன் கிரேவி - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நல்ல நேரம் தேடிவருமாம்...! -
வார ராசிபலன் (22 March 2026-28 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கும்.. -
Tamil Nadu Election 2026: பாரம்பரிய தமிழ் உணவுகளை உட்கொள்ளும் தமிழகத் தலைவர்கள்! -
முட்டையும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
கோடையில் எப்பவும் பளிச்சுன்னு பிரகாசமா தெரியணுமா? அப்ப பப்பாளியை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
புதன் பெயர்ச்சியால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்கு தொழிலில் டபுள் லாபம் கிடைக்கும்... -
இந்த ரசத்தை அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க.. உடல் கொழுப்பும், எடையும் சர்ர்-ன்னு குறையும்..
Gold Rate Today: வாரத்துல முதல் நாளே ஷாக் கொடுத்த தங்கம் விலை! சவரனுக்கு ரூ.880 உயர்வு! சென்னையில் விலை நிலவரம் என்ன?
சென்னை: வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களாக ஏற்றத்தாழ்வுடன் மாறி மாறி இருந்த தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்தது. சென்னையில் இன்று காலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.110 உயர்ந்து ரூ.11,410-க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரு சவரன் (8 கிராம்) தங்கம் ரூ.880 உயர்ந்து ரூ.91,280 ஆக உயர்ந்துள்ளது. இதனுடன், வெள்ளி விலையும் சிறிய அளவில் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.2 அதிகரித்து ரூ.167-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கடந்த சில வாரங்களாக நிலையான பாதையில் செல்லாமல், ஒருநாள் அதிகரித்து மறுநாள் குறையும் நிலையிலேயே காணப்பட்டது. உலகளாவிய பொருளாதார சூழல்கள், அமெரிக்க டாலர் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள், சர்வதேச தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றங்கள், மேலும் மத்திய வங்கிகளின் தங்கக் கையிருப்பு கொள்முதல் போக்குகள் ஆகியவை இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
கடந்த அக்டோபர் மாதம் தங்கம் விலையில் ஏற்பட்ட திடீர் ஏற்றம் முதலீட்டாளர்கள் மற்றும் நகைக் விற்பனையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக, அக்டோபர் 17ஆம் தேதி தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்டது.

தங்க சந்தை
பின்னர், சில நாட்களில் சந்தைச் சரிவினால் விலை குறைந்தது. அக்டோபர் 22ஆம் தேதி சவரனுக்கு ரூ.3,680 குறைந்ததுடன், 28ஆம் தேதி மேலும் ரூ.2,200 சரிந்தது. இதனால், தங்கம் விலை ஒரு சவரன் ரூ.89,000-க்கும் கீழே சரிந்தது. அதன்பின், தங்கம் விலை மீண்டும் சிறு அளவிலான உயர்வுடன் மாறி மாறி காணப்பட்டது. கடந்த வாரம் சனிக்கிழமை நிலவரப்படி, கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு சவரனுக்கு ரூ.240 உயர்வு பதிவானது. அப்போது தங்கம் விலை ரூ.90,400 ஆக இருந்தது.
படக்குனு 10 கிராம் வாங்குங்க.. 2026ல் தங்கம் விலை எவ்வளவு உயரும்? உலக வங்கிகளின் அதிரடி கணிப்பு இதோ!
தங்கம் விலை உயர்வு
நேற்று ஞாயிற்றுக்கிழமை தங்கச் சந்தை மூடப்பட்டிருந்த நிலையில், இன்று (திங்கட்கிழமை) விலை மீண்டும் திடீரென உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று காலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.110 உயர்ந்து ரூ.11,410-க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரு சவரன் (8 கிராம்) தங்கம் ரூ.880 உயர்ந்து ரூ.91,280 ஆக உயர்ந்துள்ளது. இதனுடன், வெள்ளி விலையும் சிறிய அளவில் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.2 அதிகரித்து ரூ.167-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை அதிகரிக்குமா?
இது சமீபத்தில் சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் உயர்வை நோக்கி நகர்வதை காட்டுகிறது. அமெரிக்க பொருளாதாரத் தரவுகள் மற்றும் நடப்பு மத்திய வங்கி வட்டி கொள்கைகளில் ஏற்பட்ட மாறுபாடுகள், முதலீட்டாளர்களை தங்கம் வாங்குவதற்குத் தூண்டி வருகின்றன. இதனால், உள்நாட்டு சந்தையிலும் தங்கம் விலை வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் போக்கு தென்படுகிறது.
என்ன பெரிய அமெரிக்கா? தமிழ்நாட்டில் எவ்வளவு தங்கம் இருக்கு தெரியுமா? ரஷ்யாவே கிட்ட நெருங்க முடியாது!
பொதுமக்கள் கவலை
இதனால், திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்வுகளுக்கு நகை வாங்கத் திட்டமிட்டிருப்பவர்களும், தங்கத்தில் முதலீடு செய்பவர்களும் தங்கத்தின் விலை நிலவரத்தை நெருக்கமாகக் கவனித்து வருகின்றனர். அதே நேரத்தில் விலை சரிவால் கவலையில் இருந்த தங்க நகை விற்பனை செய்பவர்கள், விலை சிறிது சிறிதாக உயர்ந்து வருவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Credit: Oneindia



Click it and Unblock the Notifications











