Gold Rate: 20 வருஷத்துக்கு முன்னாடி! 16 ஆயிரத்திற்கு வாங்குன 3 சவரன் செயின்! இப்ப என்ன ரேட்?

By Vishnupriya R

சென்னை: சென்னையில் ஜனவரி 11-ஆம் தேதியான இன்று மார்க்கெட் விடுமுறை என்பதால் தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு சவரன் ரூ 1,03,200 -க்கும், ஒரு கிராம் ரூ. 12,900-க்கும் விற்பனையாகிறது. அது போல் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ 275-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 2,75,000-க்கும் விற்பனையானது.

சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதற்கு காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகள், சீனா- இந்தியா மீதான வரி உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றங்கள் போன்றவையால் அனைத்து நாடுகளும் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். ஏற்றுமதி, இறக்குமதியை டாலருக்கு பதிலாக தங்கத்தின் அடிப்படையில் நடத்தலாம் என்ற முடிவுக்கு மற்ற நாடுகள் வந்துவிட்டன. இதனால் தங்கம் விலையில் ஏற்றம் இருந்தது.


Gold Rate Gold Price

கடந்த டிசம்பர் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 4 ஆம் தேதி ஒரு சவரன் ரூ 96,160-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 30-ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 1,00,800- க்கு விற்பனையானது.

ஜனவரி 9-ஆம் தேதியான இன்று மார்க்கெட் விடுமுறை என்பதால் தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு சவரன் ரூ 1,03,200 -க்கும், ஒரு கிராம் ரூ. 12,900-க்கும் விற்பனையாகிறது. அது போல் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ 275-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 2,75,000-க்கும் விற்பனையானது.

வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதோடு, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறை பிடித்துள்ளதால் தங்கம், வெள்ளி விலையுடன் கச்சா எண்ணெயின் விலையும் உயரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2005 ஆம் ஆண்டு 3 சவரன் தங்க சங்கிலியை 16 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியிருந்தால் அதன் மதிப்பு இப்போது என்ன தெரியுமா? ரூ.3,09,600 ஆகும்.

ஜனவரி 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:

11.01.2026 - ஒரு சவரன் ரூ.1,03,200

10.01.2026 - ஒரு சவரன் ரூ.1,03,200

09.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,400

08.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,200

07.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,600

06.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,640

05.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,080 (மாலை)

05.01.2026- ஒரு சவரன் ரூ.1,01,440 (காலை)

04.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,800

03.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,800 (மாலை)

03.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,160 (காலை)

02.01.2026- ஒரு சவரன் ரூ.96,320

01.01.2026- ஒரு சவரன் ரூ.96,580

Credit: Oneindia

Desktop Bottom Promotion