Gold Rate Today: திடீரென குறைந்த தங்கம் விலை.. உச்சம் தொட்டு சரிவு.. நகை பிரியர்கள் ஆறுதல்.. சென்னையில் ரேட் என்ன?

By Mani Singh S

சென்னை: தங்கத்தை இனி கனவில் தான் வாங்க முடியுமோ என்ற அளவுக்கு விலையானது உச்சம் தொட்டு வருகிறது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக தங்கம் ஒரு சவரன் விலையானது ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக சரிந்துள்ளது. இன்று ஒரே நாளில் ரூ.1,320 குறைந்து மீண்டும் ஒரு லட்சத்திற்கு குறைந்துள்ளது ஒரு சவரன் தங்கம் விலை. வெள்ளி விலையும் இன்று அதிரடியாக சரிந்துள்ளது.

தங்கம் விலை வரலாற்றில் இல்லாத அளவாக ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி நேற்று விற்பனை ஆனது. தங்கம் விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், குறிப்பாக அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதற்கு பிறகு இந்தியா மீது தொடுத்த வர்த்தக போரின் காரணமாக அந்நாட்டு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.


gold price Chennai gold

உச்சம் தொடும் தங்கம் விலை

இது மட்டும் இன்றி அமெரிக்க மத்திய பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்ததால், முதலீட்டாளர்கள் அரசு பத்திரங்கள், சேமிப்புகளில் முதலீடு செய்வதை கணிசமாக குறைத்துவிட்டு, தங்கத்தின் மீது தங்கள் கவனத்தை திசை திருப்ப தொடங்கி உள்ளனர்.

பெரும்பாலானோர் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வதை தவிர்த்துவிட்டு, எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டு தங்கத்தின் மீது முதலீடு செய்கிறார்கள். இதுவும் தங்கத்துக்கான தேவையை உலக அளவில் கணிசமாக அதிகரித்து விட்டது. இதனால் தங்கம் விலையானது தாறுமாறாக உயர்ந்து வருகிறது.

ஒரு லட்சத்தை தாண்டியது

எனினும், கடந்த இரு மாதங்களாக பெரிய அளவில் தங்கம் விலை உயராமல் இருந்த நிலையில் மீண்டும் வேகமெடுத்துள்ளது. அந்த வகையில் கடந்த 13 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.98,960-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.12,370-க்கும் விற்பனை ஆனது. தொடர்ந்து வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது.

காலை மாலை என இரு வேளைகளிலும் தங்கம் விலை அதிகரித்தது. காலையில் மட்டும் ஒரு சவரன் தங்கம் ரூ.720 அதிகரித்தது, மாலையில் ரூ.440 அதிகரித்து வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை தாண்டியது. இதனால் நகை பிரியர்கள் கலக்கமடைந்துள்ளனர். சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.12,515-க்கும், ஒரு சவரன் ரூ.1,00,120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய ரேட் என்ன?

இதனால் இன்று தங்கம் விலை நிலவரம் எப்படி இருக்குமோ என நகைபிரியர்கள் எதிர்பார்த்த நிலையில் அதிரடியாக சரிந்துள்ளது. இன்று மட்டும் சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,320 குறைந்து ரூ.98,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று மட்டும் ஒரு கிராம் ரூ.165 குறைந்து ரூ.12,350-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று சற்று விலை குறைந்துள்ளதாக நகை பிரியர்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.

வெள்ளி விலை என்ன?

தங்கம் விலை தான் இப்படி என்றால் வெள்ளி விலையும் புது உச்சம் தொட்டு வருகிறது. சென்னையில் வெள்ளி விலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிராம் 150 ரூபாய் என்று அளவில் இருந்தது. ஆனால் தற்போது தாறுமாறாக உயர்ந்து ஒரு கிராம் ரூ.200- ஐ தாண்டியுள்ளது. சென்னையில் நேற்று வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.215-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று கிராமுக்கு ரூ.4 குறைந்துள்ளது. இதன்படி சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.211-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை நிலவரம்:

16.12.2025- ஒரு சவரன் ரூ.98,800 (இன்று)
15.12.2025- ஒரு சவரன் ரூ.1,00,120 (நேற்று மாலை)
15.12.2025- ஒரு சவரன் ரூ.99,680 (நேற்று காலை)
14.12.2025- ஒரு சவரன் ரூ.98,960
13.12.2025- ஒரு சவரன் ரூ.98,960
12.12.2025- ஒரு சவரன் ரூ.98,960 (மாலை)
12.12.2025- ஒரு சவரன் ரூ.98,000 (காலை)
11.12.2025- ஒரு சவரன் ரூ.96,400
10.12.2025- ஒரு சவரன் ரூ.96,240
09.12.2025- ஒரு சவரன் ரூ.96,000
08.12.2025- ஒரு சவரன் ரூ.96,320
07.12.2025- ஒரு சவரன் ரூ.96,320
06.12.2025- ஒரு சவரன் ரூ.96,320
05.12.2025- ஒரு சவரன் ரூ.96,000
04.12.2025- ஒரு சவரன் ரூ.96,160
03.12.2025- ஒரு சவரன் ரூ.96,480
02.12.2025- ஒரு சவரன் ரூ.96,320
01.12.2025- ஒரு சவரன் ரூ.96,580
30.11.2025 - ஒரு சவரன் ரூ.95,840
29.11.2025 - ஒரு சவரன் ரூ.95,840
28.11.2025 - ஒரு சவரன் ரூ.94,720
27.11.2025 - ஒரு சவரன் ரூ.94,160
26.11.2025 - ஒரு சவரன் ரூ.94,400
25.11.2025 - ஒரு சவரன் ரூ.93,760
24.11.2025 - ஒரு சவரன் ரூ.92,160
23.11.2025 - ஒரு சவரன் ரூ.93,040
22.11.2025 - ஒரு சவரன் ரூ.93,040
21.11.2025 - ஒரு சவரன் ரூ.91,680
20.11.2025 - ஒரு சவரன் ரூ.92,000
19.11.2025 - ஒரு சவரன் ரூ.92,800 (மாலை)
19.11.2025 - ஒரு சவரன் ரூ.92,000 (காலை)
18.11.2025 - ஒரு சவரன் ரூ.91,200
17.11.2025 - ஒரு சவரன் ரூ.92,320
16.11.2025 - ஒரு சவரன் ரூ.92,400
15.11.2025 - ஒரு சவரன் ரூ.92,400
14.11.2025 - ஒரு சவரன் ரூ.93,920
14.11.2025 - ஒரு சவரன் ரூ.94,720
13.11.2025 - ஒரு சவரன் ரூ.95,200
12.11.2025 - ஒரு சவரன் ரூ.92,800
11.11.2025 - ஒரு சவரன் ரூ.93,600
10.11.2025 - ஒரு சவரன் ரூ.91,840
09.11.2025 - ஒரு சவரன் ரூ.90,400
08.11.2025 - ஒரு சவரன் ரூ.90,400
07.11.2025 - ஒரு சவரன் ரூ.90,160
06.11.2025 - ஒரு சவரன் ரூ.90,560
06.11.2025 - ஒரு சவரன் ரூ.90,000
05.11.2025 - ஒரு சவரன் ரூ.89,440
04.11.2025 - ஒரு சவரன் ரூ.90,000
03.11.2025- ஒரு சவரன் ரூ.90,800
02.11.2025- ஒரு சவரன் ரூ.90,480
01.11.2025- ஒரு சவரன் ரூ.90,400
01.11.2025- ஒரு சவரன் ரூ.90,480
31.10.2025- ஒரு சவரன் ரூ.90,400
30.10.2025- ஒரு சவரன் ரூ.90,400
29.10.2025- ஒரு சவரன் ரூ.90,600
28.10.2025- ஒரு சவரன் ரூ.88,600
27.10.2025- ஒரு சவரன் ரூ.91,600
26.10.2025- ஒரு சவரன்: ரூ.92,000
25.10.2025- ஒரு சவரன்: ரூ.92,000
22.10.2025- ஒரு சவரன் ரூ.92,000
21.10.2025 - ஒரு சவரன் ரூ.92,320
21.10.2025 - ஒரு சவரன் ரூ.93,600
20.10.2025- ஒரு சவரன் ரூ.96,000
19.10.2025 - ஒரு சவரன் ரூ.95,360
18.10.2025 - ஒரு சவரன் ரூ.96,000
17.10.2025- ஒரு சவரன் ரூ.97,600
16.10.2025 - ஒரு சவரன் ரூ.95,200
15.10.2025 - ஒரு சவரன் ரூ.94,880
14.10.2025 - ஒரு சவரன் ரூ.94,600
13.10.2025 - ஒரு சவரன் ரூ.92,640
13.10.2025 - ஒரு சவரன் ரூ.92,200
12.10.2025 - ஒரு சவரன் ரூ.92,000
11.10.2025 - ஒரு சவரன் ரூ.92,000
11.10.2025 - ஒரு சவரன் ரூ.91,400
09.10.2025 - ஒரு சவரன் ரூ.91,400
09.10.2025 - ஒரு சவரன் ரூ.91,200
08.10.2025 - ஒரு சவரன் ரூ.91,080
08.10.2025 - ஒரு சவரன் ரூ.90,400
07.10.2025 - ஒரு சவரன் ரூ.89,600
06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000
06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000
05.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600
04.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600
03.10.2025 - ஒரு சவரன் ரூ.87,200
03.10.2025 - ஒரு சவரன் ரூ 86,720
02.10.2025 - ஒரு சவரன் ரூ 87,600
02.10.2025 - ஒரு சவரன் ரூ 87,040
01.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600
01.10.2025 - ஒரு சவரன் ரூ.87,120
30.09.2025 - ஒரு சவரன் ரூ. 86,880.

Credit: Oneindia

Desktop Bottom Promotion