Latest Updates
-
ரம்ஜான் ஸ்பெஷல் தெலுங்கானா மட்டன் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
குரு-சந்திரன் உருவாக்கும் கஜகேசரி ராஜயோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் தேடிவரப்போகுது...! -
தமிழ்நாட்டின் ஸ்டார் அரசியல்வாதிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட போகிறார்கள் தெரியுமா? -
தேர்தல் பிரச்சாரங்களின் போது ஏன் இளநீர் அரசியல் தலைவர்களின் விருப்பமான பானமாக உள்ளது தெரியுமா? -
கோடை வெயிலால் முகம் டல்லா, கருப்பா இருக்கா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
பாய் வீட்டு சிக்கன் பிரியாணி ரெசிபி... இந்த ரம்ஜானுக்கு இப்படி பிரியாணி செஞ்சு பாருங்க... தாறுமாறா இருக்கும்! -
வெண்டைக்காய் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி மொறுமொறுன்னு சிப்ஸ் செஞ்சு சாப்பிடுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க புரியாத புதிராக இருப்பார்களாம்... இவங்கள யாராலும் புரிஞ்சிக்க முடியாதாம்...! -
மீன ராசியில் அரிய சனி-செவ்வாய் சேர்க்கை: ஏப்ரலில் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..
Gold Price Today: ரூ.1 லட்சத்தை நெருங்கிய தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.96,480க்கு விற்பனை!
சென்னை: தமிழ்நாட்டில் ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை நெருங்கி வருகிறது. இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.96,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,060க்கு விற்பனையாகி வருகிறது. வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.201க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடை, சீனா மற்றும் இந்தியா மீதான வரி உயர்வு, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள போர் பதற்றம் உள்ளிட்டவையால் தங்கம் விலை உயர்ந்து கொண்டே போகிறது. இதனால் ஏற்றுமதி, இறக்குமதியை டாலருக்கு பதிலாக தங்கத்தில் நடத்தலாம் என்ற முடிவுக்கு பல நாடுகள் வந்துவிட்டன.

இந்தியாவில் சாமானிய மக்கள் அதிகளவில் செய்யும் முதலீடே தங்கத்தில் தான். ஏதாவது அவசர தேவையென்றால் உடனடியாக பணம் புரட்டுவதற்கு தங்கம் மட்டுமே கைகொடுத்து வருகிறது. மருத்துவமனை செலவு, பள்ளிகள், கல்லூரிகளுக்கான கட்டணம் என்று பெரும்பாலும் சாமானிய மக்கள் தங்கம் மூலமாக பணத்தை திரட்டி உடனடியாக கட்டி வருகின்றனர்.
இதனால் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருவது சாமானிய மக்களை பாதிக்க தொடங்கி இருக்கிறது. நவம்பர் மாதத்தில் தங்கம் விலை சற்று சரிவு ஏற்பட்டிருந்தாலும், கடந்த வாரத்தில் மீண்டும் உச்சத்தை நோக்கி சென்று வருகிறது. நவம்பர் 5ஆம் தேதி தங்கம் ஒரு சவரன் ரூ.89,440க்கு விற்பனையாகியது.
இதன்பின் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்று தங்கம் விலை சற்று குறைந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.96,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,060க்கு விற்பனையாகி வருகிறது. வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.201க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நவம்பர் 1 முதல் தற்போது வரை தங்கம் விலை
2.12.2025 - ஒரு சவரன் ரூ.96,320
1.12.2025 - ஒரு சவரன் ரூ.96,580
30.11.2025 - ஒரு சவரன் ரூ.95,840
29.11.2025 - ஒரு சவரன் ரூ.95,840
28.11.2025 - ஒரு சவரன் ரூ.94,720
27.11.2025 - ஒரு சவரன் ரூ.94,160
26.11.2025 - ஒரு சவரன் ரூ.94,400
25.11.2025 - ஒரு சவரன் ரூ.93,760
24.11.2025 - ஒரு சவரன் ரூ.92,160
23.11.2025 - ஒரு சவரன் ரூ.93,040
22.11.2025 - ஒரு சவரன் ரூ.93,040
21.11.2025 - ஒரு சவரன் ரூ.91,680
20.11.2025 - ஒரு சவரன் ரூ.92,000
19.11.2025 - ஒரு சவரன் ரூ.92,800 (மாலை)
19.11.2025 - ஒரு சவரன் ரூ.92,000 (காலை)
18.11.2025 - ஒரு சவரன் ரூ.91,200
17.11.2025 - ஒரு சவரன் ரூ.92,320
16.11.2025 - ஒரு சவரன் ரூ.92,400
15.11.2025 - ஒரு சவரன் ரூ.92,400
14.11.2025 - ஒரு சவரன் ரூ.93,920
14.11.2025 - ஒரு சவரன் ரூ.94,720
13.11.2025 - ஒரு சவரன் ரூ.95,200
12.11.2025 - ஒரு சவரன் ரூ.92,800
11.11.2025 - ஒரு சவரன் ரூ.93,600
10.11.2025 - ஒரு சவரன் ரூ.91,840
09.11.2025 - ஒரு சவரன் ரூ.90,400
08.11.2025 - ஒரு சவரன் ரூ.90,400
07.11.2025 - ஒரு சவரன் ரூ.90,160
06.11.2025 - ஒரு சவரன் ரூ.90,560
06.11.2025 - ஒரு சவரன் ரூ.90,000
05.11.2025 - ஒரு சவரன் ரூ.89,440
04.11.2025 - ஒரு சவரன் ரூ.90,000
03.11.2025- ஒரு சவரன் ரூ.90,800
02.11.2025- ஒரு சவரன் ரூ.90,480
01.11.2025- ஒரு சவரன் ரூ.90,400
01.11.2025- ஒரு சவரன் ரூ.90,480
Credit: Oneindia



Click it and Unblock the Notifications











