Latest Updates
-
30 ஆண்டுகள் கழித்து ஒன்றிணையும் சனி-புதன்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாக் அடிக்கப்போகுது.. -
Tamil Nadu Election 2026: தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏன் ஜிகர்தண்டாவை அவசியம் குடிக்கணும் தெரியுமா? -
ரம்ஜான் ஸ்பெஷல் திண்டுக்கல் ஸ்டைல் மட்டன் பிரியாணி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
2026 IPL T20-யில் உள்ள டாப் 5 இளம் வீரர்கள்.. சிஎஸ்கே அணியிலும் ஒருவர் உள்ளார்.. யாருன்னு பாருங்க.. -
ஏப்ரலில் 6 முறை உருவாகும் அரிய யோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
பாவக்காயை இப்படி தொக்கு செய்யுங்க.. கசப்பே தெரியாது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க... -
இந்த சட்னியை தினமும் 2 ஸ்பூன் சாப்பிடுங்க.. உடம்பில் இரத்தமும் ஊறும்.. முடி உதிர்வும் குறையும்.. -
சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 21 முதல் இந்த 3 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது.. -
பீர்க்கங்காய் வாங்குனா டக்குனு இந்த மாதிரி பருப்பு மசியல் செய்யுங்க... சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும்! -
கோதுமை தோசையும்.. தக்காளி சட்னியும்.. - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... தாறுமாறா இருக்கும்..
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் அதிர்ச்சி.. வெள்ளி விலையும் புது உச்சம் தொட்டது
சென்னை: தங்கம் விலையானது தினம் தினம் புதிய உச்சம் தொட்டு வருகிறது. இதுவரை இல்லாத அளவாக ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை தாண்டிய நிலையில் நேற்று சற்று குறைந்த இருந்தது. இந்த நிலையில் மீண்டும் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,320 குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. வெள்ளி விலையும் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக அதிரடியாக உயர்ந்துள்ளது.
தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. உயரும் போது ராக்கெட் வேகத்திலும் குறையும் போது ஆமை வேகத்திலும் தங்கம் விலை குறைந்து வருகிறது. கடந்த மாதம் முழுவதும் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயரத் தொடங்கியது.

உச்சம் தொடும் தங்கம் விலை
தங்கம் விலை தற்போது நாம் நினைத்து பார்க்க முடியாத உயரத்திற்கு சென்றுள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7,150-க்கும், ஒரு சவரன் ரூ.57,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு முடிவதற்குள் ஒரு லட்சத்தை தொட்டுவிட்டது. 12 மாதங்கள் கூட ஆகாத நிலையில் தங்கம் விலை பாதிக்கு பாதி என்ற அளவில் உயர்ந்து இருப்பது பலரையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
விலை உயர்வுக்கு காரணம் என்ன
சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றம், அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு அவர் எடுத்த பொருளாதார நடவடிக்கைகள் போன்ற காரணத்தினால், தங்கத்தின் முதலீடு அதிகரித்துள்ளது. தங்கம் விலை கற்பனை செய்துகூட பார்க்க முடியாத அளவுக்கு உயர இதுவே முக்கிய காரணம் எனவும் பொருளாதார நிபுணர்கள் சொல்கிறார்கள்.
எனினும், கடந்த இரு மாதங்களாக பெரிய அளவில் தங்கம் விலை உயராமல் இருந்தது. டிசம்பர் தொடங்கியதும் மீண்டும் வேகமெடுத்துள்ளது. குறிப்பாக கடந்த 12 ஆம் தேதி காலை மாலை என இரு வேளைகளிலும் தங்கம் விலை அதிகரித்தது. காலையில் மட்டும் ஒரு சவரன் தங்கம் ரூ.720 அதிகரித்தது, மாலையில் ரூ.440 அதிகரித்து வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை தாண்டியது.
இன்றைய ரேட் என்ன?
இந்த நிலையில் நேற்று சென்னையில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,320 குறைந்து ரூ.98,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரு கிராம் ரூ.165 குறைந்து ரூ.12,350-க்கு விற்பனை செய்யப்பட்டது. சற்று விலை குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் ஆறுதல் அடைந்தனர். இன்றும் விலை குறையுமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
இன்று சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து மீண்டும் ஒரு சவரன் ரூ.99,200-க்கு விற்கப்படுகிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.50 அதிகரித்து ரூ.12,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மீண்டும் தங்கம் விலை அதிகரித்துள்ளது நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
வெள்ளி விலை புது உச்சம்
தங்கம் விலை தான் இப்படி உச்சம் தொட்டு வருகிறது என்றால், வெள்ளி விலையும் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக உயர்ந்து வருகிறது. சென்னையில் நேற்று வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.211-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று வெள்ளி விலை சென்னையில் தடாலடியாக உயர்ந்தது. ஒரு கிராம் ரூ.11 அதிகரித்தது. இதனால் இன்று ஒரு கிராம் வெள்ளி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக ரூ.222-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்க விலை நிலவரம்:
17.12.2025- ஒரு சவரன் ரூ.99,200 (இன்று)
16.12.2025- ஒரு சவரன் ரூ.98,800 (நேற்று)
15.12.2025- ஒரு சவரன் ரூ.1,00,120 (மாலை)
15.12.2025- ஒரு சவரன் ரூ.99,680 (காலை)
14.12.2025- ஒரு சவரன் ரூ.98,960
13.12.2025- ஒரு சவரன் ரூ.98,960
12.12.2025- ஒரு சவரன் ரூ.98,960 (மாலை)
12.12.2025- ஒரு சவரன் ரூ.98,000 (காலை)
11.12.2025- ஒரு சவரன் ரூ.96,400
10.12.2025- ஒரு சவரன் ரூ.96,240
09.12.2025- ஒரு சவரன் ரூ.96,000
08.12.2025- ஒரு சவரன் ரூ.96,320
07.12.2025- ஒரு சவரன் ரூ.96,320
06.12.2025- ஒரு சவரன் ரூ.96,320
05.12.2025- ஒரு சவரன் ரூ.96,000
04.12.2025- ஒரு சவரன் ரூ.96,160
03.12.2025- ஒரு சவரன் ரூ.96,480
02.12.2025- ஒரு சவரன் ரூ.96,320
01.12.2025- ஒரு சவரன் ரூ.96,580
30.11.2025 - ஒரு சவரன் ரூ.95,840
29.11.2025 - ஒரு சவரன் ரூ.95,840
28.11.2025 - ஒரு சவரன் ரூ.94,720
27.11.2025 - ஒரு சவரன் ரூ.94,160
26.11.2025 - ஒரு சவரன் ரூ.94,400
25.11.2025 - ஒரு சவரன் ரூ.93,760
24.11.2025 - ஒரு சவரன் ரூ.92,160
23.11.2025 - ஒரு சவரன் ரூ.93,040
22.11.2025 - ஒரு சவரன் ரூ.93,040
21.11.2025 - ஒரு சவரன் ரூ.91,680
20.11.2025 - ஒரு சவரன் ரூ.92,000
19.11.2025 - ஒரு சவரன் ரூ.92,800 (மாலை)
19.11.2025 - ஒரு சவரன் ரூ.92,000 (காலை)
18.11.2025 - ஒரு சவரன் ரூ.91,200
17.11.2025 - ஒரு சவரன் ரூ.92,320
16.11.2025 - ஒரு சவரன் ரூ.92,400
15.11.2025 - ஒரு சவரன் ரூ.92,400
14.11.2025 - ஒரு சவரன் ரூ.93,920
14.11.2025 - ஒரு சவரன் ரூ.94,720
13.11.2025 - ஒரு சவரன் ரூ.95,200
12.11.2025 - ஒரு சவரன் ரூ.92,800
11.11.2025 - ஒரு சவரன் ரூ.93,600
10.11.2025 - ஒரு சவரன் ரூ.91,840
09.11.2025 - ஒரு சவரன் ரூ.90,400
08.11.2025 - ஒரு சவரன் ரூ.90,400
07.11.2025 - ஒரு சவரன் ரூ.90,160
06.11.2025 - ஒரு சவரன் ரூ.90,560
06.11.2025 - ஒரு சவரன் ரூ.90,000
05.11.2025 - ஒரு சவரன் ரூ.89,440
04.11.2025 - ஒரு சவரன் ரூ.90,000
03.11.2025- ஒரு சவரன் ரூ.90,800
02.11.2025- ஒரு சவரன் ரூ.90,480
01.11.2025- ஒரு சவரன் ரூ.90,400
01.11.2025- ஒரு சவரன் ரூ.90,480
31.10.2025- ஒரு சவரன் ரூ.90,400
30.10.2025- ஒரு சவரன் ரூ.90,400
29.10.2025- ஒரு சவரன் ரூ.90,600
28.10.2025- ஒரு சவரன் ரூ.88,600
27.10.2025- ஒரு சவரன் ரூ.91,600
26.10.2025- ஒரு சவரன்: ரூ.92,000
25.10.2025- ஒரு சவரன்: ரூ.92,000
22.10.2025- ஒரு சவரன் ரூ.92,000
21.10.2025 - ஒரு சவரன் ரூ.92,320
21.10.2025 - ஒரு சவரன் ரூ.93,600
20.10.2025- ஒரு சவரன் ரூ.96,000
19.10.2025 - ஒரு சவரன் ரூ.95,360
18.10.2025 - ஒரு சவரன் ரூ.96,000
17.10.2025- ஒரு சவரன் ரூ.97,600
16.10.2025 - ஒரு சவரன் ரூ.95,200
15.10.2025 - ஒரு சவரன் ரூ.94,880
14.10.2025 - ஒரு சவரன் ரூ.94,600
13.10.2025 - ஒரு சவரன் ரூ.92,640
13.10.2025 - ஒரு சவரன் ரூ.92,200
12.10.2025 - ஒரு சவரன் ரூ.92,000
11.10.2025 - ஒரு சவரன் ரூ.92,000
11.10.2025 - ஒரு சவரன் ரூ.91,400
09.10.2025 - ஒரு சவரன் ரூ.91,400
09.10.2025 - ஒரு சவரன் ரூ.91,200
08.10.2025 - ஒரு சவரன் ரூ.91,080
08.10.2025 - ஒரு சவரன் ரூ.90,400
07.10.2025 - ஒரு சவரன் ரூ.89,600
06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000
06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000
05.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600
04.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600
03.10.2025 - ஒரு சவரன் ரூ.87,200
03.10.2025 - ஒரு சவரன் ரூ 86,720
02.10.2025 - ஒரு சவரன் ரூ 87,600
02.10.2025 - ஒரு சவரன் ரூ 87,040
01.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600
01.10.2025 - ஒரு சவரன் ரூ.87,120
30.09.2025 - ஒரு சவரன் ரூ. 86,880.
Credit: Oneindia



Click it and Unblock the Notifications











