Latest Updates
-
வார ராசிபலன் (22 March 2026-28 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கும்.. -
Tamil Nadu Election 2026: பாரம்பரிய தமிழ் உணவுகளை உட்கொள்ளும் தமிழகத் தலைவர்கள்! -
முட்டையும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
கோடையில் எப்பவும் பளிச்சுன்னு பிரகாசமா தெரியணுமா? அப்ப பப்பாளியை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
புதன் பெயர்ச்சியால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்கு தொழிலில் டபுள் லாபம் கிடைக்கும்... -
இந்த ரசத்தை அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க.. உடல் கொழுப்பும், எடையும் சர்ர்-ன்னு குறையும்.. -
Ramzan Eid 2026: ரம்ஜான் பிரியாணி சாப்பிட்டு அஜீரண கோளாறு வரக்கூடாதா? அப்ப இத ஒரு டம்ளர் குடிங்க போதும்.. -
பீன்ஸ் பருப்பு கூட்டு ரெசிபி... இந்த மாதிரி செஞ்சு கொடுங்க... பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
ரம்ஜான் ஸ்பெஷல் தெலுங்கானா மட்டன் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
Gold Price today: இன்ப அதிர்ச்சி தந்த தங்கம் விலை.. இரண்டு நாளில் 2,800 குறைந்தது.. இன்றைய ரேட் என்ன?
சென்னை: தங்கம் விலை (Gold Price) கடந்த இரண்டு நாட்களாக அதிரடியாக சரிந்துள்ளது. திடீரென உச்சம் தொட்ட தங்கம் விலை சற்று குறைந்து பின்னர் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், நேற்று முன் தினம் ரூ.1,280 குறைந்தது. நேற்றும் சவரனுக்கு ரூ.1,520 குறைந்தது. இதனால் நகை பிரியர்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.
தங்கம் விலை கடந்த மாதம் புது வரலாற்று உச்சம் தொட்ட நிலையில் அதற்கு பிறகு சற்று குறைந்தது. பின்னர் மீண்டும் வேகமெடுத்தது. இப்படியாக ஏற்ற இறக்கத்துடன் தங்கம் விலை இருந்து வருகிறது. இதனால் சற்று விலை குறைந்தால் நகைகளை வாங்கிவிடலாம் என நினைப்பவர்களுக்கும் போக்கு காட்டி வருகிறது தங்கம் விலை.

குறைந்து வரும் தங்கம் விலை
திடீரென இரண்டு நாட்களாக குறைந்து நிம்மதி அளிக்கும் தங்கம் விலை மறுநாள் சட்டென உயர்ந்துவிடும். இரண்டு நாட்களாக குறைந்து இருக்கிறதே நாளைக்கு சென்று நகை வாங்கிவிடலாம் என நினைப்பவர்களு ஷாக் கொடுக்கும் விதமாகவே விலை உயர்வு இருந்து வந்தது. இப்படியாக ஏற்ற இறக்கத்துடன் தங்கம் விலை இருந்து வருகிறது.
இப்படித்தான் 13 ஆம் தேதி அன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலையானது சவரனுக்கு ரூ.2,400 அதிகரித்து அதிர்ச்சி கொடுத்திருந்தது. அதன் பிறகு நேற்று முன் தினம் தங்கம் விலை அதிரடியாக சரிந்தது. அதாவது சவரனுக்கு ரூ.1280 குறைந்து ரூ.93,920-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் நேற்று முன் தினம் ஒரே நாளில் ரூ.160 குறைந்து ரூ.11,740-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய ரேட் எவ்வளவு?
நேற்றும் தங்கம் விலை சர்ப்ரைஸ் கொடுத்தது. எங்கே மீண்டும் விலை உயர்ந்துவிடுமோ என அச்சப்பட்ட நிலையில் தங்கம் விலை அதிரடியாக சரிந்தது. அதாவது நேற்று ஒரே நாளில் சென்னையில் ஒரு சவரன் ரூ. 1520 குறைந்தது. இதன்படி சென்னையில் நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.92,4000-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.175 குறைந்து ரூ.11,550-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே விலை தான் இன்றும் நீடிக்கிறது.
வெள்ளி விலை என்ன?
வெள்ளி விலையும் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த நிலையில் தற்போது சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.183-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று முன் தினம் ரூ.3 குறைந்து ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.175-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று விடுமுறை என்பதால் இதே விலை தான் நீடிக்கும்.
கடந்த சில நாட்களின் தங்கம் விலை நிலவரம்:
15.11.2025 - ஒரு சவரன் ரூ.92,400 (நேற்று)
14.11.2025 - ஒரு சவரன் ரூ.93,920
14.11.2025 - ஒரு சவரன் ரூ.94,720
13.11.2025 - ஒரு சவரன் ரூ.95,200
12.11.2025 - ஒரு சவரன் ரூ.92,800
11.11.2025 - ஒரு சவரன் ரூ.93,600
10.11.2025 - ஒரு சவரன் ரூ.91,840
09.11.2025 - ஒரு சவரன் ரூ.90,400
08.11.2025 - ஒரு சவரன் ரூ.90,400
07.11.2025 - ஒரு சவரன் ரூ.90,160
06.11.2025 - ஒரு சவரன் ரூ.90,560
06.11.2025 - ஒரு சவரன் ரூ.90,000
05.11.2025 - ஒரு சவரன் ரூ.89,440
04.11.2025 - ஒரு சவரன் ரூ.90,000
03.11.2025- ஒரு சவரன் ரூ.90,800
02.11.2025- ஒரு சவரன் ரூ.90,480
01.11.2025- ஒரு சவரன் ரூ.90,480
31.10.2025- ஒரு சவரன் ரூ.90,400
30.10.2025- ஒரு சவரன் ரூ.90,400
29.10.2025- ஒரு சவரன் ரூ.90,600
28.10.2025- ஒரு சவரன் ரூ.88,600
27.10.2025- ஒரு சவரன் ரூ.91,600
26.10.2025- ஒரு சவரன்: ரூ.92,000
25.10.2025- ஒரு சவரன்: ரூ.92,000
22.10.2025- ஒரு சவரன் ரூ.92,000
21.10.2025 - ஒரு சவரன் ரூ.92,320
21.10.2025 - ஒரு சவரன் ரூ.93,600
20.10.2025- ஒரு சவரன் ரூ.96,000
19.10.2025 - ஒரு சவரன் ரூ.95,360
18.10.2025 - ஒரு சவரன் ரூ.96,000
17.10.2025- ஒரு சவரன் ரூ.97,600
16.10.2025 - ஒரு சவரன் ரூ.95,200
15.10.2025 - ஒரு சவரன் ரூ.94,880
14.10.2025 - ஒரு சவரன் ரூ.94,600
13.10.2025 - ஒரு சவரன் ரூ.92,640
13.10.2025 - ஒரு சவரன் ரூ.92,200
12.10.2025 - ஒரு சவரன் ரூ.92,000
11.10.2025 - ஒரு சவரன் ரூ.92,000
11.10.2025 - ஒரு சவரன் ரூ.91,400
09.10.2025 - ஒரு சவரன் ரூ.91,400
09.10.2025 - ஒரு சவரன் ரூ.91,200
08.10.2025 - ஒரு சவரன் ரூ.91,080
08.10.2025 - ஒரு சவரன் ரூ.90,400
07.10.2025 - ஒரு சவரன் ரூ.89,600
06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000
06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000
05.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600
04.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600
03.10.2025 - ஒரு சவரன் ரூ.87,200
03.10.2025 - ஒரு சவரன் ரூ 86,720
02.10.2025 - ஒரு சவரன் ரூ 87,600
02.10.2025 - ஒரு சவரன் ரூ 87,040
01.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600
01.10.2025 - ஒரு சவரன் ரூ.87,120
30.09.2025 - ஒரு சவரன் ரூ. 86,880.
Credit: Oneindia



Click it and Unblock the Notifications











