Latest Updates
-
வார ராசிபலன் (22 March 2026-28 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கும்.. -
Tamil Nadu Election 2026: பாரம்பரிய தமிழ் உணவுகளை உட்கொள்ளும் தமிழகத் தலைவர்கள்! -
முட்டையும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
கோடையில் எப்பவும் பளிச்சுன்னு பிரகாசமா தெரியணுமா? அப்ப பப்பாளியை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
புதன் பெயர்ச்சியால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்கு தொழிலில் டபுள் லாபம் கிடைக்கும்... -
இந்த ரசத்தை அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க.. உடல் கொழுப்பும், எடையும் சர்ர்-ன்னு குறையும்.. -
Ramzan Eid 2026: ரம்ஜான் பிரியாணி சாப்பிட்டு அஜீரண கோளாறு வரக்கூடாதா? அப்ப இத ஒரு டம்ளர் குடிங்க போதும்.. -
பீன்ஸ் பருப்பு கூட்டு ரெசிபி... இந்த மாதிரி செஞ்சு கொடுங்க... பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
ரம்ஜான் ஸ்பெஷல் தெலுங்கானா மட்டன் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
Gold rate today: இன்று சர்ப்ரைஸ் தந்த தங்கம் விலை.. ஏறிய வேகத்தில் அப்படியே இறங்கியது! ஒரு சவரன் எவ்வளவு?
சென்னை: தங்கம் விலை (Gold rate) கடந்த சில நாட்களாக சரிந்து வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் இருமுறை உயர்ந்து அதிர்ச்சி கொடுத்தது. இதனால் மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி தங்கம் செல்கிறதோ என நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் இன்று தங்கம் விலை சர்ப்ரைஸ் தந்துள்ளது. இன்று ஒரேநாளில் சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது.
வரலாறு காணாத உச்சம் தொட்டு நகைப்பிரியர்களை கலங்கடித்த தங்கம் விலை, கடந்த சில நாட்களாக சற்று சரிவை சந்தித்தது. குறிப்பாக கடந்த 14 ஆம் தேதியில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து குறைந்தது. 4 நாட்களில் கிட்டதட்ட 3 ஆயிரத்திற்கு மேல் சரிந்தது. தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்தது நகைப்பிரியர்களை கொஞ்சம் ஆறுதல் அடைய வைத்தது.

தங்கம் விலை உயர்வு
தொடர்ந்து விலை சரிந்து வருகிறதே.. இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணிணால், விலை மேலும் சரியுமா? அப்போது நகை வாங்கலாம் என திட்டமிட்டவர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக நேற்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து அதிர்ச்சி கொடுத்தது. நேற்று நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 400-க்கும், ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
காலையில் கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம், பிற்பகலில் அதேபோல் கிராமுக்கு ரூ.100-ம், சவரன் ரூ.800-ம் என மொத்தம் நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1,600-ம் அதிகரித்து ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 600-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது.
திருப்பூரில் ராபிடோவில் சென்ற இளம்பெண்! நள்ளிரவில் செல்போனுக்கு வந்த வீடியோ! டிரைவரின் கேவலமான செயல்
வெள்ளியும் அதிகரித்தது
தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் நேற்று அதிரடியாக உயர்ந்து இருந்தது. கடந்த 13-ந்தேதி ஒரே நாளில் கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் அதிகரித்து பின்னர் குறைந்த நிலையில், நேற்று கிராமுக்கு ரூ.6-ம், கிலோவுக்கு ரூ.6 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.176-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 76 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
தமிழ் தேர்வில் கண்டபடி எழுதிய கடலூர் மாணவி.. ஃபுல் மார்க் போட்ட ஆசிரியர்! அடுத்து நடந்த ட்விஸ்ட்
இன்றைய ரேட் என்ன?
தங்கம் விலை இப்படி திடீரென உயர்ந்து அதிர்ச்சி கொடுத்த நிலையில், மீண்டும் விலை இறங்குமா? என ஆவலுடன் காத்திருந்தவர்களுக்கு சர்ப்ரைஸ் தந்துள்ளது. இன்று மட்டும் சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.800 குறைந்துள்ளது. இதன் மூலமாக செனையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை மீண்டும் ரூ.92 ஆயிரமாக சரிந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.100 குறைந்து ரூ.11,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று அதிரடியாக சரிந்துள்ளது. இன்று ஒரே நாளில் ரூ.3 குறைந்து ஒரு கிராம் வெள்ளி சென்னையில் ரூ.173-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களின் தங்கம் விலை நிலவரம்:
20.11.2025 - ஒரு சவரன் ரூ.92,000 (இன்று)
19.11.2025 - ஒரு சவரன் ரூ.92,800 (நேற்று மாலை)
19.11.2025 - ஒரு சவரன் ரூ.92,000 (நேற்று காலை)
18.11.2025 - ஒரு சவரன் ரூ.91,200
17.11.2025 - ஒரு சவரன் ரூ.92,320
16.11.2025 - ஒரு சவரன் ரூ.92,400
15.11.2025 - ஒரு சவரன் ரூ.92,400
14.11.2025 - ஒரு சவரன் ரூ.93,920
14.11.2025 - ஒரு சவரன் ரூ.94,720
13.11.2025 - ஒரு சவரன் ரூ.95,200
12.11.2025 - ஒரு சவரன் ரூ.92,800
11.11.2025 - ஒரு சவரன் ரூ.93,600
10.11.2025 - ஒரு சவரன் ரூ.91,840
09.11.2025 - ஒரு சவரன் ரூ.90,400
08.11.2025 - ஒரு சவரன் ரூ.90,400
07.11.2025 - ஒரு சவரன் ரூ.90,160
06.11.2025 - ஒரு சவரன் ரூ.90,560
06.11.2025 - ஒரு சவரன் ரூ.90,000
05.11.2025 - ஒரு சவரன் ரூ.89,440
04.11.2025 - ஒரு சவரன் ரூ.90,000
03.11.2025- ஒரு சவரன் ரூ.90,800
02.11.2025- ஒரு சவரன் ரூ.90,480
01.11.2025- ஒரு சவரன் ரூ.90,480
31.10.2025- ஒரு சவரன் ரூ.90,400
30.10.2025- ஒரு சவரன் ரூ.90,400
29.10.2025- ஒரு சவரன் ரூ.90,600
28.10.2025- ஒரு சவரன் ரூ.88,600
27.10.2025- ஒரு சவரன் ரூ.91,600
26.10.2025- ஒரு சவரன்: ரூ.92,000
25.10.2025- ஒரு சவரன்: ரூ.92,000
24.10.2025- ஒரு சவரன் ரூ.92,320
23.10.2025- ஒரு சவரன் ரூ.92,000
22.10.2025- ஒரு சவரன் ரூ.92,000
21.10.2025 - ஒரு சவரன் ரூ.92,320
21.10.2025 - ஒரு சவரன் ரூ.93,600
20.10.2025- ஒரு சவரன் ரூ.96,000
19.10.2025 - ஒரு சவரன் ரூ.95,360
18.10.2025 - ஒரு சவரன் ரூ.96,000
17.10.2025- ஒரு சவரன் ரூ.97,600
16.10.2025 - ஒரு சவரன் ரூ.95,200
15.10.2025 - ஒரு சவரன் ரூ.94,880
14.10.2025 - ஒரு சவரன் ரூ.94,600
13.10.2025 - ஒரு சவரன் ரூ.92,640
13.10.2025 - ஒரு சவரன் ரூ.92,200
12.10.2025 - ஒரு சவரன் ரூ.92,000
11.10.2025 - ஒரு சவரன் ரூ.92,000
11.10.2025 - ஒரு சவரன் ரூ.91,400
09.10.2025 - ஒரு சவரன் ரூ.91,400
09.10.2025 - ஒரு சவரன் ரூ.91,200
08.10.2025 - ஒரு சவரன் ரூ.91,080
08.10.2025 - ஒரு சவரன் ரூ.90,400
07.10.2025 - ஒரு சவரன் ரூ.89,600
06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000
06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000
05.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600
04.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600
03.10.2025 - ஒரு சவரன் ரூ.87,200
03.10.2025 - ஒரு சவரன் ரூ 86,720
02.10.2025 - ஒரு சவரன் ரூ 87,600
02.10.2025 - ஒரு சவரன் ரூ 87,040
01.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600
01.10.2025 - ஒரு சவரன் ரூ.87,120
30.09.2025 - ஒரு சவரன் ரூ. 86,880.
Credit: Oneindia



Click it and Unblock the Notifications











