Latest Updates
-
குரு-சந்திரன் உருவாக்கும் கஜகேசரி ராஜயோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் தேடிவரப்போகுது...! -
தமிழ்நாட்டின் ஸ்டார் அரசியல்வாதிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட போகிறார்கள் தெரியுமா? -
தேர்தல் பிரச்சாரங்களின் போது ஏன் இளநீர் அரசியல் தலைவர்களின் விருப்பமான பானமாக உள்ளது தெரியுமா? -
கோடை வெயிலால் முகம் டல்லா, கருப்பா இருக்கா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
பாய் வீட்டு சிக்கன் பிரியாணி ரெசிபி... இந்த ரம்ஜானுக்கு இப்படி பிரியாணி செஞ்சு பாருங்க... தாறுமாறா இருக்கும்! -
வெண்டைக்காய் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி மொறுமொறுன்னு சிப்ஸ் செஞ்சு சாப்பிடுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க புரியாத புதிராக இருப்பார்களாம்... இவங்கள யாராலும் புரிஞ்சிக்க முடியாதாம்...! -
மீன ராசியில் அரிய சனி-செவ்வாய் சேர்க்கை: ஏப்ரலில் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
4 முட்டையும், ஒரு உருளைக்கிழங்கும் இருந்தா இப்படி முட்டை அவியலை செய்யுங்க...டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்...! -
ரம்ஜான் ஸ்பெஷல் ஆப்கானி மட்டன் - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
தங்கம் விலை: ஒரு சவரன் ரூ.1.25 லட்சமா? – உலக தங்க கவுன்சில் வெளியிட்ட மேஜர் வார்னிங்!!
2025 ஆம் ஆண்டில் எதிர்பாராத விதமாக தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டுமே முதலீட்டாளர்களுக்கு பெரிய அளவில் லாபம் தந்தது . 2026 ஆம் ஆண்டிலும் இந்த ஆண்டு போலவே தங்கத்தின் விலை உயருமா என்ற எதிர்பார்ப்பு மிகப் பரவலாக இருந்திருக்கிறது .
உலக தங்க கவுன்சில் 2026 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை எந்த உச்சம் வரை தொடும் என்ற கணிப்புகளை வெளியிட்டு இருக்கிறது. உலக தங்க கவுன்சில் உலகம் முழுவதும் தங்கத்தின் விலை போக்கை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் 2026 ஆம் ஆண்டுக்கான தங்கம் விலை குறித்த கணிப்பை வெளியிட்டு இருக்கிறது . தற்போது பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் வட்டி குறைப்பு நடவடிக்கையை கையில் எடுத்திருக்கின்றன. இதன் காரணமாக பத்திரங்களில் கிடைக்கக்கூடிய லாபம் குறைந்துவிட்டது என தங்க கவுன்சில் அறிக்கை கூறுகிறது.

எனவே பத்திரங்களில் முதலீடு செய்தவர்கள் அந்த பணத்தை தங்கத்தை நோக்கி தான் திருப்புவார்கள் என தெரிவித்துள்ளது. அதேபோல புவிசார பதட்டங்கள் முழுமையாக தணியவில்லை எப்போது வேண்டுமானாலும் அவை மீண்டும் வரலாம். அதேபோல அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் திடீரென தன்னுடைய வர்த்தக கொள்கைகளை மாற்றிக் கொள்கிறார் . 2026 ஆம் ஆண்டில் அவர் எப்படிப்பட்ட வர்த்தக கொள்கைகளை பின்பற்றுவார் என்பதை நம்மால் கணிக்க முடியாது .
இவை அனைத்துமே தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணமாக இருக்கின்றன என கூறி இருக்கும் தங்க கவுன்சில் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கத்தை வாங்கும் போக்கை அதிகப்படுத்தி இருக்கின்றன , மத்திய நாடுகளின் வங்கிகளில் தங்கத்திற்கான டிமாண்ட் இன்னும் குறையவே இல்லை என கூறுகிறது.
தங்க நகைகளை பாதுகாக்க இப்படி ஒரு வழி இருக்கா?? இனிமே திருட்டு பயமே தேவையில்லை!!
2026 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை தற்போதைய நிலையிலிருந்து 15 முதல் 30 சதவீதம் வரை உயரும் என உலக தங்க கவுன்சிலின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. தங்கத்தின் விலை தற்போதைய விலையில் இருந்து 15 முதல் 30 சதவீதம் வரை உயரும் என வைத்துக் கொள்வோம் . சென்னையில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் 96,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதில் 15% என்றால் கூடுதலாக 1,10,400 ரூபாய் என தங்கத்தின் விலை உயரும் .
உலக தங்க கவுன்சில் தங்கத்தின் விலை அதிகபட்ச அதிகபட்சமாக 30 சதவீதம் வரை உயரும் என தெரிவிக்கிறது. அப்படி வைத்து நாம் கணக்கிடும்போது இன்றைய விலையோடு பார்த்தால் ஒரு சவரன் தங்கம் 28 ஆயிரத்து 800 ரூபாய் விலை உயரும். அந்த வகையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 1, 24,800 ரூபாயாக உயரும்.
தங்கம் வாங்கும் போதே லாபம் பார்க்கணுமா? இந்த இரண்டு ஆப்ஷன் தான் பெஸ்ட்!!
ஒரு கிராம் தங்கத்தின் விலை என பார்க்கும் போது 30% என்ற 15,000 ரூபாயை கடந்து விடும். தங்கம் விலை அடுத்த ஆண்டு நிச்சயம் உயரும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் இந்த ஆண்டை போல 60% வரை விலை உயருமா என்ற அச்சம் தான் சாமானிய மக்களிடம் இருக்கிறது. தற்போதைக்கு பல அமைப்புகளும் வங்கிகளும் வெளியிடும் கணிப்புகள் 30% வரை விலை உயரலாம் என தெரிவிக்கிறது.
Credit: Goodreturns



Click it and Unblock the Notifications












