Gold rate today: ஒரே அடியாக சரியும் தங்கம் விலை.. தொடர்ந்து 4-வது நாளாக குறைந்தது.. நகை பிரியர்கள் ஹேப்பி

By Mani Singh S

சென்னை: கடந்த மாதம் உச்சம் தொட்டிருந்த தங்கம் விலை தற்போது சற்று குறைந்துள்ளது. இடையில் சற்று விலை உயர்ந்தாலும் கடந்த 3 நாட்களாகவே தொடர்ந்து தங்கம் விலை சரிந்து வருகிறது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக சரிந்துள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் சவரனுக்கு ரூ.1,120 குறைந்துள்ளது. தொடர்ந்து 4-வது நாளாக இன்றைக்கும் தங்கம் விலை குறைந்துள்ளது.

தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இன்று சென்னையில் ஒரு சவரன் தங்கம் என்ன ரேட்டில் விற்கப்படுகிறது என்றும் கடந்த சில நாட்களாக தங்கம் விலை எவ்வளவு இருந்தது என்ற விவரங்களையும் இங்கே விரிவாக பார்க்கலாம்.


gold price Chennai gold

தங்கம் விலை

தங்கத்தை நகைகளாக மட்டும் பார்க்காமல் அதனை ஒரு முதலீடாகவும் பார்ப்பதால் பலருக்கும் தங்கம் மீது அலாதி பிரியம் இருந்து வருகிறது. பெண்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டாலும் சரி, குழந்தைகள் பிறந்தாலும் சரி தங்க நகைகளை வாங்கி அணிவித்து மகிழ்ந்து வருகிறார்கள்.

சென்னை ஓஎஸ்சி சேவை மையத்தில் வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்! சூப்பர் சான்ஸ்

இல்லத்தரசிகளின் ஆபரணமாக மட்டும் இன்றி முக்கிய நேரத்தில் பணத் தேவைக்கும் தங்கம் சிறந்த முதலீடாக இருந்து வருவதால் பலரும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் தங்கம் விலை முன்பு போல் இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தங்கம் ஒரு சவரன் இருந்த ரேட்டுக்கு இப்போது அதில் கால் வாசி கூட வாங்க முடியாது.

4 வது நாளாக விலை குறைந்தது

அந்த அளவுக்கு தங்கம் விலையானது உச்சம் தொட்டுள்ளது. கடந்த 10 மாதங்களில் மட்டும் தங்கம் விலையானது சவரனுக்கு 40 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது. அதாவது கடந்த ஜனவரி 1 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் கடந்த மாதம் 17 ஆம் தேதி கிட்டத்தட்ட ரூ.40 ஆயிரம் அதிகரித்து ரூ.97 ஆயிரத்தை தாண்டியது.

அதன்பிறகு கடந்த சில நாட்களாகவே தங்கம் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. திடீரென ஏறுவதும், பின்னர் இறங்குவதுமாக இருந்து வருகிறது. இதிலும் குறிப்பாக கடந்த 3 நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று சென்னையில் ஒரு சவரன் தங்கமானது ரூ.92,320- க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ. ரூ.11,540-க்கு விற்பனை செய்யப்பட்டது. 3 நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் இன்று 4 வது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது.

Kilambakkam: கிளாம்பாக்கம் பயணிகள் எதிர்பார்த்த அந்த நல்ல செய்தி.. மேஜர் பணிகள் ஓவர்! ரயில் நிலையம் திறப்பு எப்போது?

இன்றும் சவரனுக்கு ரூ.1,120 குறைந்தது

இன்று ஒரே நாளில் தங்கம் விலையானது சவரனுக்கு ரூ.1,120 குறைந்தது. சென்னையில் ஒரு சவரன் தஙக்ம் விலை ரூ.1,120 குறைந்து ரூ.91,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் இன்று ரூ.140 குறைந்து ரூ.11,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து தங்கம் விலை சரிந்து வருவதால் நகை பிரியர்கள் சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வெள்ளி விலை என்ன?

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் தினம் தினம் உச்சம் தொட்டது. இதுவரை இல்லாத அளவாக ஒரு கிராம் ரூ.180 ஐ தாண்டி விற்பனை ஆனது. இதனால் வெள்ளி மீது பலரது கவனமும் திரும்பியது. இந்த சூழலில் கடந்த 3 நாட்களாக வெள்ளியின் விலையும் குறைந்து வருகிறது.

கடந்த 3 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.8 குறைந்து ஒரு கிராம் வெள்ளி சென்னையில் நேற்று முன் தினம் ரூ.175-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்றும் ஒரு கிராம் வெள்ளி ரூ.2 குறைந்து ரூ.173-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தஙக்த்தை போலவே வெள்ளி விலையும் இன்று குறைந்தது. ஒரு கிராம் வெள்ளி ரூ.3 குறைந்து ரூ.170-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை.. மாதம் 1.20 லட்சம் சம்பளம்! யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்?


கடந்த சில நாட்களின் தங்கம் விலை நிலவரம்:

18.11.2025 - ஒரு சவரன் ரூ.91,200 (இன்று)
17.11.2025 - ஒரு சவரன் ரூ.92,320 (நேற்று)
16.11.2025 - ஒரு சவரன் ரூ.92,400
15.11.2025 - ஒரு சவரன் ரூ.92,400
14.11.2025 - ஒரு சவரன் ரூ.93,920
14.11.2025 - ஒரு சவரன் ரூ.94,720
13.11.2025 - ஒரு சவரன் ரூ.95,200
12.11.2025 - ஒரு சவரன் ரூ.92,800
11.11.2025 - ஒரு சவரன் ரூ.93,600
10.11.2025 - ஒரு சவரன் ரூ.91,840
09.11.2025 - ஒரு சவரன் ரூ.90,400
08.11.2025 - ஒரு சவரன் ரூ.90,400
07.11.2025 - ஒரு சவரன் ரூ.90,160
06.11.2025 - ஒரு சவரன் ரூ.90,560
06.11.2025 - ஒரு சவரன் ரூ.90,000
05.11.2025 - ஒரு சவரன் ரூ.89,440
04.11.2025 - ஒரு சவரன் ரூ.90,000
03.11.2025- ஒரு சவரன் ரூ.90,800
02.11.2025- ஒரு சவரன் ரூ.90,480
01.11.2025- ஒரு சவரன் ரூ.90,480
31.10.2025- ஒரு சவரன் ரூ.90,400
30.10.2025- ஒரு சவரன் ரூ.90,400
29.10.2025- ஒரு சவரன் ரூ.90,600
28.10.2025- ஒரு சவரன் ரூ.88,600
27.10.2025- ஒரு சவரன் ரூ.91,600
26.10.2025- ஒரு சவரன்: ரூ.92,000
25.10.2025- ஒரு சவரன்: ரூ.92,000
24.10.2025- ஒரு சவரன் ரூ.92,320
23.10.2025- ஒரு சவரன் ரூ.92,000
22.10.2025- ஒரு சவரன் ரூ.92,000
21.10.2025 - ஒரு சவரன் ரூ.92,320
21.10.2025 - ஒரு சவரன் ரூ.93,600
20.10.2025- ஒரு சவரன் ரூ.96,000
19.10.2025 - ஒரு சவரன் ரூ.95,360
18.10.2025 - ஒரு சவரன் ரூ.96,000
17.10.2025- ஒரு சவரன் ரூ.97,600
16.10.2025 - ஒரு சவரன் ரூ.95,200
15.10.2025 - ஒரு சவரன் ரூ.94,880
14.10.2025 - ஒரு சவரன் ரூ.94,600
13.10.2025 - ஒரு சவரன் ரூ.92,640
13.10.2025 - ஒரு சவரன் ரூ.92,200
12.10.2025 - ஒரு சவரன் ரூ.92,000
11.10.2025 - ஒரு சவரன் ரூ.92,000
11.10.2025 - ஒரு சவரன் ரூ.91,400
09.10.2025 - ஒரு சவரன் ரூ.91,400
09.10.2025 - ஒரு சவரன் ரூ.91,200
08.10.2025 - ஒரு சவரன் ரூ.91,080
08.10.2025 - ஒரு சவரன் ரூ.90,400
07.10.2025 - ஒரு சவரன் ரூ.89,600
06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000
06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000
05.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600
04.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600
03.10.2025 - ஒரு சவரன் ரூ.87,200
03.10.2025 - ஒரு சவரன் ரூ 86,720
02.10.2025 - ஒரு சவரன் ரூ 87,600
02.10.2025 - ஒரு சவரன் ரூ 87,040
01.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600
01.10.2025 - ஒரு சவரன் ரூ.87,120
30.09.2025 - ஒரு சவரன் ரூ. 86,880.

Credit: Oneindia

Desktop Bottom Promotion