Latest Updates
-
வெண்டைக்காயை இப்படி கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடலினுள் என்ன நடக்கும்? - விளக்கும் டாக்டர்! -
சிம்ம ராசியில் இருக்கும் கேதுவால் டிசம்பர் மாதத்திற்குள் இந்த 4 ராசிக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்காம்.. -
ரவா அடையும், ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 31 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் மாதத்தில் உதயமாகும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு கடன் தொல்லை நீங்கி பண வரவு அதிகரிக்கும்! -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் கோதுமை ரவா பாசிப்பருப்பு பாயாசம் - எப்படி செய்யணும் தெரியுமா? -
தலைமுடி உதிர்வை தடுக்கணுமா? அப்ப நம்ம பாட்டிமார்கள் பின்பற்றிய இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க வாழ்வில் பிரச்சனை புயல் வீசப்போகுது.. -
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா?
தங்கம் விலை.. சென்னையில் நகை வாங்கும் இல்லதரசிகளுக்கு இனிப்பான செய்தி.. ஒரே நாளில் நல்ல மாற்றம்
சென்னை: கடந்த டிசம்பர் 15ம் தேதி தங்கம் விலை வரலாறு காணாத உச்சமாக ஒரு லட்சத்து 120 ரூபாய் என்று இருந்தது. அடுத்த நாளான டிசம்பர் 16ம் தேதி அதிரடியாக குறைந்து 98 ஆயிரத்து 800 ஆக சரிந்துள்ளது.கடந்த 16ம் தேதி 99 ஆயிரத்து 200 என்கிற அளவில் உயர்ந்த தங்கம், டிசம்பர் 18ம் தேதியான நேற்று 99 ஆயிரத்து 520 என்கிற அளவில் மீண்டும் உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் 12 ஆயிரத்து 440 ஆக நேற்று சென்னையில் விற்பனையானது. தங்கம் விலை இன்று அதிரடியாக சரிந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்துள்ளது.
தங்கம் விலை கடந்த ஆண்டு யார் வாங்கியிருந்தாலும் இன்று ஜாக்பாட் என்கிற அளவிற்கு உயர்ந்து நிற்கிறது. ஓராண்டில் சுமார் 75 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையேயான போர், இஸ்ரேல் பாலஸ்தீனம் போர், அமெரிக்கா சீனா இடையே வரி மோதல், இந்தியாவிற்கு அமெரிக்கா விதித்த 50 சதவீத வரி என புவிசார் பதற்றங்கள் காரணமாக தங்கம் விலை அதிகரிக்க தொடங்கியது.

இது ஒருபுறம் எனில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையான சரிந்து வந்த காரணத்தாலும் தங்கம் விலை தாறுமாறாக உயரத்தொடங்கியது. 96 ஆயிரம் என்று நிலைபெற்றிருந்த தங்கம் விலை, இடையில் சட்டென் சரிந்து 89 ஆயிரம் என்கிற அளவிற்கு கடந்த மாதம் வந்தது. ஆனால் மத்திய பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்ததன் விளைவுதான் கடந்த ஒரு வாரமாக தங்கம் ஏற்றத்த்தை சந்தித்து வருகிறது.
இதன் விளைவாக கடந்த 12-ந்தேதியில் இருந்து அதன் விலை தாறுமாறாக ஏற்றம் கண்டது. கடந்த 11-ந்தேதி ஒரு சவரன் ரூ.96,400 என்று இருந்த நிலையில், 12-ந்தேதி ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.98 ஆயிரத்து 960-க்கு விற்பனை ஆனது.
ஒரு பவுனுக்கு கீழ் மற்றும் ஒரு பவுனுக்கு மேல் தங்க நகை வைத்துள்ளவர்கள் அறிய வேண்டிய அடகு ரூல்ஸ்
இதன் தொடர்ச்சியாக டிசம்பர் 15ம் தேதி மட்டும் சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 120-க்கு விற்றது. இதன் மூலம் தங்கம் இமாலய உச்சத்தை தொட்டது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் விலை உயர்ந்த போதே தங்க வியாபாரிகள் ஆண்டு இறுதிக்குள் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டிவிடும் என்று கூறினார்கள். அது கடந்த டிசம்பர் 15ம் தேதி உறுதியானது.
கோவை வஉசி பூங்காவில் பிரம்மாண்டமாக அமையும் 2 நீச்சல் குளங்கள்.. ஆணையர் குட்நியூஸ்
ஆனால் அடுத்த நாளான டிசம்பர் 16ம் தேதி சவரனுக்க 1320 ரூபாய் அதிரடியாக குறைந்து 98 ஆயிரத்து 800 ஆக சரிந்துள்ளது.கடந்த 16ம் தேதி சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து 99 ஆயிரத்து 200 என்கிற அளவில் உயர்ந்த தங்கம், டிசம்பர் 18ம் தேதியான நேற்று சவரனுக்கு 320 ரூபாய் உயரந்து, 99 ஆயிரத்து 520 என்கிற அளவில் நேற்று விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் 12 ஆயிரத்து 440 ஆக நேற்று சென்னையில் விற்பனையானது. தங்கம் விலை டிசம்பர் 19ம் தேதியான இன்று சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 99040 ஆக விற்பனையாகிறது. ஒரு கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து 12 ஆயிரத்து 350க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு மூன்று ரூபாய் குறைந்து 221 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிலோ வெள்ளி 221,000க்கு விற்பனையாகிறது.
Credit: Oneindia



Click it and Unblock the Notifications