Latest Updates
-
பங்குனி மாத ராசி பலன் 2026 - இந்த ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...!
பரமபதத்துல பாம்பு கொத்துன மாதிரி சரியும் தங்கம், வெள்ளி விலை!! இனி ஏணி வருமா இல்ல பாம்பு தானா?
தங்கம், வெள்ளியின் வரலாற்று உச்சபட்ச விலையை கண்டு கடந்த வாரம் எல்லாம் அதிர்ச்சியுடன் பேசி கொண்டிருந்த மக்கள் இப்போது விலை குறைவை கண்டு வாயடைத்து போயுள்ளனர். கடந்த வாரம் உலக சந்தையிலும், உள்ளூர் சந்தையிலும் தங்கம் வெள்ளியின் விலை வரலாற்று உச்சத்தை தொட்டது. ஆனால் அதை விட வேகமாக இப்போது சரிகிறது.
இவை அனைத்திற்குமே சர்வதேச சூழல்கள் தான் காரணமாக இருக்கின்றன. அமெரிக்க அதிபர் டிரம்ப் எந்த ஒரு வர்த்தக மோதலையும் ஏற்படுத்தாமல் கடந்த ஒரு வார காலமாக அமைதியாக இருக்கிறார். புவிசார் பதற்றங்களும் எதுவும் இல்லை. ஈரான் அமெரிக்கா விவகாரமும் தணிந்திருக்கிறது. இது தவிர அமெரிக்க மத்திய வங்கியின் தலைவராக கெவின் வார்ஷ் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இவர் அமெரிக்க டாலரை வலுவடைய செய்யும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுவார் என்ற நம்பிக்கை முதலீட்டாளர்கள் மத்தியில் வந்திருக்கிறது.

இதனால் தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றில் செய்த முதலீடுகளை எடுத்து பங்குச்சந்தை மற்றும் பத்திரங்களில் முதலீடு செய்ய தொடங்கியிருக்கிறார்கள் முதலீட்டாளர்கள். ஒட்டுமொத்தமாக இது உலக சந்தையிலேயே தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சர்வதேச சந்தையில் ஸ்பாட் கோல்டின் விலை ஒரு அவுன்ஸ் 367 டாலர்கள் அதாவது 7.5 சதவீதம் குறைந்து 4525 டாலர்களாக இருக்கிறது. ஜனவரி 29ஆம் தேதி அன்று உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5300 டாலர்களுக்கும் மேல் எட்டியது.
வரலாற்று உச்சத்தில் இருந்து தங்கம் விலை நான்கே நாட்களில் வீழ்ச்சி அடைந்துள்ளது. வெள்ளியின் விலை 10% குறைந்து 76 டாலர்கள் என்ற விலையில் வர்த்தகமாகிறது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 110 டாலர்களுக்கு மேல் சென்ற நிலையில் இன்றைய தினம் அதன் விலை 76 டாலர்களாக இருக்கிறது.
உலக சந்தையில் தங்கம், வெள்ளி விலை சரிந்திருப்பது இந்தியாவில் சில்லறை வர்த்தகத்திலும் எம்சிஎக்ஸ் வர்த்தகத்திலும் தங்கம், வெள்ளி விலையை குறைக்க செய்துள்ளது. எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் இன்றைய தினம் 10 கிராம் தங்கத்தின் விலை அதிகபட்சமாக 1,47,047 ரூபாய் என்ற உச்சத்தை எட்டி தற்போது 1,39,590 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது.
தங்கம், வெள்ளி விலை: வரலாற்றில் இல்லாத சரிவு..! எல்லாம் 950 செய்யும் மேஜிக்..!
நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது இன்று சுமார் 6000 ரூபாய் செலவில் தான் வர்த்தகமே தொடங்கியது. தற்போதும் தங்கத்தின் விலை சரிவில் தான் இருந்து வருகிறது. அதேபோல ஒரு கிலோ வெள்ளி விலை பெருமளவு சரிந்திருக்கிறது mcx வர்த்தகத்தில் ஒரு கிலோ வெள்ளி இன்று 2,33,774 ரூபாய் என பெரிய அளவில் சரிந்து இருக்கிறது. வர்த்தகத்தை தொடங்கும் போதே வெள்ளியின் விலை சுமார் 31 ஆயிரம் ரூபாய் சரிவில் தான் தொடங்கியது. 12 சதவீதத்திற்கும் மேல் வெள்ளியின் விலை என்பது குறைந்திருக்கிறது.
இண்டஸ் இண்ட் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் திரிவேதி அமெரிக்க டாலர் வலுவடைந்து வருவதும், அமெரிக்காவில் பத்திரங்களில் கிடைக்கும் லாபம் அதிகரித்திருப்பதுமே தங்கம், வெள்ளி விலை குறைவுக்கு முக்கிய காரணம் என கூறுகிறார். இந்த விலை குறைவை வாய்ப்பாக பார்க்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
சென்னையில் சில்லறை வர்த்தகத்திலும் 4 நாட்களிலேயே ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 22,800 ரூபாய் சரிந்து1,34,000 ரூபாய் என்ற வரலாற்று உச்சத்தில் இருந்து 1,11,000 ரூபாய் என சரிந்துள்ளது. வெள்ளி விலை ஒரு கிலோ 4.25 லட்சத்தில் இருந்து 1.25 லட்சம் என பெருமளவில் சரிந்து 3 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
மேற்கொண்டு அமெரிக்க அதிபர் எந்த நாட்டுடனும் வம்புக்கு செல்லாமல் மவுனமாக இருக்கிறார், புதிதாக எங்கும் புவி சார் பதற்றங்கள் ஏற்படவில்லை, ஏற்கனவே இருக்கும் மோதல்கள் மீண்டும் தலைதூக்காமல் இருக்கின்றன எனும் போது நிச்சயம் தங்கம், வெள்ளி விலை மேலும் குறையும் என சொல்லப்படுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
Credit: Goodreturns



Click it and Unblock the Notifications











