Latest Updates
-
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
செட்டிநாடு பாகற்காய் சாம்பார் ரெசிபி - இந்த மாதிரி வைச்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட ஆசையா சாப்பிடுவாங்க -
இந்தியாவில் அதிக கட்டணம் வசூலிக்கும் டாப் 5 சுங்கச்சாவடிகள் என்னென்ன தெரியுமா? -
சத்தான மீல் மேக்கர் கட்லெட் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மொறுமொறுனு சாப்பிட சூப்பரா இருக்கும் -
ஆகஸ்ட் 05-ல் புதன் கடக ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தாபா ஸ்டைல் முட்டை பட்டாணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
Commonwealth Games 2026: காமன்வெல்த் போட்டிகளுக்கும், ஒலிம்பிக் போட்டிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன? -
பீர்க்கங்காய் தக்காளி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டும் நாளாக இருக்குமாம் -
56 ஆண்டுகளுக்கு பின் குரு பூர்ணிமா நாளில் உருவாகும் 3 ராஜயோகங்கள்: அதிர்ஷ்ட மழையில் நனையும் 3 ராசிகள்!
ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம், வெள்ளி: வார இறுதி நாளில் வேலையை காட்டியதால் அதிர்ச்சி!!
தொடர்ந்து இரண்டு நாட்களாக குறைந்து வந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்றைய தினம் உயர்ந்து இருக்கிறது. வார இறுதி நாளான சனிக்கிழமை ஆன இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்திருப்பதால் நாளைய தினமும் இதே விலைக்கு தான் விற்பனையாகும்.
சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 14,250 ரூபாய்க்கு விற்பனையாளது. அதுவே இன்றைய தினம் 170 ரூபாய் விலை உயர்ந்து 14,420 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் பொருத்தவரை நேற்று 1, 14,000 ரூபாய்க்கு விற்பனையானது அதுவே இன்று 1360 ரூபாய் உயர்ந்து 1,15,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராம் தங்கம் 1700 ரூபாய் விலை உயர்வு கண்டு 1,44,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை திங்கட்கிழமை தொடங்கி இன்று வரையிலான இந்த ஆறு வர்த்தக நாட்களில் மூன்று நாட்கள் விலை சரிந்து இருக்கிறது, மூன்று நாட்கள் விலை உயர்ந்திருக்கிறது. தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருப்பதையே இந்த இந்த வார விலை நிலவரங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 185 ரூபாய் உயர்ந்து 15,731 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,480 ரூபாய் உயர்ந்து 1, 28,848 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கம் விலை 150 ரூபாய் உயர்வு கண்டு 12,350 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1200 ரூபாய் விலை உயர்ந்து 98,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்க சந்தையே தலைகீழா மாறி இருக்கு..!! முதலீட்டாளர்களே உஷார்..!! எச்சரிக்கும் நிபுணர்..!!
தொடர்ந்து இறங்கு முகமாக இருந்து வந்த வெள்ளி இன்று தடாலடியாக விலை உயர்ந்திருக்கிறது. நேற்று 280 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் வெள்ளி இன்று ஐந்து ரூபாய் உயர்ந்து 285 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. திங்கட்கிழமை தொடங்கி இன்று வரையிலான ஆறு வர்த்தக நாட்களில் மூன்று நாட்கள் வெள்ளியின் விலை குறைந்திருக்கிறது , இரண்டு நாட்கள் உயர்ந்திருக்கிறது, ஒரு நாள் விலை மாறவில்லை.
தங்கம் விலையை பத்தி கவலைப்படாதீங்க..! இத ஃபாலோ பண்ணா உங்க பணம் பெருகும்- முகேஷ் அம்பானி அறிவுரை
தங்கம், வெள்ளி ஆகிய இரண்டுமே தற்போது அதிக ஏற்ற இறக்கம் என்ற நிலையிலேயே இருக்கின்றன. உலக அளவில் காணப்படும் பல்வேறு அரசியல் சூழல்களே இதற்கு முக்கிய காரணம் .து மேற்கொண்டு இந்த வார இறுதி நாட்களில் எந்த ஒரு புவிசார் பதற்றமோ , வர்த்தக ரீதியிலான மோதல்களோ ஏற்படாமல் இருக்கும் பட்சத்தில் தங்கம் மற்றும் வெள்ளி பெரிய அளவில் உயராமல் இதே அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
இருந்தாலும் தங்கம் விலை குறையும்போதெல்லாம் மேலும் குறையும் என காத்திருக்காமல் அந்த வாய்ப்பினை பயன்படுத்தி வாங்கி கொள்வதுதான் சிறந்தது இல்லை என்றால் திடீரென விலை உயர்ந்து அதனை நினைத்து வருத்தப்பட வேண்டியிருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
Credit: Goodreturns



Click it and Unblock the Notifications