Latest Updates
-
சுக்கிரன் மேஷ ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் பெரிய வெங்காயம் இருந்தா 10 நிமிடத்தில் இந்த சட்னியை அரைங்க... இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்! -
Tamil Nadu Election 2026: தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்கள் உள்ள டாப் 5 மாவட்டங்கள் என்னென்ன தெரியுமா? -
ஆந்திரா முட்டை புலுசு ரெசிபி... இதை ஒருதடவை செஞ்சு பாருங்க... சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும்...! -
புதன் நேரடி இயக்கத்தை தொடங்குவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
காரசாரமான கேரளா ஸ்டைல் ஈஸி பெப்பர் சிக்கன் ரெசிபி... இப்படி செஞ்சு பாருங்க... வேற லெவல் சைடிஷா இருக்கும்...! -
கள்ளக்காதலில் ஈடுபட அதிக வாய்ப்புள்ள 4 ராசிகள் இவங்கதான்... இவங்ககிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருங்க...! -
காரசாரமான.. ஹைதராபாதி சிக்கன் கிரேவி - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நல்ல நேரம் தேடிவருமாம்...! -
வார ராசிபலன் (22 March 2026-28 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கும்..
அரிசி அட்டைதாரர்களுக்கு ஹேப்பி.. வரும் மாதம் முன்கூட்டியே வீடு தேடி வருகிறது ரேஷன் பொருட்கள்.. ஏன்?
சென்னை: முதியோரின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் பணியை, இந்த அக்டோர் மாதம் 5 மற்றும் 6ம் தேதிகளில் மேற்கொள்ளுமாறு, மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டிருந்த நிலையில், மீண்டும் ஒரு மகிழ்ச்சி தற்போது வெளியாகியிருக்கிறது. இது அரிசி அட்டைதாரர்களுக்கு நம்பிக்கையையும், நிம்மதியையும் தந்து வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் தாயுமானவர் திட்டத்தின்கீழ், சென்னையில் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை மட்டுமே அடிப்படையாக கொண்ட குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று, ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.

ரேஷன் அட்டைதாரர்கள்
அந்தவகையில், 21.70 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களின் வீடுகளுக்கு, மாதந்தோறும் 2வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
இப்பொருட்களை விநியோகம் செய்வதற்காகவே வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, அவைகளில் வைத்து, ரேஷன் பொருட்களை ஊழியர்கள் எடுத்து சென்று விநியோகித்து வருகிறார்கள். இப்பணியில், மாதந்தோறும் 2வது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ரேஷன் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல், இந்த ரேஷன் பொருட்களின் விநியோக தேதி எப்போது என்று, அந்தந்த ரேஷன் கடைகளின் அறிவிப்பு பலகையிலிருந்தே குடும்ப அட்டைதாரர்கள் அறிந்து கொள்ளலாம். இந்த அக்டோபர் மாதம் தீபாவளி வந்ததால், 5, 6ஆம் தேதிகளில் பொருட்கள் முதியோர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டிருந்தது, பேருதவியாக அவர்களுக்கு அமைந்தது நினைவிருக்கலாம்.
முன்கூட்டியே ரேசன் பொருட்கள்
இப்போது அதுபோலவே மீண்டும் ஒரு மகிழ்ச்சி செய்தி வெளியாகியிருக்கிறது.. வடகிழக்கு பருவமழை சீசன் துவங்கியுள்ளதால், பல மாவட்டங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது.. எனவே, அடுத்த மாதம் முதல் வாரத்திலேயே, அதாவது, 3, 4ம் தேதிகளிலேயே வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கும் பணியை மேற்கொள்ளுமாறு, மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.
இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தநிலையில், இம்மாதம் முன்கூட்டியே ரேஷன் பொருட்கள் கிடைப்பது முதியோர்களுக்கு கூடுதல் பலனை தரும் என்று நம்பப்படுகிறது.
தேனியில் புலம்பும் ரேஷன் விற்பனையாளர்கள்
இதனிடையே ரேஷன் கடைகளுக்கு எடைகுறைவாக அனுப்பப்படுவதை தவிர்க்க நுகர்பொருள் வாணிப கழக, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
காரணம், ரேஷன் கடைகளில் பிஓஎஸ் கருவிகளில் பதிவு செய்து உணவுப்பொருட்கள் கார்டுதார்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், சில மாதங்களாகவே இந்த கருவியுடன் எடை இயந்திரமும் இணைக்கப்பட்டு உணவுப்பொருட்கள் வழங்கப்படுகிறது. அந்த பொருட்களின் அளவும், ரசீதில் குறிக்கப்படுகிறது.
எனினும், உணவுப்பொருட்கள் சரியான அளவில் வழங்கினாலும் ரேஷன்கடைகளுக்கு பொருட்கள் சரியான அளவில் வருவதில்லை என்று விற்பனையாளர்கள் தேனி மாவட்டத்தில் விற்பனையாளர்கள் நொந்து சொல்கிறார்கள்..
எடை குறைகிறதே எப்படி?
அதாவது, குடோன்களில் இருந்து கொண்டு வரப்படும் பொருட்கள் மறு எடையிட்டு வேறுசாக்கில் மாற்றி அந்த மாதத்திற்கான கலர் நூல் கொண்டு மூடையை தைக்க வேண்டும்... இந்த மூடைகளைதான் ரேஷன் கடைகளுக்கும் அனுப்ப வேண்டும். ஆனால் மறு எடையிடாமல் குடோன்களுக்கு வரும் மூடைகளை அப்படியே கடைகளுக்கு அனுப்புவிடுகிறார்களாம்..
அரிசி, பருப்பு போன்றவை சாக்கு எடையுடன் 50.650 கிலோ கிராம் இருக்க வேண்டும். ஆனால் சாக்குடன் 46 முதல் 48 கிலோ மட்டும் இருக்கிறதாம்.. சர்க்கரை, துவரம் பருப்பு 4 கிலோ வரை குறைவாக அனுப்பப்படுகிறதாம். இப்படி எடைகுறைவாக அனுப்பபடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
Credit: Oneindia



Click it and Unblock the Notifications











