Latest Updates
-
August 2026 Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
காரசாரமான பன்னீர் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
தலைமுடி வறண்டு பிரஷ் மாதிரி இருக்கா? அப்ப இந்த வாழைப்பழ ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
ஆகஸ்ட் மாதம் நிகழும் ஆண்டின் 2-வது சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
வெண்டைக்காயை இப்படி கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடலினுள் என்ன நடக்கும்? - விளக்கும் டாக்டர்! -
சிம்ம ராசியில் இருக்கும் கேதுவால் டிசம்பர் மாதத்திற்குள் இந்த 4 ராசிக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்காம்.. -
ரவா அடையும், ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 31 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் மாதத்தில் உதயமாகும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு கடன் தொல்லை நீங்கி பண வரவு அதிகரிக்கும்!
புது PAN கார்டு ரூல்ஸ்.. 2026 ஜனவரி 1 முதல் அமல்.. வருமான வரி, பண பரிமாற்றம், பேங்க் அக்கவுண்ட்-க்கு செக்!
பான் (PAN) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பெர்மனென்ட் அக்கவுண்ட் நம்பர் (Permanent Account Number) வைத்து இருப்பவர்களுக்கான புதிய விதிகள் (New Rules) வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சிபிடிடி (CBDT) என்கிற மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes) ஆனது - பான் நம்பரை ஆதார் உடன் இணைப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 31, 2025 என்று நிர்ணயம் செய்துள்ளது. இந்த ஆணை - வங்கி, நிதி பரிவர்த்தனைகள் மற்றும் வருமான வரி தாக்கல் ஆகிய நோக்கங்களுக்காக சிங்கிள், சரிபார்க்கப்பட்ட அடையாள அமைப்பை நிறுவுவதை நோக்கமாக கொண்டுள்ளது.

ஆக டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் பான்-ஆதார் இணைப்பை செய்து முடிப்பவர்களுக்கும் (மற்றும் ஏற்கனவே இதை செய்து முடித்து விட்டவர்களுக்கும்) 2026 ஜனவரி 1 ஆம் தேதி முதல் எந்த சிக்கலும், எந்த விதிமுறைகளும், எந்த இடையூறுகளும் இருக்காது. மறுபக்கம் பான்-ஆதார் இணைப்பை செய்யாதவர்கள் பல வகையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும்.
என்னென்ன இடையூறுகள் ஏற்படும்? சிபிடிடி உத்தரவின்படி, 2025 டிசம்பர் 31 காலக்கெடுவிற்குள் கட்டாய பான் மற்றும் ஆதார் இணைப்பு செயல்முறையை முடிக்க தவறியவர்கள் தங்கள் பான் நம்பர் (பான் கார்டு) செயலிழந்து போவதை காண்பார்கள். இதனால் பல நிதி பரிவர்த்தனைகளில் இடையூறு ஏற்படும்.
ஒரு பான் கார்டு உரிய தேதிக்குள் டிச.31 க்குள்) ஆதார் கார்டு இணைக்கப்படாவிட்டால், அது ஜனவரி 1, 2026 முதல் 'செயல்படாததாகிவிடும். செயல்படாத பான் கார்டு வைத்திருப்பவர்கள் வருமான வரி வருமானத்தை தாக்கல் செய்வதிலும், பணத்தைத் திரும்ப பெறுவதிலும், நிதி பரிவர்த்தனைகளில் இடையூறுகளையும் சந்திக்க நேரிடும்.
மேலும் - முதலீடு (investment), மீட்பு (redemption), அக்கவுண்ட் ஓப்பனிங் (account opening) மற்றும் கடன் செயலாக்கம் (loan processing) உள்ளிட்ட கேய்சி அடிப்படையிலான செயல்பாடுகளை (KYC-based activities) வங்கிகள், பரஸ்பர நிதிகள் மற்றும் பிற நிதி இடைத்தரகர்கள் நிறுத்தி வைக்கலாம்.
ஆன்லைன் வழியாக பான் மற்றும் ஆதாரை எவ்வாறு இணைப்பது? இந்திய அரசாங்கம் பான் மற்றும் ஆதார் இணைப்பு செயல்முறையை எளிமையாகவும், ஆன்லைனில் அணுகக்கூடியதாகவும் மாற்றி உள்ளது. ஒருவேளை நீங்கள் இன்னமும் உங்களுடைய பான் நம்பரை ஆதார் நம்பருடன் இணைக்கவில்லை என்றால் கீழ்வரும் படிப்படியான வழிமுறைகளை பின்பற்றவும்:
1. அதிகாரப்பூர்வ வருமான வரி மின்-தாக்கல் போர்ட்டலை (www.incometax.gov.in) அணுகவும். ஹோம் பேஜில் "குவிக் லிங்க்ஸ்" (Quick Links) என்கிற பிரிவின் கீழ் "லிங்க் ஆதார்" (Link Aadhaar) என்பதை கிளிக் செய்யவும்.
2. இப்போது உங்கள் 10 இலக்க பான், 12 இலக்க ஆதார் எண் மற்றும் உங்கள் பெயரை ஆதாரில் உள்ளதை போலவே உள்ளிடவும்.
3. உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து, சப்மிட் பட்டனை (Submit Button) கிளிக் செய்யவும். உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு ஒடிபி (OTP) அனுப்பப்படும். செயல்முறையை அங்கீகரிக்க ஒடிபி-ஐ உள்ளிடவும்.
4. வெற்றிகரமாக சமர்ப்பித்தவுடன், ஒரு உறுதிப்படுத்தல் மெசேஜ் (Confirmation message) தோன்றும். இந்த இணைப்பு செயல்முறை பொதுவாக 3 முதல் 5 வேலை நாட்களுக்குள் போர்ட்டலில் பிரதிபலிக்கும்.
5. செயல்படாத பான்-ஐ மீண்டும் செயல்படுத்த, இணைப்பு கோரிக்கையை சமர்ப்பிக்கும் முன் இ-பே வரி வசதி (e-Pay Tax facility) மூலம் ரூ.1000 கட்டணம் செலுத்த வேண்டும். உரிய செயல்முறை முடிந்ததும் பான் மீண்டும் செயல்படுத்தப்படலாம். இருப்பினும் இது நடக்க 30 நாட்கள் வரை ஆகலாம். குடிமக்கள் தங்கள் பான்-ஆதார் இணைப்பின் நிலையை உடனடியாக சரிபார்த்து, டிசம்பர் 31, 2025 க்கு முன்னர் இந்த செயல்முறையை முடிக்குமாறு வருமான வரி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
Credit: Gizbot



Click it and Unblock the Notifications