Latest Updates
-
தலைமுடி உதிர்வை தடுக்கணுமா? அப்ப நம்ம பாட்டிமார்கள் பின்பற்றிய இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க வாழ்வில் பிரச்சனை புயல் வீசப்போகுது.. -
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
அதிகாலையிலேயே அதிர்ச்சி! சேந்தமங்கலம் திமுக எம்எல்ஏ பொன்னுசாமி மாரடைப்பால் காலமானார்!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் திமுக எம்எல்ஏ பொன்னுசாமி (74) காலமானார். இன்று காலை அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அவர் சிகிச்சைக்காக அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும், அங்கு அவர் சிகிச்சைப் பலனில்லாமல் உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தவர் பொன்னுசாமி. 74 வயதான இவர், இன்று காலை உயிரிழந்தார். இன்று காலை அவர் தனது கொல்லிமலை வீட்டில் இருந்தபோது அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவரை குடும்பத்தினர் அருகே உள்ள நாமக்கல் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இருப்பினும், அங்கு அவர் சிகிச்சைப் பலனில்லாமல் பொன்னுசாமி உயிரிழந்தார். பொன்னுசாமிக்கு ஏற்கனவே இரு முறை மாரடைப்பு ஏற்பட்டு, ஆஞ்சியோ செய்யப்பட்ட நிலையில், அவர் மூன்றாவது முறையாக ஏற்பட்ட மாரடைப்பில் உயிரிழந்தார்.
ஆரம்பத்தில் அதிமுகவில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய பொன்னுசாமி, பிறகு திமுகவில் இணைந்தார். அவர் 2006, 2021 சட்டசபைத் தேர்தல்களில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Credit: Oneindia



Click it and Unblock the Notifications