2 ஓட்டு வாங்கிய அதிமுக.. 3 ஓட்டில் முடங்கிய திமுக! கேரளாவில் இருகட்சிகளும் படுதோல்வி! டெபாசிட் காலி

By Nantha Kumar R

திருவனந்தபுரம்: கேரளா உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் திமுக மற்றும் அதிமுக கட்சி வேட்பாளர்கள் தோல்வியடைந்து டெபாசிட் இழந்துள்ளனர். சில வார்டுகளில் வேட்பாளர்கள் ஒற்றை இலக்கத்தில் வாக்கு வாங்கி உள்ளனர். இருப்பினும் கேரளா உள்ளாட்சி தேர்தலில் அதிக ஓட்டுகளை வாங்கியது திமுகவா? அதிமுகவா? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

தமிழகத்தில் திமுக ஆளும் கட்சியாகவும், அதிமுக எதிர்க்கட்சியாகவும் உள்ளன. இந்நிலையில் தான் அண்டை மாநிலமான கேரளா உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுக சார்பில் வேட்பாளர்கள் களமிறங்கினர்.


dmk aiadmk kerala

இந்த தேர்தலில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்து டெபாசிட் இழந்துள்ளனர். இந்நிலையில் தான் எந்தெந்த வார்டுகளில் எவ்வளவு வாக்குகள் பெற்றனர் என்பது பற்றிய முக்கிய விபரம் வெளியாகி உள்ளது.

திமுக வேட்பாளர் பெற்ற ஓட்டுகள்

* இடுக்கி மாவட்டம் சின்னகானல் கிராம பஞ்சாயத்து வார்டு 6ல் 3 ஓட்டுகள் கிடைத்துள்ளது.
* சின்னகானல் கிராம பஞ்சாயத்து 10வது வார்டில் 19 ஓட்டு கிடைத்துள்ளது.
* தேவிகுளம் கிராம பஞ்சாயத்து 10வது வார்டில் 22 ஓட்டு கிடைத்துள்ளது.
* வண்டிபெரியார் கிராம பஞ்சாயத்து 15வது வார்டில் 57 ஓட்டு கிடைத்துள்ளது.

கேரளாவில் காங்கிரஸ் எழுச்சி.. 4 மாநகராட்சிகளில் அமோக வெற்றி.. கம்யூனிஸ்ட் ஜஸ்ட் 1.. பாஜகவும் 1

* கொல்லம் மாவட்டம் புனலூர் நகராட்சியை எடுத்து கொண்டால் கஞ்சிரமலா வார்டில் 12 ஓட்டு கிடைத்துள்ளது. அதேபோல் பேப்பர் மில் வார்டில் 29 ஓட்டு, நெடும்காயம் வார்டில் 20 ஓட்டு, முசாவரி வார்டில் 8 ஓட்டு, ஹை ஸ்கூல் வார்டில் 20 ஓட்டு, கரக்காடு வார்டில் 21 ஓட்டு தாமரபள்ளி வார்டில் 10 ஓட்டு, சல்லகோடு வார்டில் 58 ஓட்டு கிடைத்துள்ளது.

அதிமுக பெற்ற வாக்குகள்

அதேபோல் அதிமுகவை எடுத்து கொண்டால் இடுக்கி மாவட்ட பஞ்சாயத்து வார்டு 2ல் 774 ஓட்டுகளும், வார்டு 3ல் 623 ஓட்டுகளும் பெற்றுள்ளது. அதேவேளையில் தேவிகுளம் பிளாக் பஞ்சாயத்து வார்டு 11ல் 119 ஓட்டு, வார்டு 3ல் 51 ஓட்டு, வார்டு 14ல் 16 ஓட்டு, வார்டு 15ல் 18 ஓட்டுகள் கிடைத்துள்ளது.

மூணார் கிராம பஞ்சாயத்து வார்டு 13ல் 62 ஓட்டு, வார்டு 18 ல் 2ஓட்டு, மரையூர் கிராம பஞ்சாயத்து வார்டு 3ல் 12 ஓட்டு, குமுளி கிராம பஞ்சாயத்து 22ல் 39 ஓட்டு, கந்தலூர் கிராம பஞ்சாயத்து வார்டு 11ல் 11 ஓட்டு வட்டவடா கிராம பஞ்சாயத்து வார்டு 4ல் 4 ஓட்டு, சின்னகானல் கிராம பஞ்சாயத்து வார்டு 4ல் 3 ஓட்டு, சின்னகானல் கிராம பஞ்சாயத்து வார்டு 11ல் 7 ஓட்டுகள் கிடைத்துள்ளது.

குணா குகையில் விழுந்து உயிர் தப்பிய ரியல் ‛மஞ்சும்மல் பாய்ஸ்’ ஹீரோ தோல்வி.. கேரளா தேர்தலில் பரிதாபம்

பாலக்காடு மாவட்டத்தின் வடகரபதி கிராம பஞ்சாயத்து வார்டு 10ல் 93 ஓட்டுகள், வார்டு 11ல் 117 ஓட்டுகள், சோலையூர் கிராம பஞ்சாயத்து வார்டு 1ல் 54 ஓட்டு, அகலி கிராம பஞ்சாயத்து வார்டு 5ல் 26 ஓட்டுகள், திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாற்றங்கரை நகராட்சி வார்டு 14ல் 50 ஓட்டுகளை அதிமுக பெற்றுள்ளது.

டெபாசிட் காலி

இதன்மூலம் கேரளாவில் திமுகவும், அதிமுகவும் போட்டியிட்டு டெபாசிட்டை இழந்து உள்ளன. அதுமட்டுமின்றி ஓட்டு என்ற அளவில் பார்த்தால் திமுகவை விட அதிமுக அதிக ஓட்டுகளை பிடித்துள்ளது. அதேவேளையில் திமுகவை விட அதிமுக கூடுதல் இடங்களில் போட்டியிட்டுள்ளது என்பதையும் நாம் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.

Credit: Oneindia

Desktop Bottom Promotion